சுவாசம் 5

698 14 0
                                    

பெண் மாரியாதை கண்டு அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சி ஒருவரை தவிர்த்து...

புவனா என்ன இது என்று மனோகரன் தன் மனைவியிடம் அதிர்ச்சியுடன் கேட்கவும்

கலை நம்மள ஏமாத்திட்டு போய்ட்டாங்க... நம்ம குடும்ப மானத்தை காப்பாத்த இத விட்டா எனக்கு வேற வழி தெரியல என்ன மன்னிச்சுருங்க என புவனா கண்ணீருடன்  கூறவும் மனோகரன் பேச்சற்று நின்றார் சில நிமிடம்..

ஏன் டி புவனா உன் பெரிய பொண்ணு ஓடி போனா அதுக்கு
என் பேத்தி வாழ்க்கை தான் கிடைச்சுதா உனக்கு என்றார் மஞ்சுளா கோபமுடன் ..

அத்தை நீங்க கொஞ்சம் சும்மா இருங்கிங்களா என அதட்டினாள் புவனா..

குணசேகரன் விஜயாவை பார்த்தவர் விஜயா கொஞ்சம் யோசிச்சு முடிவெடுக்கலாமே என்று கூறவும்இதுல யோசிக்க ஒண்ணுமே இல்லை.. இதுல நம்ம குடும்ப கௌரவம் மட்டும் இல்ல என் மகனோட மரியாதையும் அடங்கியிருக்கு....
என்றார் விஜயா..

சரி அவனுக்கு விருப்பமானு நீ கேட்டியா...என்றார் குணசேகரன்.

ஏன்.. அதெல்லாம் அவனுக்கு விருப்பம் தான்.. என்றார் புவனா சிடுசிடுப்புடன்.

அண்ணி அந்த பொண்ணு தான் ஓடிப்போய்டா.. அவ தங்கச்சி வேற இப்போ நம்ம குடும்பத்துக்கு மருமகளா வந்தா பாக்கிறவங்க என்ன பேசுவாங்க ஓடிப்போனவ தங்கச்சிய தான் எழிலுக்கு கட்டி வெச்சுருக்காங்கனு மறுபடியும் பேசிக்க மாட்டாங்களா என்றாள் வனஜா..

என் பொண்ணு முறை பொண்ணு தான சுருதிய ஏன் எழிலுக்கு கட்டி வைக்க கூடாது நீங்களே சொல்லுங்க என அவர் கூறவும் அவரை முறைத்து பார்த்த எழிலரசன் பொறுமை இழந்தான்...

என்ன நினைச்சுட்டுருக்கிங்க நீங்க உங்க இஷ்டத்துக்கு என்னன்னவோ பேசிட்டுருக்கிங்க.. சுருதிய என் தங்கச்சி மாதிரி தான் பாக்குறேன்.. வீணா தேவையில்லாம பேசி டைம வேஸ்ட் பண்ணாதீங்க.. என்றவன் நான் இசைய தான் கல்யாணம் பண்ணிக்குவேன்... அவ தான் என் பொண்டாட்டி எழிலரசன் அனைவரின் முன்னிலையிலும் கூற அனைவரும் அவனை அதிர்ச்சியுடன் பார்த்து நின்றனர்.

சுவாசமே நீயடி...(முடிவுற்றது)Opowieści tętniące życiem. Odkryj je teraz