" சரியான ஆளா?"

ஆம் என்று தலையசைத்தாள் ஹீனா

அதை பற்றி இந்துவிடம் ஹீனாவே கூற வேண்டும் என்று நினைத்தார் சங்கர். பெரிய போராட்டத்திற்கு பிறகு, இப்பொழுது தான் இந்துவும், ஹீனாவும் நன்றாக பேசத் துவங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய உறவு, நின்று நிலைக்க வேண்டுமென்று நினைத்தார் சங்கர். எக்காரணத்தைக் கொண்டும், அர்ஜுனுக்கு ஹீனாவின் மீது சந்தேகம் வரக்கூடாது என்று நினைத்தார் அவர்.

....

மாஷாவின் முன்பு உணவுத் தட்டை வைத்தார் ரஹீம். ஏதோ, உணவையே பார்த்திராதவரை போல அதைத் தின்றார் மாஷா.

" ஏன் இவ்வளவு லேட்? " என்றார் சாப்பிட்டுக்கொண்டே.

" ஐயாவும், ஹீனா பாப்பாவும் இப்ப தான் வெளியே போனாங்க" என்றார் ரஹீம்.

" நான் இங்க இருக்கறது அவங்களுக்கு தெரியவே கூடாது"

" நீங்க இங்க இருக்கறது தெரிஞ்சா ரொம்ப பெரிய பிரச்சனை ஆயிடும்" என்றார் ரஹீம் தயக்கத்துடன்.

" நீ உன்னோட வாயை மூடிக்கிட்டு இருந்தா, நான் இங்கே இருக்கிறது யாருக்கும் தெரியாது. அவங்க ரெண்டு பேரும் எங்கே போயிருக்காங்க?"

" தெரியலம்மா "

" நான் இல்லாதப்போ இங்கே ஏதாவது நடந்துதா?"

" அர்ஜுன் தம்பிக்கு, வர்ற ஞாயிற்றுகிழமை கல்யாண வரவேற்பு ஏற்பாடு பண்ணியிருக்காங்க"

" என்னது ரிசப்ஷனா?"

"ஆமாம். ஹீனா பாப்பா, சார்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க"

" இப்போ வீட்ல யாரு இருக்கா?"

" யாரும் இல்ல. தோட்டக்கார ராஜு மட்டும் தோட்டத்துல இருக்காரு"

" அவனை தோட்டத்திலேயே நிறுத்தி வச்சுக்கோ"

" சரிங்க "

தன் அறைக்கு வந்து, கதவை தாழிட்டுக் கொண்டு, லேண்ட்லைன் போனிலிருந்து யாருக்கோ அழைப்பு விடுத்தார் மாஷா.
.......

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now