2 இந்து குமாரி

Zacznij od początku
                                    

"அப்புறம் எதுக்கு அவள விட்டுட்டு என் கிட்ட வந்திங்க?"

"என் வாழ்க்கையில நான் செஞ்ச ரொம்ப பெரிய தப்பு அது தான். அவளை இழக்குற வரைக்கும் அவள் எப்படிப்பட்ட உத்தமின்னு நான் உணராம போயிட்டேன். நான் அவளை மட்டும் இழக்கல... என்னுடைய மகனையும் முழுசா இழுந்துட்டேன். என்னால தான் அர்ஜுன் இன்னைக்கு மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கான். அவன் என்னோட பேரை கூட அவன் பேருக்கு பின்னாடி போட்டுக்குறதில்ல. அந்த அளவுக்கு என்னுடைய மரியாதையை அவன்கிட்ட நான் கெடுத்துக்கிட்டேன்." என்றார் வேதனையுடன்.

"அவன் ஒரு மெண்டல். அவனோட வாழ்க்கையில எந்த முடிவையும் எடுக்கிற திராணி இல்லாதவன். என்னை அவமானப்படுத்தின பாவத்துக்காகத் தான் அவன் இன்னைக்கு தனிமரமா நிக்கிறான். கடைசி வரைக்கும் தனியாவே இருக்கறது தான் அவனுடைய தலையெழுத்து."

"வாய மூடு.. அவனை பத்தி இந்த மாதிரியெல்லாம் பேசினா, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். அவனுக்கு நல்ல வாழ்க்கை தான் அமையும். ஏன்னா, உன்னை மாதிரி அவன் யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கல"

"அப்படியா? உங்க புள்ளைக்கு அன்பா இருக்க தெரியுமா? நாலு வார்த்தை அனுசரணையா பேச தெரியுமா? அவனை மாதிரி ஒரு மெண்டலை யாருக்குமே பிடிக்காது"

அடுத்த நொடி, அவள் உடல் அதிரும் வண்ணம் அவள் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. அவள் கழுத்தை பிடித்தார் சங்கர்.

"நான் உன்னை எச்சரிக்கிறேன். இன்னொரு தடவை அவனை மெண்டல்னு சொன்ன, உன்னை கொன்னுடுவேன். ஞாபகம் வச்சுக்கோ"

அவள் கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றார் சங்கர். இப்பொழுதெல்லாம் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தான், அவர்களுக்குள் நடந்து கொண்டிருக்கிறது. காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருந்துவிடாதல்லவா? வேறு வழி இல்லை... இதையெல்லாம் அவர் அனுபவித்து தான் ஆகவேண்டும். விதைத்ததை அறுத்து தானே தீர வேண்டும்...?

.........

லண்டன் செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்துவிட்டிடிருந்த கிரிக்கு, இப்பொழுது லண்டனுக்கு திரும்பிச் செல்வது கேள்விக்குறியாக இருந்தது.

இதய சங்கிலி (முடிவுற்றது )Opowieści tętniące życiem. Odkryj je teraz