இன்னார்க்கு இன்னாரென்று...!(...

By NiranjanaNepol

56.3K 3.3K 652

வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில... More

1 மாமல்லனும் பரஞ்சோதியும்
2 யாரவள்?
3 தெய்வீக அழகு
4 இருவரும் ஒன்று தான்
5 நாம் சந்தித்து விட்டோம்
6 இனம் புரியாத ஒன்று...
7 பிடித்திருக்கிறது
8 விரும்புகிறேன்
9 மனம் உடைந்த மாமல்லன்
10 நீ தான் எனக்கு எல்லாம்
11 புது இடம்
12 எதிர்பாராத திருப்பம்
13 உன்னத உணர்வு
14 வீட்டு சாப்பாடு
15 கசப்பான கடந்த காலம்
16 இதயத்தின் குரல்
17 வெறும் காகிதம் தானே?
18 நிச்சயதார்த்தம்?
19 அவள் வருவாள்
20 வரவில்லை...
21 'வீடு', 'இல்லம்' ஆனது
22 கிணற்று தண்ணீர்...
23 வேலைக்காரி
24 பாட்டிக்கு எப்படி தெரியும்?
25 எதிர்பாராத சுவாரஸ்யம்
26 உனக்கு என்ன ஆனது?
27 அதிஷ்டம் அற்றவளா?
28 மாறுதல்...
29 அக்கறை
30 நீண்ட பயணம்
31 என்ன செய்து விட்டாள்?
32 நண்பன் யார்?
33 மனைவியாய்...
33 என்ன அது?
34 வெப்பக் கடத்தல்
35 சிறப்பான போர்வை
36 முன்னா...
37 உங்கள் திட்டமா?
39 மீண்டும் மதுரைக்கே...
40 உளவாளி
39 காத்திருந்த அதிர்ச்சி
40 வரன்
41ஷீலாவின் திட்டம்
42 ஷீலாவா...?
44 காதம்பரியின் மகன்
45 சந்திப்பு
46 பிறந்தநாள்
47 ஆபத்தின் விளிம்பில்
48 நினைவுகள்
49 திருமதி மாமல்லன்
50 புதிய வாழ்க்கை
51 இறுதி பகுதி

43 எங்கே இருந்தாய்?

788 59 13
By NiranjanaNepol

43 எங்கே இருந்தாய்?

இளந்தென்றலையும், பாட்டியையும் வீட்டில் கொண்டு வந்து விட்டான் பரஞ்சோதி. அந்த வீட்டின் சுற்றுப்புறத்தை அவன் கண்கள் துழாவின. அந்த வீட்டின் வலது மூலையிலிருந்து அவனை நோக்கி கையசைத்தான் தமிழ். அவனை பார்த்து லேசாய் தலையசைத்தான் பரஞ்சோதி.

அப்பொழுது அவர்கள் வீட்டின் உள்ளே இருந்து வந்த ஒரு பெண், இளந்தென்றலின் கண்களை பின்னால் இருந்து பொத்துவதை பார்த்தான் பரஞ்சோதி. அவளது கைகளை தடவிப் பார்த்த இளந்தென்றல்,

"காவியா" என்றாள்.

அவள் கண்களில் இருந்து தன் கைகளை எடுத்த காவியா, இளந்தென்றலை அனைத்துக் கொண்டு,

"எப்போ வந்த?" என்றாள்.

"நேத்து வந்தேன்"

"நேத்து வந்தவளுக்கு எனக்கு போன் பண்ணனும்னு கூட தோணலையா...? உனக்கு கல்யாணமாமே..."

"சாரிப்பா"

"என்னை மறந்துட்டியா?"

"உன்னை எப்படி மறக்கிறது? இப்போதிலிருந்து நீ தானே என் கூட இருக்க போற..."

காவியாவை சந்தேக கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தான் பரஞ்ஜோதி. இந்நாளில், யாரைப் பார்த்தாலும் சந்தேகமாக இருக்கிறது அவனுக்கு. 

"பரஞ்சோதி அண்ணா, உள்ள வாங்களேன்" என்றாள் இளந்தென்றல்.

"இல்ல தென்றல். முக்கியமான வேலை இருக்கு. நான் போகணும்"

சரி என்று தலையசைத்தாள் இளந்தென்றல். காவியாவை நோட்டமிட்டபடி அங்கிருந்து சென்றான் பரஞ்சோதி. தனக்காக தமிழ் காத்திருந்த இடத்தில் அவன் வண்டியை நிறுத்த, காரில் ஏறிக்கொண்டான் தமிழ்.

"சார் நீங்க சொன்ன அதே பொம்பளை தான் அவ. நம்ம இப்ப என்ன சார் செய்ய போறோம்? எப்படி அந்த பொம்பளையை டிரேஸ் பண்ண போறோம்?"

"தன்னோட ஃபோன் நம்பரை அவ மாத்திட்டா. அதுல பெருசா ஆச்சரியப்பட ஒண்ணும் இல்ல. நான் இதைப் பத்தி மல்லன் கிட்ட பேசிட்டு சொல்றேன்"

"சரிங்க சார்"

அவன் காரை விட்டு கீழே இறங்கியதும், வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான் பரஞ்சோதி.

........

இளந்தென்றலும், காவியாவும், மதிய உணவை தயாரிக்க பாட்டிக்கு உதவினார்கள். அதை செய்து முடித்த பின், காவியாவை தன் அறைக்கு அழைத்துச் சென்ற இளந்தென்றல், அவளிடம் தன் கதையை மொத்தமாய் கூறி முடித்தாள். அதைக் கேட்ட காவியா திகைத்துப் போனாள்.

"என்னடி இது, சினிமா பாக்குற மாதிரி இருக்கு...? நிஜ வாழ்க்கையில கூட இப்படி எல்லாம் நடக்க முடியுமா?" என்றாள் காவியா.

"அவருக்கும் அவரோட ஃப்ரெண்டுக்கும் எல்லாமே சாத்தியம் தான்..." என்றாள் இளந்தென்றல்.

"இப்படிப்பட்ட ஒரு ஃபிரண்டை பத்தி நான் இதுக்கு முன்னாடி கேட்டதே இல்ல" என்றாள் காவியா.

"உண்மை தான். அவர் வேற யாரும் இல்ல, என்னை காலைல வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு போனாரு இல்ல, அவர் தான்"

"ஓ அவர் தானா...? பார்க்க ரொம்ப சிம்பிளா இருக்காரு"

ஆமாம் என்று தலையசைத்தாள் இளந்தென்றல்.

.........

பரபரவென ஓடிவந்த பரஞ்சோதியை புரியாமல் பார்த்தான் மாமல்லன்.

"மல்லா...."

"என்ன ஆச்சு பார? எதுக்காக இப்படி ஓடி வர?"

"தென்றலை ஃபாலோ பண்றது யாருன்னு தெரியுமா?"

"யாரு?" என்றான்.

"ஷீலா"

"என்ன்னனது?"

"ஆமாம்"

"நிச்சயமா தெரியுமா?"

"99% நிச்சயமா தெரியும். அது ஷீலாவா தான் இருக்கணும். தென்றல் வந்த அதே பிளைட்ல தான், அவளும் பர்தா போட்டுக்கிட்டு மதுரைக்கு வந்திருக்கா"

"அப்படின்னா, தென்றல் வீட்டை பர்தாவோட நோட்டம் விட்டது  ஷீலா தானா?"

"இல்ல. அது ஷீலாவா இருக்க முடியாது. அது ஷீலாவால அனுப்பப்பட்ட ஆளா இருக்கணும்"

"இப்போ நம்ம என்ன செய்றது? இதை நம்ம ஈஸியா விட முடியாது "

"நிச்சயம் விட வேண்டாம்... அவ முட்டாள் தனமா ஏதாவது செய்றதுக்கு முன்னாடி நம்ம அவளை பிடிச்சாகணும்"

"நீ அவளுக்கு ஃபோன் பண்ணி பார்த்தியா?"

"பார்த்தேன். அவளுடைய போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கு. அவ ஃபோன் நம்பரை மாத்தி இருக்கணும்"

"நான் கமிஷனருக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்றேன். அவளோட ஹாஸ்டல் ஃபிரண்ட்ஸ் யாருக்காவது அவ போன் பண்ணா, அவளை டிரேஸ் பண்ணிடலாம்"

"பிரில்லியன்ட்" என்றான் பரஞ்சோதி  சந்தோஷமாக.

கமிஷனருக்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறினான் மாமல்லன். அது மாமல்லன் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அவரே நேரடியாக கையில் எடுத்துக் கொண்டார். அழைப்பை துண்டித்த மாமல்லன், எதையோ யோசித்தான்.

"என்ன யோசிக்கிற, மல்லா?"

"ஷீலாவை பத்தி சொல்லி, நான் தென்றலை அலர்ட் பண்ணனும்னு நினைக்கிறேன்"

"அவங்க பயந்துட போறாங்க"

"வேற வழி இல்ல. அவ ஒரு இன்னசென்ட். ஷீலாவை பத்தி அவளுக்கு தெரியணும். இல்லன்னா, ஷீலா அதை தனக்கு சாதகமா பயன்படுத்திக்க இருக்கு"

"என்ன சொல்ற நீ?"

"ஷீலாவை நேர்ல பார்த்தா, அவளை ஃபிரண்ட் மாதிரி ட்ரீட் பண்ண ஆரம்பிச்சிடுவா தென்றல்"

"அப்படியா?"

"அவளை சத்தம் போட்டேன்னு என்கூட சண்டை போட்டா தென்றல்"

"அப்ப நிச்சயம் நீ சொல்லி தான் தீரனும்" என்று சிரித்தான் பரஞ்ஜோதி.

தென்றலுக்கு மாமல்லன் ஃபோன் செய்ய, அந்த இடம் விட்டு நகர்ந்தான் பரஞ்சோதி.

சைலன்ட் மோடில் இருந்த, தனது கைபேசி ஒளிந்ததை பார்த்த இளந்தென்றலின் முகம் புன்னகையை உதிர்த்தது. அந்த அழைப்பு யாருடையதாய் இருக்க வேண்டும் என்பதை அவளுடைய புன்னகை உணர்த்தியது, காவியாவிற்கு.

"நீ பேசு நான் ஆன்ட்டியை பார்த்துட்டு வரேன்" என்று அங்கிருந்து சென்றாள் காவியா.

"ஹலோ..."

"என் பொண்டாட்டி என்ன பண்ணிக்கிட்டு இருக்கா?" என்றான் மாமல்லன்.

"புருஷன் எப்ப வருவாருன்னு எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கா. இப்போ நீங்க எதுக்காக எனக்கு ஃபோன் பண்ணீங்க? நீங்க இங்க வரலையா?" என்றாள் கவலையாக.

"நான் ஏன் வராம போக போறேன்? சாயங்காலம் நிச்சயம் வருவேன். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு தான் ஃபோன் பண்ணேன்"

"அவ்வளவு என்ன அவசரம்?"

"அவசரம் தான்"

"ஏதாவது சீரியஸா?"

"ஆமாம். உனக்கு ஷீலாவை ஞாபகம் இருக்கா?"

"ஷீலாவா? ஒரு தடவை நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்களே, அவங்களா?"

"அவளே தான்"

"ஞாபகம் இருக்கு... பாவம் அவங்க, நீங்க தான் அவங்களை வேலையை விட்டு தூக்கிட்டீங்களே..."

"தென்றல், நீ பாவ படுற அளவுக்கு அவ நல்லவ இல்ல. அவ நமக்கு எதிரா ஏதோ பிளான் பண்ணிக்கிட்டு இருக்கிறதா நாங்க சந்தேகப்படுறோம்"

"நெஜமாவா?"

"ஆமாம். அவ ஏதாவது ஒரு விதத்தில் உன்னை நெருங்க முயற்சி பண்ணுவா. தயவுசெய்து அவளுடைய சூழ்ச்சியில மாட்டிக்காத."

"கவலைப்படாதீங்க. நான் ஜாக்கிரதையா இருப்பேன்"

"அவ நீ நினைக்கிற மாதிரி இல்ல. ரொம்ப ஆபத்தானவ. அவ தான் நம்ம வீட்டுக்கு பாட்டியை அனுப்பி வச்சவ. அவ அடுத்து என்ன செய்ய திட்டம் போட்டுக்கிட்டு இருக்கான்னு தெரியல. நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்"

"நான் ஜாக்கிரதையா இருப்பேன் நீங்க கவலைப்படாதீங்க"

"கவலைப்படாம இருக்க முடியாது, தென்றல். உனக்கு தெரியுமில்ல... எனக்கு எல்லாமே நீ தான். உனக்கு ஏதாவது ஆனா, நான் நொருங்கி போயிடுவேன்"

"ஆனா அதே நேரம், நீங்க எனக்கு எதுவும் ஆக விட மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்"

"நீ என்னை நம்புறல்ல?"

"நான் என் மனசுல இருக்கிறதை உங்ககிட்ட சொல்லல அப்படிங்கிறதுக்காக என் மனசுல எதுவும் இல்லன்னு அர்த்தம் இல்ல. நான் கண்ணில்லாத குருடு இல்ல. நீங்க எனக்காக செய்யற எல்லாத்தையும் நான் பார்த்துக்கிட்டு தானே இருக்கேன்...? நீங்க என் மேல வச்சிருக்க அக்கறையும், காதலும் எனக்கு நல்லாவே தெரியும். ஆரம்பத்துல, உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியலையேன்னு நான் எவ்வளவு வருத்தப்பட்டேன்னு உங்களுக்கு தெரியுமா?"

"அப்படியா? பரவாயில்லையே... என் பொண்டாட்டி எனக்காக இப்படியெல்லாம் யோசிச்சாளா?"

"உங்களுக்கு தெரியாதது இன்னும் நிறைய இருக்கு. கல்யாணத்துக்கு பிறகு அதையெல்லாம் நீங்க தெரிஞ்சுக்கவீங்க"

"ஆவலோட காத்துகிட்டு இருக்கேன்... முக்கியமா, நீ என்னை எப்படி குளிர் ஜுரத்துலயிருந்து காப்பாத்தினேன்னு தெரிஞ்சிக்கனும்..."

இளந்தென்றலின் பக்கம் அமைதி நிலவியது. அவளது நிலையை உணர முடிந்தது மாமல்லனால்.

"தென்றல்... கொஞ்சம் தண்ணி குடி..." என்றான் கிண்டலாய்.

"நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்" என்று அழைப்பு தூண்டித்தாள், இளந்தென்றல், மாமல்லனை புன்னகைக்க செய்து.

மாலை

லேண்ட் லைன் தொலைபேசியின் அலறலை கேட்டு கண்விழித்த கோதை, அழைப்பை ஏற்றார். அந்த அழைப்பு யாரிடமிருந்து வந்திருக்கக் கூடும் என்று வாசகர்கள் யூகித்திருக்கலாம். கோதையின் முகம் பொலிவிழந்தது. உதிர்க்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் அவரது காதில் திராவகம் என பாய்ந்தது.

"யார் பேசுறீங்க?"

"பேசுறது யாருன்னு தெரிஞ்சுக்கணுமா இல்ல உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கணுமா?"

"என்ன உண்மை?"

"உங்க மக, உங்க கிட்டயிருந்து மறச்சுக்கிட்டு இருக்காளே அந்த உண்மையைத்தான் சொல்றேன்"

"நீங்க எதை பத்தி பேசுறீங்கன்னு எனக்கு புரியல"

"முழு உண்மையும் தெரிஞ்சுக்கணும்னா நான் பேசுறதை இடையூறு செய்யாம அமைதியா கேளுங்க"

அமைதியானார் கோதை.

"கடந்த மூனு மாசமா உங்க மக எங்க தங்கியிருந்தாங்குற விவரம் ஏதாவது உங்களுக்கு தெரியுமா? அவ உண்மையிலேயே அங்க என்ன செஞ்சுகிட்டு இருந்தான்னு உங்களுக்கு தெரியுமா? உங்க மனசை திடப்படுத்திக்கோங்க. அவ உடம்பு சரியில்லாத ஒரு வயசானவங்கள கவனிச்சுக்கிட்டு இருந்தான்னு சொன்னது பொய். அவளை கல்யாணம் பண்ணிக்கிறதா நாடகமாடிக்கிட்டு இருக்கானே ஒருத்தன்... அவன் கூடத்தான் அவ தங்கி இருந்தா... மாமல்லன். அவன் ஒரு கடஞ்சி எடுத்த பொம்பளை பொறுக்கி. இதெல்லாம் அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு. உங்களுக்கு உடம்பு சரியில்ல அப்படிங்கிற சாக்கை வச்சுக்கிட்டு, உங்க பொண்ணை திறமையா வளச்சு போட்டுட்டான். உங்க பொண்ணு மூணு மாசமா அவன் கஸ்டடியில தான் இருந்தா"

"இல்ல... இதெல்லாம் உண்மையா இருக்க முடியாது. அப்படி இருந்தா ஏன் அவரு அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறாரு?"

"ஏன்னா, உங்க பொண்ணோட அழகுல அவன் இன்னும் திருப்தி அடையல. அவளை கல்யாணம் பண்ணி காலமெல்லாம் அவளை கூடவே வச்சி காப்பாத்துவானு நினைக்கிறீங்களா? இல்ல இதெல்லாம் வெறும் கண்துடைப்பு. அவனைப் பத்தின உண்மை உங்களுக்கு தெரிய வரும் போது, உங்க கையில இருந்து எல்லாமே நழுவி போயிருக்கும்"

"இல்ல. அவன் என் ஃப்ரெண்டோட மகன்"

"பொய்... அவன் தான் அவங்களோட மகன் அப்படிங்கிறதுக்கு  ஏதாவது ஆதாரம் கொடுத்தானா? உங்க பொண்ணு தான் உங்க ஃபிரண்டை பத்தி அவன் கிட்ட சொல்லியிருக்கணும். ஏன்னா, உங்க பொண்ணு அவனை கண்மூடித்தனமா நம்புறா. அவன்கிட்ட *எல்லாத்தையும்* ( என்பதை அழுத்தி) இழந்த பிறகு, அவளால வேற என்ன செய்ய முடியும்? அவனை மாதிரி ஒரு பொம்பளை பொறுக்கியை கல்யாணம் பண்ணிக்கிறதை விட, அவ காலம் பூரா தனியாவே வாழலாம். ஏன்னா, எந்த நேரமும் அவன் அவளை வீட்டை விட்டு துரத்திடுவான். இந்த உண்மை தெரியாம, அந்த பொறுக்கி கிட்ட உங்க பொண்ணை நீங்க அனுப்பி வச்சிட்டீங்க. அவனும் நல்லவன் மாதிரி நடிச்சு, ராத்திரி பகல்ன்னு பாக்காம, உங்க பொண்ணை பிழிஞ்சு எடுத்துட்டான். உங்க பொண்ணு முழுகாம இருக்கான்னு நினைக்கிறேன். அதனால தான் அவனோட உண்மை முகம் தெரியுறதுக்கு முன்னாடி, தன்னை  நல்லவனா காமிச்சிக்க, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்திருக்கான். நீங்க ஏமாறக்கூடாதுன்னு தான் நான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்றேன். நம்புறதும், நம்பாம போறதும் உங்க விருப்பம்" என்று அழைப்பை துண்டித்தாள் ஷீலா.

தன் உடல் நிலையையும் மறந்து, கோபத்துடன் அறையை விட்டு வெளியே வந்தார் கோதை. அப்பொழுது தான் காவியாவை வழி அனுப்பி விட்டு உள்ளே வந்தாள் தென்றல். அவள் கையைப் பிடித்து இழுத்த கோதை,

"நீ எங்க போயிருந்த?" என்றார்.

"காவியாவை வழி அனுப்பப் போனேன் மா..."

"கடந்த மூனு மாசமா நீ எங்க இருந்த?"

திகைத்து நின்றாள் இளந்தென்றல். அவளுடைய நாக்கு, வாயில் ஒட்டிக்கொண்டது.

"சொல்லு தென்றல், நீ யார் கூட இருந்த?"

"அம்மா... நான்..."

"நீ மூணு மாசமா மாமல்லன் கூட தங்கி இருந்தது உண்மையா?"

அதைக் கேட்ட வடிவாம்பாள் அதிர்ச்சி அடைந்தார்.

"என்ன பேசுற கோதை? அவ எங்க இருந்தான்னு நமக்கு தெரியாதா?

"இல்லம்மா... எல்லாமே பொய். இவ மாமல்லன் கூட தான் இருந்திருக்கா. அவன் தான் அவளை இங்கிருந்து சென்னைக்கு கூட்டிகிட்டு போனவன்"

"இதெல்லாம் உண்மையா தென்றல்? வாயை திறந்து பேசு" என்றார் வடிவாம்பாள்

"அவ பேசாம இருக்கும்போதே தெரியலையா மா... அவன் நம்ம காதம்பரியோட பையனே இல்லையாம். கடைஞ்சு எடுத்த பொம்பளை பொறுக்கியாம்..."

"இல்ல கோதை. உன்கிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்காங்க"

"அவனைப் பத்தி இல்லாததையும், பொல்லாததையும் நம்ம கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு? நமக்கு ஃப்ரீயா உதவி செய்ய அவன் என்ன முட்டாளா?"

"நீ உன்னை ரொம்ப சிரமப்படுத்திக்காத. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராத. காசியம்மா, என்ன நடந்தது? உண்மையை சொல்லு."

கண்களில் கண்ணீர் வழிய தலை குனிந்து நின்றாள் இளந்தென்றல். அவளிடம் மாமல்லன் கூறியது அவளது நினைவுக்கு வந்தது. *அவர்களிடம் எதைப் பற்றியும் கூற வேண்டாம். குறிப்பாய், முன்னாவை பற்றி கூற வேண்டாம்* என்று அவன் கூறியிருந்தான் அல்லவா? அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எல்லா உண்மையும் வெளிவந்த பிறகு அமைதி காத்து என்ன பயன்? உண்மையை கூறுவதை தவிர அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை.

"சொல்லுடி..."

"ஆமாம் பாட்டி. நான் அவர் கூட தான் இருந்தேன்"

வடிவம்பாளுக்கும், கோதைக்கும் தங்கள் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அவளை அறைய, கோபத்துடன் தன் கையை உயர்த்தினார் கோதை. அந்த அடி அவள் கன்னத்தில் விழுவதற்கு முன், வேறொரு உறுதியான கரம், அவரது கரத்தை பற்றி நிறுத்தியது.

தொடரும்...




Continue Reading

You'll Also Like

49.6K 2.1K 55
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் ப...
27.4K 2.6K 32
திருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்
19.4K 907 25
முதல் திருமணம் தோற்று போக இனி வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் நாயகியை கரம் பிடிக்க துடிக்கும் நாயகன்
28.9K 1.8K 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக...