இன்னார்க்கு இன்னாரென்று...!(...

By NiranjanaNepol

64.3K 3.3K 653

வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில... More

1 மாமல்லனும் பரஞ்சோதியும்
2 யாரவள்?
3 தெய்வீக அழகு
4 இருவரும் ஒன்று தான்
5 நாம் சந்தித்து விட்டோம்
6 இனம் புரியாத ஒன்று...
7 பிடித்திருக்கிறது
8 விரும்புகிறேன்
9 மனம் உடைந்த மாமல்லன்
10 நீ தான் எனக்கு எல்லாம்
11 புது இடம்
12 எதிர்பாராத திருப்பம்
13 உன்னத உணர்வு
14 வீட்டு சாப்பாடு
15 கசப்பான கடந்த காலம்
16 இதயத்தின் குரல்
17 வெறும் காகிதம் தானே?
18 நிச்சயதார்த்தம்?
19 அவள் வருவாள்
20 வரவில்லை...
21 'வீடு', 'இல்லம்' ஆனது
22 கிணற்று தண்ணீர்...
23 வேலைக்காரி
24 பாட்டிக்கு எப்படி தெரியும்?
25 எதிர்பாராத சுவாரஸ்யம்
26 உனக்கு என்ன ஆனது?
27 அதிஷ்டம் அற்றவளா?
28 மாறுதல்...
29 அக்கறை
30 நீண்ட பயணம்
31 என்ன செய்து விட்டாள்?
32 நண்பன் யார்?
33 மனைவியாய்...
33 என்ன அது?
34 வெப்பக் கடத்தல்
35 சிறப்பான போர்வை
36 முன்னா...
37 உங்கள் திட்டமா?
39 மீண்டும் மதுரைக்கே...
40 உளவாளி
39 காத்திருந்த அதிர்ச்சி
40 வரன்
41ஷீலாவின் திட்டம்
42 ஷீலாவா...?
43 எங்கே இருந்தாய்?
44 காதம்பரியின் மகன்
46 பிறந்தநாள்
47 ஆபத்தின் விளிம்பில்
48 நினைவுகள்
49 திருமதி மாமல்லன்
50 புதிய வாழ்க்கை
51 இறுதி பகுதி

45 சந்திப்பு

924 61 11
By NiranjanaNepol

45 சந்திப்பு

கடுமையான கோபத்துடன் வீட்டினுள்  நுழைந்தான் மாமல்லன். நிம்மதி இழந்து காணப்பட்ட அவனது முகத்தை பார்த்தவுடனேயே பரஞ்ஜோதிக்கு புரிந்து போனது, இளந்தென்றலின் வீட்டில் ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்பது.

"என்ன ஆச்சு மல்லா?"

"ஷீலா அவளுடைய கேவலமான ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டா. கோதை ஆன்ட்டிக்கும், பாட்டிக்கும், இளந்தென்றல் என் வீட்டில் தான் தங்கி இருந்தா அப்படிங்கற உண்மை தெரிஞ்சு போச்சு"

"அடக்கடவுளே..."

"எல்லா பழியையும்  என் தலையில போட்டுக்கிட்டு, எப்படியோ நான் விஷயத்தை மேனேஜ் பண்ணிட்டேன்"

"அவங்க எப்படி ரியாக்ட் பண்ணாங்க?"

"அம்மாவுடைய லெட்டர் என்னை காப்பாத்திடுச்சி"

"தேங்க் காட்..."

"நம்ம இதுக்கு ஏதாவது செஞ்சாகணும் பரா. ஷீலா தானா வந்து மாட்டுவான்னு நம்ம சும்மா இருக்க கூடாது. நம்ம ஏன் அவளுடைய வாய்ஸை ட்ரேஸ் பண்ண கூடாது? நம்மளுடைய பிரசன்டேஷன் ஏதாவது ஒண்ணுத்துல நிச்சயம் அவளோட வாய்ஸ் ரெக்கார்டிங் இருக்கும்."

"நல்ல ஐடியா"

"இன்னைக்கே பண்ணிடு"

"ஓகே"

.....

தென்றலின் வாடிய முகத்தை கண்ட கோதை,

"தென்றல்..." என்று அவளை அழைத்தார்.

"என்னங்கம்மா?"

"இங்கே வா"

அவர் அருகில் வந்து முழங்காலிட்டு அமர்ந்தாள் தென்றல்.

"என் மேல வருத்தமா?"

"என்னை மன்னிச்சிடுங்க மா. உங்கள காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல. அதனால தான் அவர் வீட்ல தங்க வேண்டியதா போச்சு..."

"பரவாயில்ல விடு தென்றல். யாரோ ஏதோ சொன்னதைக் கேட்டு நான் கோவத்துல பேசிட்டேன். நீயோ, கதம்பரியோட மகனோ தப்பானவங்களா இருக்க முடியாது. ஒரு தடவை காதம்பரி என்கிட்ட சொன்னா, 'நானே என் மகன் கிட்ட எதுவும் சொல்லனாலும் கூட அவனாவே கண்டு பிடிச்சுடுவான்னு' சொன்னா. அவ சொன்ன மாதிரியே, உன்னை பார்த்த போது மாமல்லன் மனசுல எதையோ உணர்ந்திருக்கான் பாரேன்... இது எல்லாமே விதிக்கப்பட்டிருக்கு..." என்று சில நொடி தாமதித்த அவர்,

"உனக்கு மாமல்லனை பிடிக்கலையா?" என்றார்.

அவருக்கு என்ன கூறுவது என்று புரியவில்லை தென்றலுக்கு.

"அவரோட அணுகுமுறை வேணும்னா தப்பா இருக்கலாம் தென்றல். அவருடைய எண்ணம் தப்பானதா தெரியல. அவர் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு தானே நினைச்சிருக்காரு? கொஞ்ச நாள்ல அவரு உனக்கு புருஷனாக போறவரு. இந்த உறவுக்கு நீ உன்னை தயார்படுத்திக்கணும் இல்லையா..."

தன் அம்மாவிடம் உண்மையை மறைப்பதற்காக வருத்தம் ஏற்பட்டது இளந்தென்றலுக்கு. ஆனால் தனக்கு நடந்த திருமணத்தைப் பற்றி அவர்களுக்கு தெரிந்தால், அவர் நிச்சயம் காயப்படுவார் என்று அவளுக்கு தெரியும்.

"உண்மையிலேயே அவர் சாப்பிட்ட சாப்பாட்டில் காரத்தை நிறைய போட்டியா?"

தலை குனிந்தபடி ஆம் என்று தலையசைத்தாள் இளந்தென்றல்.

"அந்த மாதிரி நீ செய்யலாமா? நம்முடைய கோபத்தை சாப்பாட்டு மேல காட்டக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா?"

"சாப்பாடு காரமா இருக்குன்னு தெரிஞ்சா, அவர் சாப்பிட மாட்டார்னு நினைச்சேன் மா"

"சாப்பிடாம நிறுத்திட்டாரா?

"இல்ல. பிடிவாதமா எல்லாத்தையும் சாப்பிட்டே தீருவேன்னு சாப்பிட்டார். அவரோட சிவந்த கண்ணை பார்த்து நான் ரொம்ப பயந்துட்டேன்"

"பாவம் அவருக்குன்னு சமைச்சு கொடுக்க யாரும் இல்ல இல்லையா"

"நீங்க தேவையில்லாம எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க. போக போக எல்லாம் சரியாயிடும்"

"இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு. இல்லன்னா, உன்னோட கல்யாணத்துக்கு பிறகு, நானும் அம்மாவும் இங்க இருந்துகிட்டு, நீ அங்க மாமல்லன் கூட எப்படி இருக்கியோன்னு பரிதவிச்சிக்கிட்டே இருப்போம்" என்றார்.

"உங்களை ஸ்டிரெஸ் பண்ணிக்காதீங்க மா.  உங்களை நிச்சயம் நான் கவலை பட விட மாட்டேன்"

"நீயும் மாமல்லனும் சந்தோஷமா இருந்தா, நாங்க கவலை இல்லாம நிம்மதியா இருப்போம்" என்றார் வடிவாம்பாள்.

சரி என்று தலையசைத்த இளந்தென்றல், திருமணத்திற்கு பிறகு தன் அம்மாவையும் பாட்டியையும் மதுரையில் விட்டுவிட்டு, தான் சென்னைக்கு போக வேண்டி இருப்பதை பற்றி எண்ணினாள்.

.......

இளந்தென்றாலின் குடும்பத்தோடு தொடர்பு கொள்வதை குறைத்துக் கொண்டான் மாமல்லன். தன்னால் இளந்தென்றலுக்கு பிரச்சனை ஏற்படுவதை அவன் விரும்பவில்லை. ஏனென்றால், மனித மனம் பலவற்றையும் யோசிக்க கூடியது. கோதையும், வடிவாம்பாளும் அவளை சந்தேகிப்பதை அவன் விரும்பவில்லை.

இதற்கிடையில், திருமணத்திற்கு செய்ய வேண்டிய சடங்குகளை ஒன்றன்பின் ஒன்றாக செய்து முடித்தார்கள் கோதையும் பாட்டியும்.

மறுபுறம், தன்னுடைய திட்டம் பலிக்காமல் போனதால்  ஏமாற்றமடைந்தாள் ஷீலா. அவள் எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை. மாமல்லன் அந்த சூழ்நிலையை  எப்படி சமாளித்தான் என்பதும் அவளுக்கு புரியவில்லை. அவளால் தோல்வியை தாங்க முடியவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவளது மனம் பரபரத்தது. ஏனென்றால், அவளிடம் கால அவகாசம் இல்லை. ஏனென்றால், திருமணநாள் நெருங்கிக் கொண்டிருந்தது. மறுபடியும் கோதைக்கு ஃபோன் செய்ய அவளுக்கு தைரியம் இருக்கவில்லை. ஏனென்றால், மாமல்லன் அவளது அழைப்பை வைத்தே அவளை பிடித்து விட முயல்வான் என்று அவளுக்கு தெரியும். அதனால், சரியான சந்தர்ப்பத்திற்காக அவள் காத்திருந்தாள்.

.....

இளந்தென்றலின் வீட்டிற்கு தேவையில்லாமல் வருவதில்லை  என்ற தனது முடிவில் மாமல்லன் திடமாய் இருப்பான் என்பதை இளந்தென்றல் எதிர்பார்க்கவில்லை. அங்கு வருவதையே அவன் சுத்தமாய் நிறுத்தி விட்டான். திருமண வேலைகள் குறித்து அவர்களுடன் தொடர்பில் இருந்தது பரஞ்சோதி மட்டும் தான். மாமல்லனை பார்க்காமல் இருந்தது இளந்தென்றலுக்கு மன வருத்தத்தை அளித்தது.

இரவு தூக்கம் வராமல், கட்டிலில் பிரண்டு கொண்டிருந்தாள் இளந்தென்றல். திடீரென அவளது கைபேசி குரல் எழுப்ப, அதிர்ந்தாள். சந்தேகமில்லாமல் அந்த அழைப்பு மாமல்லனிடம் இருந்து தான் வந்தது. அவள் கடிகாரத்தை பார்க்க, மணி பன்னிரண்டாக பத்து நிமிடம் இருந்தது.

"ஹலோ..."

"இன்னும் நீ தூங்கலையா?" என்றான் மாமல்லன்.

"இல்ல"

"ஏதாவது பிரச்சனையா?"

"ம்ம்ம்ம் "

"என்ன பிரச்சனை தென்றல்?"

"நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்"

அதைக் கேட்ட மாமல்லனின் இதழ் புன்னகை பூத்தது.

"அப்படியா?"

"ஆமாம்,"

"கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு"

"எனக்கு எதுக்கு ஃபோன் பண்ணீங்கன்னு சொல்லுங்க"

"ராத்திரி முழுக்க உன்னை தூங்க விடாம பேசிக்கிட்டு இருக்கலாம்னு தான்"

"அதை நீங்க நேர்ல வந்து செய்யலாம் இல்ல?" என்றாள் சோகமாய்.

"சீரியஸா தான் சொல்றியா?"

"ஆமாம். ஏன் கேக்குறீங்க?"

"ஒருவேளை, நான் இப்போ உன் வீட்டுக்கு வெளியில நின்னுகிட்டு இருந்தா, என்ன செய்வ?"

"நேரா வந்து உங்க கைய புடிச்சு என் ரூமுக்கு கூட்டிகிட்டு வருவேன்"

"அப்படின்னா அதை செய்"

"என்ன சொல்றீங்க?"

"நான் உன் வீட்டுக்கு வெளியில தான் இருக்கேன்"

"என்ன்னனது?" என்றபடி தன் அறையை விட்டு வெளியே எழுந்து ஓடி வந்தாள் இளந்தென்றல். கதவைத் திறந்தவள், அங்கு மாமல்லன் நின்றிருந்ததை பார்த்து,

"உண்மையிலேயே நீங்களா?" என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளது அந்த செயலால் வியந்து போனான் மாமல்லன். முன்பொரு சமயம், இதே இடத்தில் தான், அவனிடம் பேசக்கூட அவள் தயாராக இல்லை. ஆனால் இன்றோ, மாமல்லனைத் தவிர வேறு எதை பற்றியும் கவலைப்பட அவள் தயாராக இல்லை.

"ஐ மிஸ் யூ"

அந்த சுற்றுப்புறத்தில் தன் கண்களை ஓட விட்டான் மாமல்லன். அவனுக்கு தெரியும், தமிழின் ஆட்கள் இளந்தென்றலின் வீட்டை கண்காணித்தபடி அங்கு இருக்கிறார்கள் என்பது.

"தென்றல் ரிலாக்ஸ். யாராவது பார்க்கப் போறாங்க"

"சரி, வாங்க உள்ள போகலாம் "

"நெஜமா தான் சொல்றியா? அம்மாவும் பாட்டியும் இருப்பாங்களே"

"பாட்டி, தூங்கினா எழுந்துக்க மாட்டாங்க. அம்மாவும் மாத்திரை போட்டு தூங்குறாங்க"

அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றாள் இளந்தென்றல். அவளது அறைக்கு வந்த அடுத்த நொடி, அவளை அணைத்துக் கொண்டான் மாமல்லன்.

"நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் தென்றல். இந்த சடங்கு சம்பிரதாயத்தை எல்லாம் ஒதுக்கி தள்ளிட்டு, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாயிருக்கும்"

"இன்னும் மூணு நாள் தானே இருக்கு. அதுக்கப்புறம் நம்ம எப்பவும் ஒண்ணா தானே இருக்க போறோம்? சரி, நீங்க எதுக்கு இங்க வந்தீங்கன்னு சொல்லுங்க"

"எனக்கு *இன்னைக்கு* உன் கூட இருக்கணும்னு தோணிச்சி"

அவனை கட்டிலில் அமர வைத்து,

"சரி இருங்க" என்று சிரித்தாள்.

அவள் கையைப் பிடித்து முத்தமிட்டான் மாமல்லன். அவன் உணர்ச்சிவசப்பட்டு இருந்தது நன்றாகவே தெரிந்தது அவளுக்கு.

"ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?" என்றாள்.

"நீ என் கூட இருந்தா நான் நல்லா தான் இருப்பேன்" என்றான்.

அப்பொழுது கடிகாரம் சரியாய் பன்னிரெண்டை தொட்டது.

"தென்றல் எனக்கு விஷ் பண்ணு" என்றான்.

"எதுக்கு விஷ் பண்ணனும்?"

"இந்த நாளை கொண்டாட நான் நினைச்சதே இல்ல. ஆனா இன்னைக்கு, நீ என்னை விஷ் பண்ணணும்னு நினைக்கிறேன். இன்னைக்கு என்னோட பர்த்டே" என்றான்.

"என்ன்னனது? இன்னைக்கு உங்க பர்த்டேவா? இதை ஏன் நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லல? சொல்லி இருந்தா உங்களுக்காக நான் ஏதாவது செஞ்சிருப்பேன் இல்ல? இன்னைக்கு உங்க பர்த்டேன்னு கூட எனக்கு தெரியல... நான் எல்லாம் என்ன ஒரு பொண்டாட்டி?" என்று புலம்பினாள்.

"ரிலாக்ஸ் தென்றல்" என்று சிரித்தான் மாமல்லன்.

"எப்படி நான் ரிலாக்ஸா இருக்கிறது? இன்னிக்கு உங்க பர்த்டேவாச்சே"

"ஆமாம்... இன்னைக்கு என்னோட பர்த்டே தான்"

தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய டப்பாவை எடுத்து, அதிலிருந்த மோதிரத்தை வெளியில் எடுத்தான். அந்த மோதிரம் பழைய டிசைனில் இருந்தது. அதை அவளது விரலில் அணிவித்தான்.

"என்னங்க இது? உங்க பிறந்தநாளுக்கு நான் தானே உங்களுக்கு கிஃப்ட் கொடுக்கணும்?"

"நீ தான் எனக்கு உன்னையே கொடுத்திருக்கியே... என்னைப் பொறுத்தவரை அது தான் விலைமதிப்பில்லாதது. இது எங்க அம்மாவுடைய மோதிரம். இதை உனக்கு கொடுக்கணும்னு தோணிச்சி"

"ஆனா உங்களுக்கு கொடுக்க நான் எதுவுமே வாங்கலையே..." என்றாள் வருத்தத்துடன்.

"கொடுக்கணும்னு நினைச்சுட்டா, வாங்கி தான் கொடுக்கணும்னு அவசியம் இல்ல"

"ஆனா, என்கிட்ட எதுவுமே இல்லையே"

"பரவாயில்ல விடு. எங்க அம்மா இறந்ததற்கு பிறகு, நான் பிறந்தநாள் கொண்டாடுறதையே விட்டுட்டேன். ஆனா இன்னைக்கு, உன் கூட இருக்கணும்னு எனக்கு தோணிச்சி"

"நம்ம கல்யாணத்துக்கு பிறகு வர்ற முதல் பிறந்த நாளாச்சே... எப்படி சும்மா விடுறது?"

"நீ உண்மையிலேயே அதை கல்யாணம்னு நினைக்கிறாயா?"

"எதுக்காக அதை திரும்ப திரும்ப கேக்குறீங்க?"

"ஏன்னா, நம்ம கல்யாணம் நடந்தது நடு ரோட்ல... உன்னோட சம்மதம் இல்லாம... எதிர்பாராத விதத்துல..."

"அது நடந்த விதம் வேணா வித்தியாசமா இருக்கலாம். அதுக்காக அது கல்யாணம் இல்லைன்னு ஆயிடாது. இப்ப கல்யாணம்ங்குற பேர்ல நம்ம என்ன செஞ்சுகிட்டு இருக்கோமோ, அது நம்ம குடும்பத்துக்காகவும் இந்த சமுதாயத்துக்காகவும் தான். என்னை பொறுத்தவரை, நான் எப்பவோ உங்க வைஃப் ஆயிட்டேன்"

அவளை மெல்ல தன் அருகில் எடுத்த அவன்,

"அப்படின்னா, புருஷனோட பிறந்தநாளுக்கு, பொண்டாட்டி ஸ்பெஷலா ஏதாவது கொடுக்கலாமே" என்றான்.

"என்ன ஸ்பெஷல்?"

"யாருக்காக எல்லாத்தையும் விட்டுட்டு நான் இங்க வந்திருக்கேனோ, அவ தான் எனக்கு ஸ்பெஷல்"என்றான்.

அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று புரியாமல் சில நொடி விழித்த இளந்தென்றல், தன்னை சுதாகரித்துக் கொண்டு, அவனது கன்னங்களில் மென்மையாய் முத்தமிட்டாள். அவரிடமிருந்து விலகிச் கொண்ட மாமல்லன்,

"நான் கிளம்புறேன்" என்றான்.

"என்ன ஆச்சு?

"ஒன்னும் ஆகல"

"போகாதீங்க"

"நான் போகணும் தென்றல்"

"உங்க முகத்துல ஏன் திடீர்னு பயம் தெரியுது?"

"எனக்கு பயமா தான் இருக்கு. நீ என்கிட்ட வந்தா, என்னை நான் முழுசா இழந்திடுவேன்னு எனக்கு பயமா இருக்கு"

"நீங்க போக தான் போறீங்களா?"

"ஆமாம். நீ படுத்து தூங்கு" என்று அங்கிருந்து கிளம்பினான் அவள் தூக்கத்தை பறித்து, தன் தூக்கத்தை தொலைத்த மாமல்லன்.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

48.9K 1.1K 40
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே க...
30K 1.1K 94
ஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம்...
49.4K 1.3K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
96.8K 3.5K 49
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில்...