Part 21

1.9K 95 17
                                    

பாகம் 21

மறுநாள் காலை

லண்டனிலிருந்த தனது தொழில் ஸ்தாபானங்களை, இந்தியாவிற்கு மாற்றியமைக்க, சென்னையில் புதிதாய் துவங்கப்பட்ட அலுவலகத்தின் துவக்க விழாவிற்காக விடியற்காலையிலேயே சென்றுவிட்டான் அர்ஜுன். அவனுடைய அறை வெளியில் பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து, சமையல் அறைக்கு ஓடினாள் இந்து.

"வேலன் அண்ணா, அவர் எங்கே போனார்?"

"அவர் காலையிலேயே ஆஃபீஸுக்கு கிளம்பி போயிட்டாருமா"

"இவ்வளவு காலையில ஏன் போனாரு?"

"எனக்கு தெரியலம்மா"

"அவர் ஏதாவது சாப்பிட்டாரா?"

"இல்ல... காபி கூட குடிக்கல..."

சற்று யோசித்தவள், ஒரு ஹாட் பாக்ஸில், சிற்றுண்டியை அடைத்து, அதை ஒரு பையில் திணித்தாள்.

"அண்ணா, இதை அவர்கிட்ட கொண்டு போய் குடுத்துட்டு வரிங்களா?"

அவர் *சரி* என்று தலையசைக்க போக, *வேண்டாம்* என்று  அவருக்கு சாமிஞ்சை செய்தாள் ரம்யா.

"எனக்கு சமைக்க வேண்டிய வேலை இருக்கு மா. மத்தியானம் சாப்பாட்டுக்கு அர்ஜுன் தம்பி வர்றதா இருந்தா, கோபப்படுவார்" என்றார்

"அப்போ நான் கொண்டு போய் குடுத்துட்டு வரட்டுமா?"

"தாராளமா போயிட்டு வாங்க"

அந்தப் பையை எடுத்துக் கொண்டு, வெளியே வந்து, டிரைவரிடம் தன்னை ஆபீசுக்கு அழைத்துப் போகச் சொல்லி பணித்தாள். முன்பிருந்த அத்தனை கட்டுப்பாடுகளையும் அர்ஜுன் ஏற்கனவே தளர்த்திவிட்டு இருந்ததால், அவர் இந்துவுடைய கட்டளையை ஏற்றார்.

எஸ் ஆர் கம்பெனி

சிற்றுண்டி பையுடன் அலுவலகத்துள் நுழைந்தாள் இந்து. அந்த அலுவலகத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்து போனாள் அவள். அவ்வளவு பெரிய அலுவலகத்தில் அர்ஜுன் எங்கு இருக்கிறான் என்று அவளால் கண்டுபிடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அதனால் வரவேற்பாளர் பெண்ணை கேட்டாள்.

இதய சங்கிலி (முடிவுற்றது )حيث تعيش القصص. اكتشف الآن