கவிக்கிளை

By arun_k29

113 39 22

Poetry works from my writings. இப்புத்தகம் நான் எழுதிய பல கவிதைகளில் மிகவும் விருப்பமானவற்றை தொகுப்பாகக் கொண்... More

யாழமுதன்
மூவுடல் ஓருயிர்
ஆசைமிகு அம்மாவுக்கு...
ஒருவன்
வசமாகிய வசந்தம்
நெஞ்சோரம் பரவசம்
முகவுரை - Bonus chapter
மெய்க்கண்ணாடி (must read)
ஆகாயம் மறைந்ததோ?!
என் பார்வையில்
இதமான மாலை
இதயத்தின் வாசனைப் பூவே
மென் தென்றலே
யாரறிவார் இவள் மனதை?
பதில் சொல்வாயா?
எனை வீழ்த்தியவளே!
தூது செல்
இமைகளின் நிழலில்...
உன்னிடம் தொலைந்தேன்
இருதயத்தில் நின்றாயே!
கனவில் பூத்த அழகே
பூக்கடல்
என் கவிதை நீயடி
எனது விடியல் நீயே!
பூந்தமிழ்
குவியா மலரே!
இளவேனில்
எங்கே ஓடுகிறாய் முகிலே?
செந்தூர மயக்கம்
நிழல்
புத்துயிர் வாசம்
வானில் பூத்த நிலா
கரு மேகம்
புரிகிறது
மனிதநேயம்
மெய்ப்போர்

சொல்லிலடங்கா அழகு!

3 1 1
By arun_k29

இரவின் இருள் உருக்கி,
பூவின் நிழல் பரப்பி,
கேசம் என அலையவிட்டு...
தேசம் எல்லாம் திசை மறந்து,
உந்தன் பின்னே சுற்ற வைத்தாய்!

ஆழ்கடலின் ரகசியத்தைப் பதுக்கி வைத்து,
வான் நிலா முகம் பார்த்த நீர் கொண்டு,
ஒளியலையில் குளித்து வந்த இரு விழிகள்!
முகிலின் சதையில் விளைந்த இமைத்திரைகள்!
மந்திரம் பழகாக் கண்கள்!
வீசும் மெல்லியதொரு மாயப் பார்வையில்,
பேசும் புது மௌனத்தில், சொக்க வைத்தாய்!

மாதுளை முத்துக்களை குழைத்தெடுத்து,
மலரிதழ்களாலே வரிகள் அமைத்து,

வானவில்லில் அஞ்சல் அனுப்பி வைத்து,
மங்கை இதழ்கள் என்றாகி...
முத்தமிட மனம் போதை கொள்ள,
உதட்டை நீ சுழிக்கையில்,
சத்தமில்லாமல் உடைந்தேன் நானும் மெல்ல!

பகலிலே நேரம் போதாதென்று,
கனவிலும் உன் அழகை ரசிக்கிறேன்!
விடியலும் வந்து விழி திறந்தால்,
உடனே உன் முகம் காண துடிக்கிறேன்!

Continue Reading

You'll Also Like

90.5M 2.9M 134
He was so close, his breath hit my lips. His eyes darted from my eyes to my lips. I stared intently, awaiting his next move. His lips fell near my ea...
23.9K 271 24
THIS BOOK WILL HAVE SOME OF BHARATHIYAR'S KAVITHAIKAL WHICH I LIKE THE MOST...AND IAM STARTING THIS WITH PUDHUMAI PEN KAVIDHAI FOR WOMEN'S DAY SPECI...
226M 6.9M 92
When billionaire bad boy Eros meets shy, nerdy Jade, he doesn't recognize her from his past. Will they be able to look past their secrets and fall in...
32.9K 5.1K 188
கற்பனையில் ஓர் காதல் காவியம்..