💙 ஓவியம் 21

6.7K 229 9
                                    

வைஷு அய்யம்

அத்தியாயம் 21

பாந்த்ரா ஏரியாவில் உள்ள அழகான ஒரு பங்களாவில் தீபன் சக்ரவர்த்தி அமர்ந்து இருந்த கார் நுழைந்தது. வீட்டுக்கு வந்து சேர அதிகாலை மூன்று மணி ஆகி விட்டது. தீபனும், கேசவும் சற்று களைத்து இருந்தாலும், உற்சாகமாக தங்களது அன்றைய நாளை திட்டமிட்டனர்.

தீபனின் இயல்பும், அவன் அணுகுமுறையும் மாறியிருப்பதை கேசவ் தன் அண்ணனிடம் சொல்ல தீபன் சிரித்துக் கொண்டான். அவனாலும் தன் வாழ்வில் ஏற்பட்ட இந்த இனிய மாற்றத்தை உணர முடிந்தது.

முன்பெல்லாம் தன் முகத்தில் இருந்த தேவையில்லாத கோபம், கடுகடுப்பு, முகச்சுளிப்பு இவையெல்லாம் மாறி இப்போது உற்சாகம், சந்தோஷம், ஈடுபாடு பெருகியதால் முன்பை விட சுலபமாக நல்ல மனநிலையுடன் வேலையை செய்ய முடிந்தது.

நித்திலாவிற்கு தீபன் அவள் தூங்கி இருந்தால் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விட்டோம் என்று குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினான்.

ஆனால் அவன் குறுந்தகவல் சென்ற அடுத்த நிமிடமே அவனுக்கு நித்திலாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

"நிது பேபி, இன்னும் தூங்கலையாடா? என் மெசேஜ்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தியா?" என்று பேசிக் கொண்டிருந்த தன் அண்ணனிடம் கேசவ், "பையா, இட்ஸ் லேட்ஹவர்; பாபி தூங்கட்டும். நீங்களும் போய் படுங்க!" என்று சொல்லிப் பார்த்தான். தன் தம்பியின் அறிவுரை எதுவும் தீபனின் காதுகளில் ஏறவில்லை. தலையை அசைத்து விட்டு தன் அறைக்குள் நுழைந்து படுக்கையில் விழுந்தான் கேசவ்.

அவளின் முகம் கண்களுக்குள் வந்தது. "நீ என்ன பண்ற? தூங்கிட்டு இருக்கியா ஹனி?" என்று கேட்டு விட்டு தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டான். (தலைவர் வெட்கப்படுறாராம்). கேசவின் நினைவலைகள் இரண்டு நாட்கள் பின்னோக்கி சென்றன.

அன்று கே.கே நகரில் ஒரு டீலரை சந்திக்க வந்தவன், அவர் வர அரை மணி நேரம் ஆகும் என்று சொன்னதால் ஒரு பேக்கரிக்குள் நுழைந்தான். வயிறு பசித்ததால் ஒரு சாக்லெட் வாஃபிளும், பைனாப்பிள் மில்க் ஷேக்கும் வாங்கிக் கொண்டு அமர்ந்து நிதானமாக சேரில் அமர்ந்து சுவைப்போம் என்று நினைத்து அவன் திரும்ப, அவனுக்கு நேர் பின்னால் நின்ற ஒரு பெண்ணின் மீது வேகமாக மோதினான்.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now