சுவாசம் 27

559 11 0
                                    

எப்படியோ எழில் கிட்ட கொளுத்தி போட்டாச்சு... இனிமே கொழுந்து விட்டு எரியும்.. இசை நீ என்னை பத்தி என்ன சொன்னாலும் இனிமேல் எழில் உன்னை நம்ப போறது இல்லை...எழிலுக்கு உன் மேல இருக்க வெறுப்பு நாளுக்கு நாள் ஏறிட்டே தான் போகும்.. என்று சத்தமாக சிரித்தாள் ரம்யா ...

எழில் கோபமுடன் அவன் அறைக்கு செல்ல இசை கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்..

இசை என சத்தமாக கத்தியவன் கதவை தாழிட்டு விட்டு அவள் அருகில் சென்று நின்றான்..

என்னங்க என்ன ஆச்சு...என்றவள் கட்டிலில் இருந்து பொறுமையாக எழுந்து நிற்க

ஏய் நீ என்ன தான் டி நினைச்சுட்டுருக்க... உனக்குலாம் கொஞ்சம் கூட அறிவுனு ஒன்னு  இல்லையா...உனக்கு நான் எத்தனை முறை சொல்லி புரியவெக்கிறது..
உன் கூடலாம் எவனாலயும் சத்தியமா வாழவே முடியாது... சீ..உன்னை போய் காதலிச்சேன் பாரு என்ன சொல்லணும்... எனக்கு உன்னை நினைச்சாலே இப்போலாம் வெறுப்பா இருக்கு..

என்னங்க என்று திகைப்புடன் அவனை பார்க்கவும்...

வாய மூடு...ஏய் உனக்கு ரம்யாவ பத்தி என்ன டி தெரியும்.. அவள பத்தி பேசுற எந்த உரிமையும் உனக்கு இல்லை.... அவ இந்த வீட்ல தங்கியிருக்கிறதுனால உனக்கு என்ன டி பிரச்சனை..
பிரண்ட்ஷிப்னா என்னனு தெரியுமா டி உனக்கு..ரம்யா ஸ்கூல் படிக்கும் போதுலயிருந்தே எனக்கு ஒரு நல்ல பிரண்ட்..

அத உன்னால புரிஞ்சிக்க முடியலயா வாய மூடிட்டு அமைதியா இரு..அத விட்டுடு அவள என் கூட சேத்து வெச்சு சந்தேகப்படுற உன் புத்திய என்னனு சொல்றது.. என்றான் அவன் சத்தமாக..

அவள் அவனை விழி சுருக்கி பார்த்து கொண்டிருக்க உனக்கு உன் புருஷன் மேலயே நம்பிக்கை இல்லை அப்புறம் நீ எப்படி இன்னொருத்தவங்கள நம்புவ...ம்ம் வயித்துலருக்க கொழந்தையே வேணாம்னு சொன்னவ தான நீ.. எந்த ஒரு தாயும் சொல்ல கூடாத வார்த்தைய சொன்னவ நீ .உன் புத்தி எப்படி எல்லாம் போகுது . உன்னை நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்கு...என் கொழந்தய என் கிட்ட பெத்துகுடுத்துட்டு நீ இங்கிருந்து போய்டு..எனக்கு உன்னை பாக்கவே பிடிக்கல என்றவன் எரிச்சலுடன் முகத்தை திருப்பி கொண்டான்..

சுவாசமே நீயடி...(முடிவுற்றது)Where stories live. Discover now