என்று கூறிவிட்டு, அவன் பேசுவதற்கு செவிசாய்க்காமல் அழைப்பை துண்டித்தாள் ஹீனா. தன் கைப்பேசியை பார்த்து, புன்னகைதான் கிரி. ஹீனா, மாஷாவை கவனிக்கிறாளோ இல்லையோ... அவனுடைய ஆட்கள், ஏற்கனவே சங்கர் இல்லத்தை சூழ்ந்து கொண்டு, கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அர்ஜுனுடைய மேலாளரின் திறமை என்னவென்று அந்தப் பெண்ணுக்கு எப்படி தெரியும்?

சீதாராணி இல்லம்

அர்ஜுனுடைய நடையின் வேகம் குறைந்தது, இந்துவின் கையில் இருந்த, பழைய புகைப்பட ஆல்பத்தை பார்த்த பொழுது. இந்து அதை ஆர்வமாய் பார்த்துக் கொண்டு இருந்தாள். ஏனெனில் அதில் அர்ஜுனுடைய சிறு வயது புகைப்படங்கள் இருந்தன.

"என்னங்க இங்க வந்து இதை பாருங்களேன்..." என்றாள் குதூகலமாக.

அவள் அருகில் வந்து அமர்ந்தான் அர்ஜுன்.

"இது உனக்கு எங்க கிடைச்சது?" என்றான்.

"ஸ்டோர் ரூமில் இருந்து எடுத்தேன்"

"நீ எதுக்கு ஸ்டோர் ரூமுக்கு போனே?"

"பூஜை செய்றதுக்கு தாம்பாளத் தட்டு எடுக்க போனேன்"

"ஓ..."

அந்த ஆல்பத்தில் இருந்த புகைப்படங்களை பற்றி கேள்விகளை கேட்கத் தொடங்கினாள் இந்து. அவையெல்லாம், எங்கு, எப்பொழுது எடுக்கப்பட்டது என்று அவளுக்கு விளக்கி கூறி வந்தான் அர்ஜுன். ஒரு புகைப்படத்தில், அர்ஜுன் அவனுடைய அம்மா சீதாராணியுடன் இருந்தான். அந்தப் புகைப்படம், ஏதோ ஒரு கோவிலில் எடுக்கப்பட்டிருந்தது. அந்த கோவிலின் சூழல்  பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது.

"இந்தக் கோவில் எங்கங்க இருக்கு?"

"இது எங்க அம்மாவுடைய குலதெய்வ கோவில். அவங்க பிறந்த கிராமத்தில் இருக்கு"

"உங்க அம்மாவுடைய கிராமமா? அது எங்க இருக்கு?"

"இங்க இருந்து... 70 கிலோ மீட்டர் இருக்கும்..."

"அங்க தான் உங்க அம்மா பிறந்தாங்களா?"

"ஆமாம். நான் இந்தியாவில் இருந்த வரைக்கும், ஒவ்வொரு வருஷமும் அங்க போவோம்"

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now