9 அர்ஜுனின் செயல்

Start from the beginning
                                    

"இல்ல, நான் இந்தியாவில் தான் இருக்கேன்"

"எப்போ இந்தியா வந்த? அர்ஜுன் எப்படி உன்னை இந்தியாவுக்கு வர விட்டாரு?"

"அவன் என்னை அனுப்பி வைக்கல, கூட கூட்டிட்டு வந்துட்டான்"

"அர்ஜுனும் இங்க தான் இருக்காரா? ஆனா எப்படி? அவர் இந்தியாவுக்கு வரவே மாட்டார்னு சொன்னியே... அவங்க அம்மாகிட்டயிருந்து, அவருக்கு லெட்டர் வரல போல இருக்கு?"

"போன மாசம் அவங்க அம்மா இறந்துட்டாங்க"

"நிஜமாவா...? சாரிப்பா தெரியாம சொல்லிட்டேன்" என்றாள் வருத்ததுடன்.

"பரவாயில்லை விடு. நீ ஒரு வேலையில சேந்தா நல்லாயிருக்கும்னு நான் நினைக்கிறேன்"

"ஆனா, நான் ஏற்கனவே ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியில வேலை செஞ்சுக்கிட்டு தானே இருக்கேன்...?"

"அந்த வேலையை ரிசைன் பண்ணிடு. இல்லன்னா, லாங் லீவு எடுத்துக்கோ. இப்போ நான் உனக்கு குடுக்க போற வேலை, உனக்கு லைஃப்ல செட்டில் ஆக உதவியாக இருக்கும்"

"நிஜமாவா? என்ன வேலை? எனக்கு அதைப் பத்தி சொல்லு" என்றாள் ஆவலாக.

"நீ, அர்ஜுன் ஒய்ஃப் கூட இருக்கணும்"

"என்னது அர்ஜுன் ஒய்ஃபா? அர்ஜுனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"

அர்ஜுனுடைய முழு கதையையும் கூறி முடித்தான் கிரி. ஏனென்றால், இந்துவுடன் இருக்க போகும்  ரம்யா, அதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நினைத்தான் கிரி.

"சரி, நான் அவங்களை பாத்துக்கிறேன்"

"ஒரு விஷயத்தை நீ நல்லா ஞாபகம் வெச்சுக்கணும். அர்ஜுன் தவறுகளை மன்னிக்கவே மாட்டான். அவனுக்கு நேர்மை ரொம்ப முக்கியம். அதனால தான், இந்த வேலைக்கு நீ சேரணும்னு நான் ஆசைப்படறேன். அர்ஜுன் விஷயத்துல, நான் வேற யாரையும் நம்ப தயாரா இல்ல"

"உன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமா இருக்கறதுக்காக, நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்."

"உன்னுடைய வேலைக்கு தேவைப்படுற, எதை வேணாலும் நீ கேட்கலாம்... எதை வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம்..."

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now