"ஏய்..."

"ம்ம்ம்?"

"நம்ம கோவிலுக்கு போய்த் தான் ஆகணுமா? "

"ஆமாம், ஏன்?"

"நம்ம இன்னொரு நாள் போகலாமே"

" வேண்டாம்"

" ஏன்? "

"என்னை ஸ்கூல் பொண்ணுன்னு சொல்லி கிண்டல் பண்ணிங்க இல்ல... அதுக்கு இது தான் உங்களுக்கு தண்டனை"

"ஓ அப்படியா... எவ்வளவு நாளைக்கு? நாளைக்கு ராத்திரி என்ன பண்ணுவ?"

"அந்தக் கதையை நாளைக்கு பாக்கலாம்... இப்போ கதைக்கு வாங்க"

"நான் கதையை மாத்திட்டா என்ன செய்வ?"

" மாத்துவீங்களா? "

" மாத்த மாட்டேனா? "

"ம்ம்ம்... எனக்கு தூக்கம் வருது" அவள் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அவளைத் தன் பக்கம் திருப்பினான்.

"பதில் சொல்லு"

"நீங்க ரொம்ப நல்லவரு... தங்கமானவரு... 24 கேரட் கோல்டு..."

"சரி, சரி, போதும் தூங்கு"

அவன் மூக்கை பிடித்து செல்லமாக கிள்ளிவிட்டு, அவனை அணைத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள் இந்து. அர்ஜுனுக்கு தான் அவ்வளவு சீக்கிரம் தூக்கமே வரவில்லை. அவள் அவனருகில் இவ்வளவு நெருக்கமாக படுத்திருந்தால், பாவம் அவனும் தான் என்ன செய்வான்?

மறுநாள் காலை

கோவிலுக்கு செல்ல இருவரும் தயாராக இருந்தார்கள். ஒரு கூண்டு குடையை காருக்குள் வைக்க எடுத்துச் சென்றார் வேலன்.

"என்ன அது?" என்றான் அர்ஜுன்.

" நமக்கு லன்ச்"

" வழியில சாப்பிடலாமே"

"நீங்க தானே சொன்னீங்க, அது ரொம்ப சின்ன கிராமம்னு. ஒரு வேளை சாப்பிட எதுவும் கிடைக்கலன்னா என்ன செய்யுறது?"

"ம்ம்ம்... பரவாயில்லையே." என்று சிரித்தான்.

அப்பொழுது அங்கு ரம்யா வந்தாள்.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now