சுவாசம் 28

591 11 0
                                    

இப்போ நான் கடைசியா சொல்ற ஒரே வார்த்தை....ஐ லவ் யூ எழில்...நீங்க மட்டும் என்னை காதலிக்கல.. நானும் தான் உங்கள காதலிச்சேன்..காலேஜ் படிக்கும் போது நான் காதலிச்சது உங்களை தான்.. ஆனால் என் அக்காவ பாக்க வந்த மாப்பிளை நீங்கனு தெரிஞ்சதும் நான் உங்கள மறக்க முயற்சி செய்தேன் ஆனால் என்னால முடியல..

அவளை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு நின்றான் எழில்..

என் காதல எனக்குள்ளே வெச்சு புதச்சுகிட்டேன்... அப்புறம் எதிர்பாராத விதமா நம்ம கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாட்களையே உங்க மேல இருந்த காதலுக்கு மறுபடியும் உயிர் கிடைச்சுது..நான் உங்களை என் உயிருக்கு உயிரா காதலிச்சேன்..காதலிக்கிறேன்...இனிமேல் காதலிக்க நான் உங்க கூட இருக்க மாட்டேன்...எனக்கு உங்க கூடயும் நம்ம கொழந்த கூடயும் வாழனும்னு ஆசை தான்.. ஆனால் அதுக்கு எனக்கு கொடுத்து வைக்கல...என்ற இசை தன்னவனின் இதழில் முதல் முதலாக இதழ் பதித்தாள் காதலுடன்.. 

எழில் கண்களிலிருந்து கண்ணீர் வழிய தன்னவளின் முகத்தை தன் கரங்களால் ஏந்தியவன் அவள் சிவந்த விழிகளை காண அதுவோ
வலியில் துடித்து கொண்டிருந்தது..

இசை.... என்றான் எழில் மெல்லிய குரலில்..

நான் போனதுக்கு அப்புறமாவது ஒரு நல்ல பொண்ணாப்பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இரு.... அவள் கூறி முடிக்கும் அவள் உதட்டில் விரல் வைத்து தடுத்தவன் இன்னொரு முறை அப்படிலாம் சொல்லாதடி ப்ளீஸ்.. என்றான் பரிதவிப்புடன் ..

அவன் கையை தன் உதட்டிலிருந்து  எடுத்தவள் என்ன சொல்லவிடுங்க.. நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருங்க..நிச்சயமா சந்தோசமா வாழனும்..ஆனால் என் கொழந்தய தயவு செஞ்சு அனாதையா விட்ராதிங்க ப்ளீஸ் என்றவள் எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி மட்டும் கொண்டு வறீங்களா ப்ளீஸ்.. என்று அவள் கேட்கவும்

சுவாசமே நீயடி...(முடிவுற்றது)Where stories live. Discover now