நிம்மதிப் பெருமூச்சுவிட்டான் அர்ஜுன். அந்த வீட்டில் அவனுக்கு ஏற்பட்ட உணர்வில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவனுடைய உணர்வு, நிச்சயம் தவறாகாது. இருந்த போதிலும், அந்த வீட்டின் உரிமையாளர்களை பற்றி அவன் தெரிந்து கொள்ள நினைத்தான். நாகுவும், கனகுவும் திடிரென்று அவன் வழியில் வந்து அறிமுகமானார்கள். அது தற்செயலாக நடந்ததாக இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம். அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களா என்பதை அவன் தெரிந்து கொள்ள எண்ணினான்.

"எங்க அம்மாவுடைய வீட்டை நான் வாங்க போறேன்" என்றான் அர்ஜுன்.

"கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு, தம்பி. கடவுள் உங்களை நல்லா வைக்கட்டும்"

அவர்களிடம் பிரசாதத்தை வழங்கி விட்டு சென்றார் பண்டிதர்.

"நான், கொஞ்ச நேரம் இங்க உக்காந்து இருக்கட்டுமா?" என்றாள் இந்து

சரி என்று தலையசைத்துவிட்டு கிரிக்கு போன் செய்தான் அர்ஜுன்.

"ஹாய் அர்ஜுன்"

"இஸ் எவ்ரிதிங் ஃபைன்?"

"எஸ்... நம்ம ஆளுங்க சங்கர் இல்லத்தைச் சுத்தி வளைச்சிருக்காங்க. மாஷாவுடைய போனை நம்ம ஆளுங்க ட்ராக் பண்றாங்க."

"சந்தேகப்படுற மாதிரி ஏதாவது கிடச்சுதா?"

"கிளியராவே கிடைச்சது... மாஷாவுடையை கவனம், உன்னுடைய ரிசப்ஷன் மேல தான் இருக்கு.... இந்துவை கொல்ல பிளான் பண்ணி இருக்கா"

"வாட் த ஹெல்..." என்றான் பல்லைக் கடித்தபடி.

"அவங்க ஆளுங்க நம்ம கண்காணிப்பில் தான் இருக்காங்க"

"அவங்க ஒரு அடி கூட நகர கூடாது. பீ கேர் ஃபுல். இது, இந்துவை பத்தின விஷயம்... மறந்துடாத" கத்திவிடாமல் இருக்க, அவன் படாத பாடுபட்டான்.

"அவங்களை நான் பாத்துக்குறேன். ஆனா, மாஷாவை என்ன செய்யறது?"

"எல்லாமே அவளுடைய பிளான் படி நடக்கிறதா அவ நினைக்கட்டும். அந்த வீட்ல இருந்து அவ வெளியில் வந்த உடனே நம்ம இடத்துக்கு கொண்டு வந்துடு"

இதய சங்கிலி (முடிவுற்றது )Dove le storie prendono vita. Scoprilo ora