"என்ன பேசின?"

அவள் ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.

"தலையை ஆட்டுறதை நிறுத்திட்டு, வாயை திறந்து பேசு"

அவள் அதற்கும் சரி என்று தலையசைக்க, அவன் தன் கண்களை சுழற்றினான்.

இன்டர்காமை எடுத்து, வேலனை அழைத்தான் அர்ஜுன்.

"ராத்திரிக்கு என்ன சமைக்க போறீங்க?" என்றான்.

"தோசையும் சாம்பாரும், தம்பி"

"வேண்டாம். தோசை முழுங்குறதுக்கு கஷ்டமா இருக்கும். சாதம் வடிச்சு, பருப்பு போட்டு, காரம் இல்லாத ரசம் ஊத்தி லேசாக மசிச்சி கொண்டு வாங்க"

இந்துவுக்கு புரிந்து போனது, *தோசையை* விழுங்குவதற்கு யாருக்கு கஷ்டமாக இருக்கும் என்று. உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள் இந்து.

"சரிங்க தம்பி"

"சீக்கிரம் "

அவன் அழைப்பை துண்டித்தான்.

தன் மடிக்கணினியை எடுத்துக் கொண்டு, கட்டிலின் மறு பக்கத்தில் அமர்ந்து கொண்டான் அர்ஜுன். அவனைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க, இந்து எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவனை திருட்டு தனமாக ரசித்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து, சாதத்துடன் வந்து கதவை தட்டினார் வேலன்.

"உள்ள வாங்க" என்றான் அர்ஜுன்

உள்ளே வந்து, அவர் அந்த சாத கிண்ணத்தை அர்ஜுனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார் வேலன்.

"இந்து, வா. இதை சாப்பிடு"

"நான் அப்புறமா சாப்பிடறேன்"

"எப்போ...? நீ காலையிலிருந்து எதுவுமே சாப்பிடல. வந்து சாப்பிடு"

"எனக்கு சுத்தமா பசியே இல்ல"

அந்தக் கிண்ணத்துடன் வந்து அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். ஏதும் புரியாமல் அவனை பார்த்தாள் இந்து.

"என்ன சொன்னே? " என்றான்

அவள் ஒன்றும் இல்லை என்று தலையசைக்க,

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now