Sudum Nilavu Sudatha Suriyan - 19

830 81 102
                                    

சுடும் நிலவு சுடாத சூரியன் – 19

"சசிதரன், ஐ ஆம் ரியலி இம்ப்ரெஸ்ட். உங்க பிராஸசிங் யுனிட் இவ்வளவு பெரிசாக இருக்கும் என்று எதிர்பார்க்கலை. நியு டெக்னாலாஜி யூஸ் பண்றேங்க. எல்லாமே ஆட்டோமேட் பண்ணிருக்கீங்க. கிரேட்" என புன்னகைத்தான் சித்தார்த்.

சசியின் முகத்தில் சிரிப்புடன், பெருமையும் தெரிந்தது. சசியின் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து, சேரில் அமர்ந்தனர்.

"என்ன சாப்பிடறீங்க சித்தார்த், காப்பி, ஃபிரஷ் ஜுஸ்?" என கேட்டான் சசிதரன்.
"காபி ஷுட் பி ஃபைன்" என்றான்.

பக்கத்திலிருந்த உதவியாளரிடம் சசிதரன் தலையசைக்க, அவள் வெளியே சென்றாள்.
"சசிதரன், நான் கேட்ட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் நான் கொடுத்த மெயில் அட்ரஸுக்கு அனுப்பிச்சிடுங்க. தேவ் ஃபுட்ஸின் ஆப்ரேஷன்ஸ் ஹெட், உங்களை தொடர்பு கொள்வார்" என்றான்.

"ஷ்யூர் சித்தார்த்" என்றவன், "என்னை நீங்க சசி என்றே கூப்பிடலாம்" என சிரித்தபடி சொன்னார்.

"யா சசி, யூ கேன் கால் மீ ஸிட்" என்றான் சித்தார்த்.

"நீங்க எவ்வளவு நாளா, இந்த கம்பனியை நடத்திட்டு வர்றீங்க சசி?" என கேட்டான்.

"இருபது வருஷத்திற்கு முன்னே மஞ்சள் ஏற்றுமதி பண்ணற சின்ன கம்பனியா தான் ஆரம்பிச்சார். அப்பறம் மிளகு, ஏலம் என்ற ஸ்பைசஸ் ஏற்றுமதி செய்ய ஆரம்பிச்சார். நல்ல தரமான பொருளுக்கு உலகளவில் இருக்கிற டிமாண்டை பார்த்து, நட்ஸ் அண்ட் டிரை புருட்ஸ் ஏற்றுமதி செய்ய ஆரம்பிச்சார். நான் இங்கே சேர்ந்த பிறகு தான், ஸீ புட்ஸ் யூனிட் ஆரம்பிச்சோம்" என அவன் சொல்லும் போதே உதவியாளர் காப்பியுடன் வந்தார்.

காப்பியை சுவைத்து விட்டு, "சசி, காப்பி நிஜமாகவே நல்லாயிருக்கு" என்றான் சித்தார்த்.

"தாங்க்ஸ் ஸிட். இது கூர்க்கில் இருந்து வர்ற காப்பி கொட்டையில் செய்தது. இந்தியாவிலே தரம் வாய்ந்த காப்பி, அங்கே இருந்து தான் வருது. இந்திய சந்தையில் அதை விற்பனை செய்யறதே இல்லை. எவ்வளவு விளைஞ்சாலும் உலக சந்தையில் அதை வாங்க பயங்கர போட்டி இருக்கு. பிரேஸிலியன் காப்பியும், அரேபியன் காப்பியும் அதற்கு அடுத்த கிரேட் தான்" என்றான் சசிதரன்.

Completed - Sudum Nilavu Sudatha SuriyanWhere stories live. Discover now