மறந்து போவோம்...

22 6 0
                                    


ஒரு நாள், இரண்டு நாட்கள்

ஓயாமல் ஓலமிட்ட மனசுகள்

ஒவ்வொன்றாய் மறந்து போவோம்...

ஓஓ...

மௌனத்திலும் மௌனம்...

நாங்கள் மறந்து போனோம்...

எங்கள் இயலாமையை நினைத்து

நொந்து போனோம்...

அறபு தேசங்களின்

பாராமுகம் நினைத்து

வெட்கித் தலைகுனிவோம்...

ஊடகச் சிங்கங்களாய் இருந்தும்

உண்மைக் குரல் எழுப்பாமல்

அநியாயமாய் மௌனம் காப்போம்...

ஓஓ...

நாங்கள் மறந்து போவோம்...

பிஞ்சுக் குழந்தைகளை

தொட்டிலில் போடாமல்

கப்றினுள் தூங்க வைத்ததை...

இளைஞர்களை சிறகு விரிக்க விடாமல்

சித்திரவதை செய்ததை...

ஓஓ...

ஒரு சிலர் நின்று பலநூறு பேருக்கு

ஜனாஸாத் தொழுகை நடத்தியதை...

உயிர் வாழ்வதற்கு அந்த மக்கள்

படுகின்ற துன்பங்களை...

அநியாயம் செய்வோரின் தாக்குதல்கள்

தொடர்ச்சியாக நடந்ததை...

ஓஓ...

நாம் அறிந்தும் மறந்து போனோம்...

நமக்கு என்ன செய்ய முடியும் என்ற

இயலாமையைச் சூடி நிற்கின்றோம்...

மறுபடி மறுபடியும்

சீக்கிரமாய் மறந்து போவோம்...

எத்தனை தடவைகள் எங்கள் 

உள்ளங்கள் உரைத்தாலும்

நாங்கள் அனைத்தையும்

மறந்து போனோம்...

ஓஓ...

இந்தக் கொடுமையான மௌனம் 

அந்த மக்களுக்கு எங்கள் ஆறுதல்...



ஓடும் குருதியிலே...Where stories live. Discover now