"உனக்கு ஒன்னும் இல்லையே?" என்றான் கரிசனத்துடன்.

"இல்ல"

"உன்னுடைய கால் வலிக்கலயே?"

" இல்ல... இப்ப பரவாயில்ல"

" சரி வா, பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடலாம்"

சரி என்று தலையசைத்துவிட்டு, உணவு மேசையை நோக்கி சென்றார்கள். ஒரு நாற்காலியை லேசாய் இழுத்து, அவளை அமரும்படி சைகை செய்தான். அதில் அமர்ந்த அவளுக்கு, அவனே பரிமாறுவதை பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது.

"நான் எடுத்துக்கிறேனே" என்று அவள் சொன்னதைக் கேட்காமல் அவனே பரிமாறினான்.

அவளுக்கு எதை சாப்பிடுவது என்றே புரியவில்லை. அங்கு ஏராளமான டப்பாக்கள் இருந்தன. அதிலிருந்த எல்லாமே அவளுக்கு புதிதாக இருந்தது. அவற்றை எல்லாம் இதற்கு முன் அவள் பார்த்ததே இல்லை. அந்த டப்பாக்களின் மீது, ஏதோ ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்த அனைத்து உணவு வகைகளிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அவள் தட்டில் அவன் வைக்க, அவள் மிரண்டு போனாள்.

"எல்லாத்தையும் டேஸ்ட் பண்ணிட்டு, உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை சாப்பிடு" என்றான்.

"இது எல்லாத்தையும் ருசி பாத்தாலே என்னுடைய வயிறு நிரம்பிடுமே..." என்ற அவளின் வர்த்தைகளை கேட்டு, களுக் என்று சிரித்தான்.

"அப்போ தினமும் ஒன்னொன்னா வரவழச்சி சாப்பிடலாம். இப்போ எது வேணுமோ சாப்பிடு"

"நீங்க சாப்பிடலையா?"

ஆமாம் என்று தலையசைத்துவிட்டு, அவனும் அவள் அருகில் அமர்ந்தான், ஏதோ, அவள் கேட்க வேண்டும் என்று காத்திருந்தவன் போல.

எல்லாவற்றையும், ஒவ்வொன்றாய் ருசி பார்த்தாள் இந்து. அதிலிருந்து ஏதாவது ஒன்றை மட்டும் அவளால் தேர்ந்து எடுக்கவே முடியவில்லை. ஏனென்றால், அனைத்து உணவு வகைகளும் நன்றாக இருந்தது. அவற்றை ருசி பார்த்ததிலேயே அவளுடைய வயிறு நிறைந்து போனது, அவள் கூறியது போலவே. அப்போது அர்ஜுன், அவளின் முன், மற்றும் ஒரு டப்பாவை வைத்தான்.

இதய சங்கிலி (முடிவுற்றது )Tempat cerita menjadi hidup. Temukan sekarang