அங்கிருந்த, அந்த மூன்று பேரின் இதயங்களுக்கும் எதுவும் ஆகாமல் இருந்ததற்காக, நாம் கடவுளுக்கு நன்றி கூறலாம். அவர்கள் மூன்று பேரும், சிலை போல் நின்று கொண்டிருந்தார்கள். நடந்ததை புரிந்து கொள்ள, அவர்களுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டது.

அர்ஜுனாவது.... ஹீனாவிற்கு நன்றி கூறுவதாவது...!

அர்ஜுன் ஏறிச்சென்ற மாடி படிக்கட்டுகளை, வெறித்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள் அந்த பெண்கள்.

அதே வெறித்த பார்வையுடன், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். தன் கையால், வாயை மூடிக்கொண்டு சிரித்தாள் இந்து, நம்பமுடியாமல். ஹீனாவோ சந்தோஷக் கண்ணீர் வடித்தாள். அவளால் நம்பவே முடியவில்லை, அர்ஜுன் தனக்கு நன்றி கூறினான் என்பதை. ஓடிச்சென்று இந்துவை கட்டிக்கொண்டு அழுதாள். அவளது முதுகை அன்பாய் தட்டிக் கொடுத்தாள் இந்து.

"எனக்கு தெரியும் அவரைப் பத்தி. அவரை மாதிரி யாராலும் வர முடியாது" என்றாள் இந்து.

"அவருடைய மென்மையான, இன்னொரு பக்கத்தை நான் பார்ப்பேன்னு கனவுல கூட நினச்சதில்ல அண்ணி. இது எல்லாமே உங்களால தான். ரொம்ப தேங்க்ஸ் அண்ணி"

"நீயும் எல்லா சந்தோஷத்தையும் அடைய தகுதியானவள் தான்"

"ஐ லவ் யூ சோ மச் அண்ணி"

"நீ எனக்கு செய்த உதவிக்காக, ஐ லவ் யூ டூ"

"அது என்னுடைய கடமை. உண்மைய சொல்லப் போனா, நான் ஒரு சுயநலவாதி. எங்க அம்மாவை ஒரு கொலைகாரியா பார்க்க நான் விரும்பல. ஏற்கனவே அவங்க நிறைய பாவம் பண்ணிட்டாங்க" அவள் கன்னங்களில் உருண்டு ஓடிய கண்ணீரை துடைத்த படி கூறினாள் ஹீனா.

"எல்லாம் சரியாயிடும்"

" அப்படி நடந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்"

" கவலை படாதே. கடவுள் நல்லவங்களை கைவிடமாட்டார்"

அதைக்கேட்டு புன்னகைத்தாள் ஹீனா.

" நான் கிளம்பட்டுமா?"

"முதல்ல தான் பயந்த... இப்ப தான், அவருடைய தங்கச்சி இங்க இருக்கிறதைப் பத்தி, உங்க அண்ணனுக்கு எந்த பிரச்சனையும் இல்ல போல இருக்கே... " என்றாள் சிரித்தபடி.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now