ஹீனா மிகவும் தொய்வாக காணப்பட்டாள். அன்று முழுவதும் அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. இதை எப்படிக் கையாள்வது என்பது புரியவில்லை இந்துவுக்கு. அவள் காதலை அவன் ஏற்கவில்லை போல் தெரிகிறது. ஆனால் ஏன்? யார் அவன்? அர்ஜுனுக்கு மைத்துனன் ஆகும் விருப்பமில்லாமல் கூட யாராவது இருப்பார்களா? ஏன் அவன் இப்படி செய்கிறான்? ஹீனாவை ஏற்றுக் கொள்வதில் அவனுக்கு என்ன பிரச்சனை? ஒருவேளை, அவன் ஹீனாவை மாஷாவுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கிறானோ? இந்து பதட்டமானாள். ஹீனா நல்ல பெண் ஆயிற்றே... அவள் ஏமாற்றம் அடையக்கூடாது என்று நினைத்தாள் இந்து.

இந்த விஷயத்தை அவள் அர்ஜுனிடம் எடுத்து செல்ல வேண்டுமா? அவன் என்ன கூறுவான்? தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதைப் போல், அவனையும் அர்ஜுன் தரதரவென இழுத்து வந்து, ஹீனாவை திருமணம் செய்து கொள்ளச் சொன்னால் என்ன செய்வது? என்று யோசித்தாள் இந்து. அவன் அர்ஜுன் ஆயிற்றே... செய்தாலும் செய்வான். அர்ஜுனை யாரும் முன் மதிப்பீடு செய்யவே முடியாது. அவன் எப்பொழுது, எப்படி திரும்புவான் என்று கூற முடியாது. தான் துண்டு சீட்டில் எழுதி வைத்த எண்ணை மீண்டும் ஒரு முறை பார்த்தாள் இந்து.

 மாலை

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினான் அர்ஜுன். அணிந்திருந்த கோட்டை வீசி எறிந்து விட்டு சோபாவில் சாய்ந்தான்.

"டயர்டா இருக்கீங்களா அஜ்ஜு?" என்றாள் இந்து.

அவள் தன்னை அழித்த விதத்தை கேட்டு புன்னகை புரிந்தான்.

"கொஞ்சம் டயர்டா தான் இருக்கேன். பிரஷ்-இன் பண்ணா சரியாயிடும்"

அவள் சரி என்று தலையசைக்க, அர்ஜுன் குளியலறை நோக்கி சென்றான். அப்போது, அவன் மேஜை மீது வைத்திருந்த அவனுடைய கைபேசியின் மீது இந்துவின் பார்வை சென்றது. ஓடிச் சென்று அவனுடைய கைப்பேசியை எடுத்து, அவள் எழுதி வைத்திருந்த எண்ணை டயல் செய்தாள். அவள் அனைத்து எண்களையும் எழுதி முடிக்க, அர்ஜுனின் கைபேசியின் திரையில் ஒளிர்ந்த பெயர், அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நம்ப முடியாமல் கைபேசியை காதுக்கு கொடுத்தாள்.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now