கரிகாலன்

977 91 158
                                    

நம்ம மனசுல நினைக்குறது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம் ஆனால் அதில் கால் பங்கு கூட நடக்காது என்று தெரிந்தே செய்கிறோம்...

குந்தவி சிவா இருவரின் மனம் குணம் பற்றி பேசுனோம்...

அன்பே உருவாய் அடியே துணையாய் வாழ்பவன் கரிகாலன், தப்புன்னு நடந்தா தலைவர் முதலில் நிற்பார்... கொஞ்சம் கை நீளும் சட்டென அடித்து விடுவார்.... ஆகையால் இவன் குட்டி தாதா, தினம் தினம் குந்தவி செல்லும்  போது அவள் அறியாமல் அவளுக்கு பாதுகாப்பாய் பின் தொடர்வான், இவன் யாரு இவன் எந்த ஊரு என்ன பன்றான்? யாருக்கும் தெரியாது, தெரிந்தது ஊர்ல யாருக்கு ப்ரொப்லெம் நாலும் சார் ஆஜர் ஆயிடுவர்...

குந்தவி தெருவின் முக்கில் உள்ள குடிசை வீட்டில் கரிகாலன் வாழ்கிறான், ஒரு இரண்டு வருடமாய், அவனை பார்த்தாலே குந்தவி சிதறி ஓடி விடுவாள்.... இதுல சார் பண்ற அலப்பறை ஐயோ, 4 வாண்டு தான் இவரு பிரென்ட்ஸ்... அவனுங்கள இவன்தான் படிக்க வைக்கிறான்.... நல்லவன் ஆனால் முரடன்... குந்தவி மீது ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு...

குந்தவி வீடு

குந்தவி தன் தாயின் உடலை கிடத்தி மணியோடு அமர்ந்து இருந்தால்... தெருவில் இருந்த நல்ல உள்ளம் கொண்ட நாலு பேர் வந்தார்கள்...

அவள் வீட்டின் வாயிலில் இருந்து உள்ளே  எட்டி பார்த்த சிலர் அவளிடம் என்னமா பண்ண போற இறுதி சடங்குக்கு என்றால்..

சட்டென "சிவா மாமாவிடம் கேட்கணும் "என்றால்..

அவள் சொந்தகார மக்கள் எல்லாரும் ஒன்றாக உள்ளே வந்தனர்... அவள் சிவா மாமாவிடம் ஓட அவனின்  அப்பா "இங்க பாரு மா காசு கன்னி கேட்டு அவனை தொல்லை செய்யாத "என்றார் ஒரு  விதமான பார்வையுடன்... சிவா அவளை பார்த்தான் அழுதான்...

அதற்குள் அங்கு வேலை ஆரம்பம் ஆகி இருந்தது, அவள் சற்று பதறி முரசு கொட்டுபவர் இடம் "அன்னே உங்களுக்கு கொடுக்க பணம் இல்லை "என்றால்

"நாங்க பணம் கொடுநாளா தான் பொண்ணு வந்தோம் "என்றார்..

அங்கு பாடை காட்டுபவர் இடம் "இந்தாங்க 2000 ரூவா "என்று கொடுத்தான் கரிகாலன்...

குந்தவி அவனிடம் போய் கையை பற்றி "நீ யாரு இதை செய்ய? "

கரிகாலன் "அலோ இது கடன் அய்ய்ய் சும்மா னு நினைச்சியா ஆள பாரு "என்றான் குழந்தையாய்..

குந்தவி "ம்ம் செரி வேகமா திருப்பி கொடுத்து விடுவேன் "என்றால்..

ம்ம்ம்..... செரிங்க டீச்சர் அம்மா.... என்றான்....

சகலமும் முடிய பாடையை தூக்கினர் யாருப்பா கொல்லி வைப்பது? என்றார் அங்கு இருந்த பெரியவர்..

அவள் சிவா மாமாவை ஏக்கத்துடன் பார்க்க அவன் தந்தை அவனை இழுத்து சென்று கொண்டு இருந்தார்...

"நான் வைக்கிறேன் நான் அந்த அம்மா கிட்ட நெறய நாள் சோறு சாப்பிட்டு இருக்கேன் "என்றான் கரிகாலன் அனைவரும் தலை குனிய அவமானத்தில்...

அவனை நன்றி பொங்க கையை கூப்பி வணங்கினார்கள் சககோதரிகள்.... அவன் சட்டென திரும்பினான் வேலை பார்க்க.....

இறுதி சடங்கு முடிந்து... அந்த வீட்டில் இரு மூச்சு மட்டும் நிற்காமல் அழுது ஓய்ந்து இருந்தது.....

இரவு வர பயம் தொற்றி கொண்டது இரு கன்னி பெண்களுக்கு...

10மணி அளவில்... 5பொறுக்கி பசங்க கதவை தட்டி தொரங்க டி என்றனர்..

மணி குந்தவி மடியில் பயத்தில் முகம் புதைத்து அழுதாள்... குந்தவி பயம் அவளை மயக்க நிலைக்கு கொண்டு செல்ல தயாராக இருந்தது...

சற்று நேரத்தில் எல்லாம் அமைதியாக....

"நான் வெளிய தின்ணையில் படுத்துக்குறே பயப்படாதீங்க டீச்சர் அம்மா "என்றான் கரிகாலன்...

அவளுக்கு புரிந்து விட்டது அந்த பொறுக்கிகள் நிலைமை...

தன் தங்கையை படுக்க வைத்து தன் அம்மாவின் படம் பார்த்து "ஏன் மா உனக்கு என்ன அவசரம் இப்படி விட்டுட்டு போய்ட்டியே மா, எப்படி வாழ போறேன"இந்த குட்டி பொண்ண வச்சுட்டு என்றால் 17 வயதான தன் தங்கையை


அங்கு பெரிய வீட்ல சிவா தன் நிலை நினைத்து வருந்த...

குந்தவி எதிர் காலம் நினைத்து வருந்த...

கரிகாலன் அவளை பாதுகாப்பய் பார்த்து கொண்டான்..

சிவா கரிகாலன் இருவருள் குந்தவிக்கு பிறந்த அவன் யாரு?



தொடரும்........

இவள் வேறு  வழியில் பயணிக்க தயாராகி கொண்டு இருக்கிறாள்  உங்கள் கருத்து?.......

வீணையடி நீ எனக்குWhere stories live. Discover now