"கண்டிப்பா சொல்றேன்"

ரேவதி தனது பைகளுடன் வந்தாள். அவளுக்கு நிறைய பரிசுப் பொருட்களை கொடுத்து அனுப்பினாள் இந்து.

மூன்று மாதங்களுக்குப் பிறகு

சங்கருக்காக வாதாட ஒரு நல்ல கிரிமினல் வக்கீலை நியமித்து இருந்தான் அர்ஜுன். வழக்கு முடியும் வரை, அவர் பெயிலில் இருக்க அனுமதி பெற்றிருந்தார்கள். அவர் அர்ஜுனுடனும் இந்துவுடனும் தான் இருந்தார். அர்ஜுனிடம் மன்றாடி, இந்து தான் அதைச் செய்திருந்தாள். தனக்கு தண்டனை கிடைக்கப் போகும் கவலை இல்லாமல், அவர்களுடன் சந்தோஷமாக இருந்தார் சங்கர்.

இந்துவிடம் சீதாவின் சாயலை கண்டார் சங்கர். அதே எளிமை... அதே மரியாதை... அதே அன்பு... அனைத்தும் அவருக்கு சீதாவை நினைவூட்டியது. அர்ஜுன், இந்துவின் மீது அளவில்லா அன்பு வைத்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவன் சீதாவின் மீதும் அப்படித் தான் அளவில்லா அன்பு வைத்திருந்தான். அப்படி இருக்க, அவன் எப்படி இந்துவிடம் அன்பு வைக்காமல் போவான்?

சங்கருக்கும் ஹீனாவுக்கும் காலை உணவை பரிமாறினாள் இந்து.

"நீங்க ரொம்ப நல்லா சமைக்கிறீங்க, அண்ணி" என்றாள் ஹீனா

"இந்த மாதிரி நல்ல சாப்பாடு சாப்பிட்டு பதினைந்து வருஷம் ஆச்சு" என்றார் சங்கர்.

அவர் யாருடைய சாப்பாட்டை,  பற்றிப் பேசுகிறார் என்பது அவர்கள் இருவருக்கும் புரிந்தது.

"நிஜமாவாப்பா? அம்மா கூட அண்ணி மாதிரி நல்லா சமைப்பாங்களா? "

"ஆமாம். அருமையா சமைப்பா. அவளுடைய எண்ணம் எல்லாம், தன் மகனையும் புருஷனையும் சந்தோஷமா வச்சுக்கணும்... அவ்வளவு தான். எப்பவும் எங்களை பத்தி தான் நினைச்சிகிட்டே இருப்பா. அவ கடவுள் மாதிரி. நான் அவளை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். அதனால தான்,  நரகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கேன். கடவுள் நமக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்து ஆசீர்வதிக்கிறார். ஆனா, என்னை மாதிரி முட்டாள் மனுஷங்க அதை புரிஞ்சுக்காம கெடுத்துக்குறோம்..." அவர் கண்கள் குளமாயின.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now