😍

909 102 43
                                    


அன்று இரவு அழகாகவே கடந்தது... அடுத்த நாள்..கரிகாலன் வெகுசீக்கிரமாய் கிளம்பி விட்டான்... கமிஷனர் ஆபீசில் இருந்து அழைப்பு... குந்தவி மாமனார் மனோகரனுடன் அவளின் மாற்றிடம் சான்றிதழ் வாங்க தயாராகி கொண்டு இருந்தாள்... மஞ்சள் தொங்கும் தாலி ் கயிறு அழகான நீல புடவையில் பெண்களே திரும்பி பார்க்கும் அளவு அழகாய் இருந்தாள்.. அவளை கண்ட அவளின் மாமியார் அவள் தலையில் அவள் கோர்த்த மல்லிகை பூவை சூடி திருஷ்டி கழித்தாள்..

மதிய வேளை வீடு வந்து சேர்ந்தனர்... "ஐயோ மாமா ஊரா இது வெயில் ஒருபக்கம் மக்கள் நிதானமே இல்லாம வண்டி ஓட்றாங்க ஓடுறாங்க மாமா பக்கத்துல இருக்குற அழகை கூட ரசிக்காம... "என்றாள் குந்தவி அவருக்கு தண்ணீர் வழங்கிய படி ..

சாரதா அறையில் இருந்து வெளியே வந்தார் "நான் சாப்பாடு செஞ்சுட்டேன் குந்தவி நீயும் மாமாவும் சாப்பிடுங்க நான் கரிகால் வந்ததும் அவனோடு சாப்புடுறேன் "என்றார்...

"சாரி அத்தை நான் வேகமா வரலாம்னு பாத்தேன் பட் டிராபிக் மாட்டிகிட்டோம்... நாளைக்கு நான் சமைக்குறேன் நீங்க இனி சமையல் அறை பக்கம் போகாதீங்க "என்றாள் உண்மையான அக்கறையோடு....

"ஹ்ம்ம் என்னடா சீரியல் மாமியார் -மருமகள் சண்டை பாக்கலாம்னு வந்தா இங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அன்பை பொழியிறீங்க "என்றபடி உள்ளே வந்தாள் ஒரு பெண் இவள் வயதில் அவளை தொடர்ந்து இன்னொரு பெண் அவளுக்கும் இவர்கள் வயது இருக்கும்....

"வாங்க வாங்க "என்றார் மனோகரன்..

"நல்லா இருக்கீங்களா அப்பா அம்மா? "என்றார்கள்...

குந்தவி முழித்து கொண்டு இருந்தாள்... சாரதாவும் மனோகரனும் மறந்தே போயினர் அவளை

மனோகரன் அவர்களுடன் பேசி சிரித்து கொண்டு "குந்தவி சாரி மா, இதுதான் அமுதன், ரவி மனைவிகள் "

சாரதா "இவ ் அமுதன் மனைவி செல்வி, அவள் ரவி மனைவி ஹேமா "என்றார்..... குந்தவி சிரித்துகொண்டு "வாங்க "என்றாள்...

வீணையடி நீ எனக்குWhere stories live. Discover now