Sudum Nilavu Sudatha Suriyan - 29

786 92 264
                                    

சுடும் நிலவு சுடாத சூரியன் – 29

"நான் அனுப்பிய விசா அப்ளிகேஷனில் பேப்பர்ஸ் சரியில்லை, என்று ரிஜக்ட் பண்ணி திருப்பி அனுப்பிட்டாங்க. லண்டனில் இருக்கிற இந்தியன் ஹை கமிஷனை கால் பண்ண போது, அவங்க ஒழுங்கான காரணத்தை சொல்லலை. திரும்பவும் அப்ளை பண்ண போது, முதல் தடவை ரிஜக்ட் ஆனதால் ஆறு மாசம் கழிச்சு திரும்பவும் அப்ளை பண்ண சொன்னாங்க."

"அப்போ தான் வெற்றி தாத்தா என்னை பார்க்க லண்டன் வந்தார். அவர் எங்கூட அங்கே ஒரு மாசம் இருந்தார். அவரோடு பேசிட்டு இருக்கும் போது ஒரு நாள், எனக்கு தொடர்ச்சியா வந்த கனவுகளை பத்தியும், ஆழ்நிலை மயக்கத்தில் அஞ்சு வயசில் நடந்ததையும் சொன்னேன். தாத்தாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நம்ப முடியாம மயக்கமாயிட்டார். அவருக்கு ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்திருந்ததால் நான் பயந்துட்டேன். அதுக்குப் பிறகு நானும் அவரிடம் அந்த விபத்தை பத்தி பேசலை. அவரும் கேட்கலை. இந்தியா கிளம்பும் போது, அவரும் என்னை இங்கே வரவே கூடாது என்று சொல்லிட்டார்".

"ஆறு மாசம் கழிச்சு, நான் திரும்பவும் விசா அபளை பண்ணேன். அப்பவும் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. அப்போ தான் நான் இன்னொரு..." என்று சித்தார்த் சொல்லும் போதே, மித்ரனுக்கு அடுத்து அவன் என்ன சொல்ல போகிறான் என்று புரிந்து போனது. அகிலன் இங்கே பேசும் அனைத்தையும் பதிவு செய்கிறான் என்று நன்றாக தெரிந்திருந்தது. இதனால் சித்தார்த்துக்கு பின்னாளில் நிறைய பிரச்சனைகள் வருமே என்று யோசித்தபடி அகிலனை பார்த்தான்.

ஆனால் அகிலனோ சுவராசியமின்றி, "சித்தார்த், உன் கதையைக் கொஞ்சம் நிறுத்து" என சொன்னவன், நெற்றியைத் தேய்த்துக் கொண்டு, "எனக்கு தலை வலிக்குது, நாதன் அங்கிள், எனக்கு டீ கிடைக்குமா? நேத்து இங்கே சாப்பிட்ட டீ நல்லா இருந்தது" என்றான்.

திரும்பி சித்தார்த்தை, அகிலன் கூர்மையாக பார்க்க, அவன் அதற்குள் தன்னை தொகுத்து சமன்படுத்திக் கொண்டான்.

"சித்தார்த் என்னமோ சொல்லிட்டிருந்தே, ஹ்ம்ம். திரும்பவும் உன் விசா அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆயிடிச்சு, அதற்கு பிறகு என்னாச்சு?" என ஆழ்ந்த குரலில் கேட்டான்.
"நான் சுநீதி அத்தைகிட்ட இதைப் பத்தி பேசினேன். அப்போ தான் தேவன் தாத்தா, இந்தியன் ஹை கமிஷனில் எனக்கு இந்தியாவுக்கு விசா கொடுக்க கூடாது என்று சொன்னதை கேள்விபட்டேன். அதனால் வெற்றி தாத்தா அடிக்கடி என்னை லண்டனில் வந்து பார்த்துட்டுப் போவார்"

Completed - Sudum Nilavu Sudatha SuriyanWhere stories live. Discover now