அவளைப் பார்த்து முகம் சுருக்கினாள் வீணா.

"இந்து, அர்ஜுன் சாருடைய ரூமுக்கு போறது இது தான் முதல் தடவை. புருஷனுடைய முக்கியத்துவத்தை, நீங்க தான் அவங்களுக்கு சொல்லி புரிய வச்சிருக்கணும்னு நினைக்கிறேன்... நான் சொல்றது சரி தானே?" என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாள்.

வராத சிரிப்பை வரவழைத்து, பல்லைக் காட்டினாள் வீணா.

"எனக்கு ரொம்ப தூக்கம் வருது. இன்னைக்கு இந்து, அர்ஜுன் சாரோட ரூம்ல தான் தூங்க போறாங்கன்னு நினைக்கிறேன்..." என்று, போகிற போக்கில், குண்டை தூக்கி போட்டு விட்டு சென்றாள்.

அவள் வீணாவின் முகத்தை பார்த்த பொழுது, அதில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவள் வயிற்றை கலக்கிவிட்ட சந்தோஷத்தில் தூங்கச் சென்றாள் ரம்யா.

அர்ஜுனின் அறை

இந்துவை கையில் ஏந்தியபடி, அவள் கண்களை பார்த்துக் கொண்டே கட்டிலை நோக்கி சென்றான் அர்ஜுன். அவள் முகத்தில், சிறிதளவு பதற்றத்தை தவிர வேறு எதையும் அவன் காணவில்லை. ஆம், இந்து பதட்டமாகத் தான் இருந்தாள். இது அவளுடைய முதலிரவு அல்லவா...? அவள் முழுமனதுடன் தான் அதற்கு சம்மதித்தாள் என்ற போதிலும், அர்ஜுனிடம் அவள் கண்ட திடீர் மாற்றம், அவளுக்கு சிறிது மனக் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

அவளை கட்டிலில் கிடத்திவிட்டு, அவள் முக பாவத்தை படித்தபடி, அவள் பக்கத்தில், படுத்துக்கொண்டான் அர்ஜுன். அவள் அழகில் மயங்கி விடாமல் இருக்க, முடிந்த அளவு முயற்சி செய்தான். அவன் மெல்ல அவள் கன்னத்தை தொட்டு, அவள் நெற்றியில் முத்தமிட்ட பொழுது, தன் கண்களை மூடிக்கொண்டாள் இந்து.

அவள் சேலைக்கு மேல் லேசாய் தெரிந்த, இருதய அறுவை சிகிச்சை செய்பட்ட தழும்பை, அவன் தொட்ட போது, அவளுக்குள் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அவன் அந்தத் தழும்பில் முத்தமிட்ட பொழுது, அவளுடைய சப்த நாடியும் ஒடுங்கி போனது. அடுத்து நடக்க இருக்கும், மிகப் பெரிய விஷயத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டாள் இந்து. ஆனால், அவள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அவள் நெஞ்சில் காதை வைத்து, அவளுடைய இதயத்துடிப்பை கேட்கலானான் அர்ஜுன். அவனுடைய *ஒன்றுமே செய்யாத* விந்தையான நடவடிக்கையை உணர்ந்து, தன் கண்ணைத் திறந்தாள் இந்து. அவன் நேரத்தை வீணாக்காமல், தன் உடைகளை உரித்தெடுத்துவிடுவான் என்று எதிர்பார்த்திருந்தாள் அவள். ஆனால், இப்போது அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?

இதய சங்கிலி (முடிவுற்றது )Tempat cerita menjadi hidup. Temukan sekarang