சுவாசம் 10

687 16 1
                                    

என்னங்க கதவை திறங்க..கதவை எதுக்கு லாக் பண்ணீங்க.. ப்ளீஸ் கதவை திறங்க... அத்தை... சின்ன அத்தை...யாராவது வாங்க..என இசை சத்தமாக அழுது கொண்டே கத்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அங்கு ஓடி வந்தனர்..

என்னமா ஆச்சு இசை என்ன என விஜயா பதறி போய் கேட்கவும்
அத்தை அவர் கோபமா கதவை உள்ள லாக் பண்ணிக்கிட்டாரு அத்தை.. திறக்க மாற்றாரு என அழுது கொண்டே கூறிய இசையை பார்த்த குணசேகரன் என்ன மா உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா என வினவ ஆமாம் என தலை அசைத்தாள் இசை..

டேய் எழில் எழில் கதவை திற..என குணசேகரன் கதவை தட்ட
எழில் என்ன பா ஆச்சு... எழில் கதவை திற என விஜயாவும் சத்தமாக கூற எழிலோ அவர்கள் வார்த்தைகள் செவிகளில் விழவில்லை என்பது போல தரையில் அமர்ந்து கட்டிலில் சாய்திருந்தான்.

என்னங்க ப்ளீஸ் கதவை திறங்க என இசை ஒரு பக்கம் அழுது கொண்டு நின்றாள்.

ஏய் என்ன டி பண்ண.. எதுக்கு எழில் கதவை தாழ்ப்பாள் போட்ருக்கான்.. நீதான் ஏதாவது சொல்லிருப்ப வந்த மறுநாளே ஆரம்பச்சிட்டியா என்றார் வனஜா.

வனஜா என்ன பேசுற நீ.. அவன் தாழ்பாள் போட்டுக்கிட்டா பாவம் இசை என்ன பண்ணுவா.. நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா என சுஜாதா சிடுசிடுப்புடன் கூறவும்
வாயை மூடி கொண்டார் வனஜா.

ரவி, மா.. அவன் கதவை திறக்கறா மாதிரி தெரியல கதவை உடைக்கலாம் என்க குணசேகரனும் ரவியும் சேர்ந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல  எழில் கைகளில் இரத்தம் வழிந்தபடி தரையில் சோர்ந்து அமந்திருந்தான்.

அறையின் உள்ளே ஓடிய இசை தன்னவன் அருகில் சென்றவள் என்னங்க ஏங்க இப்படி பண்றிங்க..வாங்க ஹாஸ்பிடல் போகலாம் என்றழவும்...

மற்ற அனைவரும் உள்ளே வந்தவர்கள்  அவன் நிலையை கண்டு அதிர்ந்தனர்

சுவாசமே நீயடி...(முடிவுற்றது)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon