குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் வெடிகுண்டு ஒன்று வச்சிருக்கேன்..

558 58 27
                                    

கதிர் - 🤨🤨

முல்லை - என்ன முறைக்கிற உன்னால தான் நான் இங்க படுத்திருக்கேன்.. என்னுடைய இந்த நிலைமைக்கு நீதான் காரணம்..ஆனா என் தாத்தா எதிர்க்க நல்லவன் மாதிரி சீன் போடறியா

சிவம் - பாப்பா ஏன் மா கதிர் தம்பியை திட்டுற....

முல்லை - நீ சும்மா இரு... இவனோட friends தான் என்னை நீச்சல் குளத்தில் தள்ளி விட்டாங்க..

கதிர் - நான் தான் உன்னை காப்பாத்த உள்ள வந்தேன் ல

முல்லை - நீ ஒன்னும் காப்பாத்த வந்து இருக்க மாட்ட.. என் தலையை பிடித்து அமுக்கி அதே இடத்தில் என்னை சாவடிச்சுருப்ப..

கதிர் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியே போக...

சிவம் - என்ன புள்ள நீ ஏன் இப்படி எல்லாம் பேசுற நீ மயங்கி பாத்ரூம் உள்ள விழுந்ததும் அவர் எப்படி துடிச்சு போயிட்டாரு தெரியுமா

முல்லை - போதும் தாத்தா சும்மா உன் கதிர் தொம்பி புராணத்தை பாடாத... பேசாம என் பாட்டி போன இடத்துக்கே நானும் போயிடுறேன் நீ இவன் கூட சந்தோஷமா இரு...

சிவம் - முல்ல என்ன ஆச்சு ஏன் இப்படி வெறுப்பா பேசுற

முல்லை - நீ வெளிய போறியா..

முல்லை சிவத்திடம் கோபமாக பேச... சிவம் சூழ்நிலையை புரிந்து கொண்டு அங்கிருந்து வெளியே வர கதிர் வாசலில் இருக்கும் தோட்டத்தை பார்த்தபடி நின்று இருந்தவரின் தோள் மீது சிவம் கை வைக்க

சிவம் - என்ன தம்பி என்ன ஆச்சு

கதிர் - nothing சிவம்..

சிவம் - சொல்லுப்பா என்ன ஆச்சு

கதிர் - at any cause உங்க பேத்திக்கு நீச்சல் தெரியாம இருந்திருந்தா.. அவளுக்கு ஏதாவது ஆயிருக்கும் இல்ல

சிவம் - அதான் ஒன்னும் ஆகலையே

கதிர் - இல்ல சிவம் நான்தான் தப்பு பண்ணிட்டேன் போல

சிவம் - நீ என்ன பண்ண..

கதிர் - இல்ல சேர்க்கை சரி இருக்கணும்னு சொல்லுவாங்க இல்ல.. நான்  நிறைய பிரெண்ட்ஸ் கூட வச்சிக்கிறது இல்ல... ஆனா இவுங்க...

💞காமம் இல்லா காதல் 💞KIK💞حيث تعيش القصص. اكتشف الآن