4 விபரம்

Start from the beginning
                                    

"பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன்"

அழைப்பை துண்டித்தான் அர்ஜுன். கிரிக்கு தெரியும் அவன் ஏன் அந்த பத்து நிமிடத்தை கேட்டான் என்று. இந்துவிற்கு நாளை  கல்யாணம். அதுவும் இரண்டாம் தாரமாக, என்ற செய்தியைக் கேட்டு கொதிக்கும் அவன் ரத்தத்தை குளிர்விக்கத் தான் அந்த பத்து நிமிடம். அவன் நினைத்தது சரி தான்.

நீச்சல் குளத்தின் பக்கத்தில் இருந்த, இரும்பு நாற்காலியில் அமர்ந்து, கண்களை மூடி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் அர்ஜுன். இந்துவின் புகைப்படத்தை பார்த்த நாளிலிருந்து, அவன் எந்த அளவிற்கு நிம்மதி இழந்திருக்கிறான் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். மந்திரத்தால் அவனைக் கட்டிப்போட்டது அவளா, அல்லது அவளுடைய புன்னகையா, என்பது அவனுக்குப் புரியவில்லை. அவனுக்கு நிம்மதியும் இல்லை, தூக்கமும் இல்லை. இந்துகுமாரியால் பல இரவுகளை தூக்கமின்றியும்,  பல பகல்களை நிம்மதியின்றியும் கடந்தான் அர்ஜுன். அந்த பெண் தான் அவனுடைய தூக்கத்தை களவாடிவிட்டாள். நிம்மதியின்மை அவனை வாட்டி வதைத்தது. இந்துகுமாரியை பற்றிய எண்ணம், அவன் மனதிற்கு ஒரு வித வலியைத் தந்தது.

அந்தப் பெண்ணை, காதலித்து விடுவோமோ என்ற பயமும் அவனுக்கு இருந்தது. அவளை அவன் காதலிக்க துவங்கிவிட்டதை ஒப்புக் கொள்ள அவன் பயந்தான். அவள், அவனை நேசிக்க தொடங்கும் வரை, அவளை காதலித்துவிடக் கூடாது என்று அவன் உறுதியாக இருந்தான். ஏனென்றால், ஒரு தலைக்காதல், எப்பொழுதும் வலியை தான் தரும் என்பதை அவன் அம்மாவின் கதையிலிருந்து தெரிந்து கொண்டிருந்தான். அவனுடைய அம்மா செய்த அதே தவறை, செய்ய அவன் விரும்பவில்லை.

அதே நேரம், அவன் காரணம் இல்லாத கோபம் கொண்டான். அவள் எப்படி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கலாம்? எப்படி அவனுடைய அம்மாவின் இதயம் அதற்கு ஒப்புக் கொண்டது...?

சற்று ஆஸ்வாசபடுத்திக் கொண்டு, உண்மையை உணர்ந்து, தன் கண்களை திறந்தான். இந்துவை தன் வாழ்க்கையில் கொண்டு வர வேண்டியது அவனுடைய பொறுப்பு, அவன் அம்மாவின் பொறுப்பல்ல. அவனுடைய அம்மா, தன் இதயத்தை இந்துவிற்கு வழங்கியதன் மூலம், ஏற்கனவே அவன் சென்று சேர வேண்டிய இடத்தை காட்டிவிட்டார். அதோடு அவருடைய வேலை முடிந்தாகிவிட்டது. அவன் அம்மா காட்டிய இடத்திற்கு சென்று சேர வேண்டிய பாதையை வகுக்க வேண்டியது இவனுடைய வேலை.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now