சுவாசம் 11

665 16 0
                                    

**********
எழிலரசன் பால்கனியில் நின்று கொண்டிருக்க அவன் செல்பேசி சினுங்கியது..
அதை அட்டன் செய்து காதில் வைத்து ஹலோ என்க

மறுபுறம், ஹலோ எழில் நான் தான் ரம்யா..

ஹான் சொல்லு ரம்யா

எழில் நான் தங்கியிருக்க அப்பார்ட்மெண்ட்ல கொஞ்சம் ப்ரோப்லேம்.. இந்த ஊர் எனக்கு புதுசுன்றதால எங்க தங்கறதுனு ஒன்னும் புரியல உனக்கு ஏதாவது நல்ல இடம் தெரிஞ்சா சொல்லேன் ஒன் வீக் மட்டும் தான்..

ஓ.. ரம்யா.. அப்படினா நீ எங்க வீட்லயே தங்கிக்கலாமே ஒன் வீக் தானே..

இல்லை எழில் உங்க வீட்ல எப்படி எடுத்துக்குவாங்களோ..

நோ நோ அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க நீ தரலாமா தங்கிக்கலாம்..உனக்கு என் வீடு தெரியும்ல..

ஆ..எழில்..

சரி நீ வந்துரு என அழைப்பை துண்டித்தவன்  வீட்டில் உள்ளவர்களிடம் ரம்யாவின் வரவை கூற அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

சிறிது நிமிடங்களில் எழிலரசன் வீட்டிற்கு வந்த ரம்யாவை அனைவரும் வரவேற்க ரம்யாவை கண்ட இசையோ அதிர்ச்சியுடன் நின்றாள்.....

ரம்யாவை எழிலரசன் அனைவருக்கும் அறிமுகப்படுத்தியவன் கடைசியாக இசையிடம் சென்றவன் இசை இவ தான் என் கிளோஸ் பிரண்ட் ரம்யா அண்ட் என்னுடைய அசிஸ்டன் பிஏ என்று அறிமுகப்படுத்த ரம்யா இசையை பார்த்து நக்கலாக சிரித்தாள்.

கோபமுடன் ரம்யாவை பார்த்த இசையோ எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட்டாள்..

இசை இசை என அழைத்தவன் இவ ஏன் இப்படி நடந்துக்கிறா என்று நினைத்தவன் சாரி ரம்யா அவ கொஞ்சம் கோவமா இருக்கா போல.. அதான்.....என்று வார்த்தையை இழுக்க...

சுவாசமே நீயடி...(முடிவுற்றது)Where stories live. Discover now