சீதாராணி இல்லம்

தன் அறைக்குள் நுழைந்த அர்ஜூனின் கால்கள் நகர மறுத்தன, ஒற்றை சோபாவில், அமர்ந்தபடி இந்து உறங்கிக்கொண்டிருந்ததை பார்த்த போது... அவள் அங்கு தங்குவதற்கான அனுமதியை அவன் வழங்காமல் போனதை நினைத்த போது, அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவளது தூக்கம் கலைந்து விடாமல் கவனமாய் அவளை தூக்கி வந்து கட்டிலில் கிடத்தினான். அவள் தலையை அன்பாய் வருடிவிட்டு உச்சி முகர்ந்தான். அவள் கையை பற்றிக்கொண்டு, அவள் பக்கத்தில் படுத்து கொண்டான்.

சங்கர் இல்லம்

மாஷா வீணாவிற்கு போன் செய்தார்.

"என்ன நடந்துகிட்டிருக்கு அங்க?" என்று சீறினார்.

"உங்களால தான் எங்க வாழ்க்கையே நரகமாயிடுச்சி. "

"உங்களால இந்துவை அங்கிருந்து கூட்டிகிட்டு வர முடியுமா முடியாதா? " என்று கோபத்தில் கத்தினார்.

"நாங்க முடிந்த வரை முயற்சி பண்ணோம். ஆனா, இந்து இங்கிருந்து வர தயாரா இல்ல. அது எப்பவுமே நடக்கும்னு எங்களுக்கு தோணல. அர்ஜுன் எங்களுடைய வீட்டை அவன் பெயரில் மாத்தி எழுதிக்கிட்டான். எங்களையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்டான்  "

"இப்போ நீங்க என்ன செய்யப் போறீங்க? "

"அவங்க வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. ஏன்னா எப்படியும் அர்ஜுன் எங்களை வெளியில் துரத்திடுவான்..."

" சரி... நான் சொல்ற அட்ரஸ் எழுதிகிட்டு, அந்த இடத்துக்கு வந்துடுங்க"

"எங்க? "

"நீங்க அங்க நிம்மதியா இருக்கலாம் "

"சரி" என்று அழைப்பை துண்டித்தாள் வீணா.

அவள் தன் உடமைகளை எடுத்து வைக்கத் தொடங்கினாள். இயலாமையால் அவளைப் பார்த்தார் வித்யா.

" மாஷா நம்மள அவங்க இடத்துக்கு வரச் சொல்லி இருக்காங்க "

"நெஜமாவா சொல்ற? "

" ஆமாம்... "

"நம்ம அவளை நம்பலாமா?

"அவ நம்பிக்கைக்கு உகந்தவளா இல்லையா என்கிறது இரண்டாவது விஷயம். இப்போதைக்கு நமக்கு அவளை விட்டா வேற வழி இல்ல. அர்ஜுன் நம்மளை இங்க இருக்க நிச்சயமா விட மாட்டான். அவன் கோவத்தில் வேற எதாவது செய்யறதுக்கு முன்னாடி, நம்ம இங்கிருந்து போறது தான் நல்லது"

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now