இன்னார்க்கு இன்னாரென்று...!(...

By NiranjanaNepol

55.9K 3.2K 652

வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில... More

1 மாமல்லனும் பரஞ்சோதியும்
2 யாரவள்?
3 தெய்வீக அழகு
4 இருவரும் ஒன்று தான்
5 நாம் சந்தித்து விட்டோம்
6 இனம் புரியாத ஒன்று...
7 பிடித்திருக்கிறது
8 விரும்புகிறேன்
9 மனம் உடைந்த மாமல்லன்
10 நீ தான் எனக்கு எல்லாம்
11 புது இடம்
12 எதிர்பாராத திருப்பம்
13 உன்னத உணர்வு
14 வீட்டு சாப்பாடு
15 கசப்பான கடந்த காலம்
16 இதயத்தின் குரல்
17 வெறும் காகிதம் தானே?
18 நிச்சயதார்த்தம்?
19 அவள் வருவாள்
20 வரவில்லை...
21 'வீடு', 'இல்லம்' ஆனது
22 கிணற்று தண்ணீர்...
23 வேலைக்காரி
24 பாட்டிக்கு எப்படி தெரியும்?
25 எதிர்பாராத சுவாரஸ்யம்
26 உனக்கு என்ன ஆனது?
27 அதிஷ்டம் அற்றவளா?
28 மாறுதல்...
29 அக்கறை
30 நீண்ட பயணம்
31 என்ன செய்து விட்டாள்?
32 நண்பன் யார்?
33 மனைவியாய்...
33 என்ன அது?
34 வெப்பக் கடத்தல்
35 சிறப்பான போர்வை
36 முன்னா...
37 உங்கள் திட்டமா?
39 மீண்டும் மதுரைக்கே...
40 உளவாளி
39 காத்திருந்த அதிர்ச்சி
41ஷீலாவின் திட்டம்
42 ஷீலாவா...?
43 எங்கே இருந்தாய்?
44 காதம்பரியின் மகன்
45 சந்திப்பு
46 பிறந்தநாள்
47 ஆபத்தின் விளிம்பில்
48 நினைவுகள்
49 திருமதி மாமல்லன்
50 புதிய வாழ்க்கை
51 இறுதி பகுதி

40 வரன்

936 64 19
By NiranjanaNepol

40 வரன்

தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று, கோதையும் வடிவாம்பாளும் காட்டிய ஆர்வம், இளந்தென்றலுக்கு பயத்தையும், கவலையையும் தந்தது. தன்னால் முடியாத நிலையிலும், முடிந்தவற்றை செய்து கொண்டிருந்தார் கோதை.  இளந்தென்றலின் அறைக்கு வந்த வடிவாம்பாள்,

"இன்னும் நீ தயாராகலையா? அவங்க எப்ப வேணாலும் வந்துடுவாங்க..." என்றார்.

"நான் அவங்களை பார்க்க விரும்பலை பாட்டி"

"என்னடி உளர? ஏன் நீ அவங்களை பார்க்க விரும்பல?"

என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்தாள் இளந்தென்றல். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று அவளால் எப்படி கூற முடியும்?

"வாயை மூடிகிட்டு தயாராகு"

அவள் கையைப் பிடித்து இழுத்து, கண்ணாடியின் முன்னால் நிறுத்தி, அவள் கையில் சீப்பை திணித்தார். வேண்டா வெறுப்பாய் தயாரானாள் இளந்தென்றல்.

மாப்பிள்ளை வந்து சேர்ந்தவுடன், அவளை வெளியே வரச் சொல்லி அழைத்தார் வடிவாம்பாள். அவள் கையில் காப்பியை கொடுத்து, அவரிடம் கொடுக்கும்படி பணிக்கப்பட்டாள். காபி தட்டுடன் வரவேற்பறைக்கு வந்தாள் இளந்தென்றல். அவளது பார்வை தரையில் பதிந்திருந்தது. மாமல்லனின் மீது கடும் கோபத்தில் இருந்தாள் அவள். தனக்கு ஒரு கைபேசியையும் வழங்கிவிட்டு, அவள் ஃபோன் செய்த போது, எடுக்காமல் இருந்தால் என்ன அர்த்தம்? பிறகு எப்படி அவனிடம் பேசுவதாம்?

"அவருக்கு காப்பியை கொடு தென்றல்" என்றார் பாட்டி.

"காப்பில சக்கரை போடலையே?"  என்ற குரலை கேட்டு திடுக்கிட்டு  நிமிர்ந்தாள் இளந்தென்றல்.

கள்ள புன்னகையுடன் அமர்ந்திருந்த மாமல்லனை, வாயை பிளந்து கொண்டு, நம்ப முடியாமல்  பார்த்து நின்றாள் அவள்.

"போடலை தம்பி. நீங்க தான் நேத்து இங்க வந்த போதே உங்களுக்கு சக்கரை வியாதி இருக்குன்னு சொன்னீங்களே" என்றார் பாட்டி.

*நேத்தா? அப்படின்னா நேத்து அவரு இங்க வந்திருந்தாரா? மீட்டிங் இருக்குன்னு என்கிட்ட பொய் சொல்லிட்டு, அவர் வந்தது இங்க தானா? நான் மதுரைக்கு வர்றதுக்கு முன்னாடியே அம்மாவையும் பாட்டியும் பார்த்து பேசத்தான் நேத்து வந்திருக்கிறார் போலருக்கு... இது எல்லாம் என்னை சர்ப்ரைஸ் பண்ண தானா?* என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள் இளந்தென்றல்.

மாமல்லனை பார்த்து முறைத்தபடி அவனுக்கு காப்பியை வழங்கினாள் இளந்தென்றல். அவளது கோபமான முகத்தை பார்த்து தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டான் மாமல்லன்.

"என்ன தென்றல் அவரை அப்படி பார்த்துகிட்டு இருக்க? இவர் யாருன்னு உனக்கு தெரியுமா? இவர் தான் உன் காதம்பரி ஆன்ட்டியோட முன்னா. ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் அவங்க அம்மா எழுதின ஒரு லெட்டர் அவருக்கு கிடச்சுதாம். அதை படிச்சி பார்த்து, அவங்களுடைய ஆசை என்னன்னு தெரிஞ்சுகிட்டு, நேத்து இங்க வந்திருந்தார். நீ காத்திருந்தது வீண் போகல தென்றல்" என்றார் பாட்டி.

"எனக்கு என்னமோ, அவளுக்கு என் மேல நம்பிக்கை இல்லாத மாதிரி தெரியுது" என்றான் மாமல்லன் வேண்டுமென்றே.

"ஏன் தென்றல் அப்படி நினைக்கிற?" என்ற பாட்டி.

"உங்களுக்கு ஞாபகம் இருக்கா பாட்டி? அவ மயங்கி விழுந்தப்போ நான் அவளுக்கு ஹெல்ப் பண்ணேனே, அப்பவே அவளுக்கு என்னை பிடிக்கலையே"

"அவளை ஒன்னும் நீங்க பெருசா எடுத்துக்க வேண்டாம் தம்பி. அவ கெடக்குறா பைத்தியக்காரி" என்றார் பாட்டி.
 
தன்னை பைத்தியக்காரி என்று கூறிய தன் பாட்டியை அதிர்ச்சியுடன் பார்த்து நின்றாள் இளந்தென்றல்.

"இவ எப்பவுமே இப்படித் தான் தம்பி. யாரையுமே சுலபத்தில் நம்ப மாட்டா. ஆனா, நாங்க உங்களை நம்புறோம். இருங்க உங்களுக்கு பலகாரம் கொண்டு வரேன்" என்றார் கோதை அந்த முடியாத நிலையிலும்.

தன் மகளுக்கு உதவ அவரை பின்தொடர்ந்தார் பாட்டி. தன் பல்லை கடித்துக் கொண்டு, மாமல்லனை பார்த்து முறைத்தாள் இளந்தென்றல். தன் புருவம் உயர்த்தி சிரித்தான் மாமல்லன். அவனை நெருங்கி வந்தாள் இளந்தென்றல்,

"எப்படி என்னோட சர்ப்ரைஸ்?" என்றான் மாமல்லன்.

"என்கிட்ட பொய் சொல்லிட்டு நேத்து நீங்க இங்க தான் வந்தீங்களா?"

"நீ என்ன நெனச்ச? என் பொண்டாட்டியை தனியா விட்டுட்டு, உருப்படாத மீட்டிங்கில் போய் உட்கார்ந்து இருப்பேன்னு நினைச்சியா?"

"முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்குன்னு சொன்னீங்க?"

"நேத்து ராத்திரி நான் வேற என்ன செஞ்சேன்னு நினைக்கிற?"

"அதனால தான் நேத்து ராத்திரி என்னை என் ரூம்ல தூங்க சொன்னீங்களா?"

"ஆமாம்"

"மதுரைக்கு ஏதோ ஒரு டீலை முடிக்க வரணும்ன்னு சொன்னீங்களே..."

"அந்த டீலை முடிக்கத் தான் நான் இங்க வந்திருக்கேன்... "

"நான் உங்களுக்கு ஒரு டீலா?"

"அஃப்கோர்ஸ்... நீ என் வாழ்க்கையோட ரொம்ப பெரிய டீல்"

சில நொடி வாயடைத்துப் போன அவள், தன்னை சுதாகரித்துக் கொண்டு,

"போங்க நீங்க என்னை ரொம்பவே தவிக்க விட்டுட்டீங்க. நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்"

"உன்னை மணமேடைக்கு தூக்கிக்கிட்டு போய் தாலி கட்டுவேன்"

"ஓ, அப்படியா...? நீங்க என் பாட்டியை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க என்னை தொட்டா, உங்க கையை வெட்டிடுவாங்க" என்றாள்.

"அப்படியா? அவங்க சம்மதத்தோட கல்யாணத்துக்கு முன்னாடி நான் உன்னை தூக்கினா என்ன செய்வ?"

"இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப ஓவரா தெரியல?"

"பெட்டா?"

"ஓகே நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்"

"நிஜமாவா?" என்றான் புருவம் உயர்த்தி.

"ஆமாம்"

"என்ன வேணா செய்வியா?" என்றான் குழைவாக. 

"ஆங்... செய்வேன் " என்ற பொழுது அவள் குரல் தடுமாறியது.

"என்னை குறைச்சி எடை போடாத"

"நிச்சயமா மாட்டேன்... உங்களை மாதிரி ஒரு ஏமாத்துக்காரரை நான் பார்த்ததே இல்லையே"

அவளுக்கு மாமல்லன் பதில் கூறும் முன்,

"ஏமாத்துக்காரரா?" என்றார் பாட்டி.

அதிர்ச்சியுடன் அவரை ஏறிட்டாள் இளந்தென்றல்.

"நான் தான் சொன்னேனே பாட்டி, இந்த பொண்ணு நான் அவளை ஏமாத்துறேன்னு நினைச்சுகிட்டு இருக்கா"

"என்னடி பொண்ணே இப்படி செய்ற? அவருக்காக இவ்வளவு நாளா காத்திருந்த... அவர் வந்த பிறகு, படுத்தி வைக்கிறியே...?"

தன்னை சுதாகரித்துக் கொண்ட இளந்தென்றலும், மாமல்லனுக்கு ஈடு கொடுக்க நினைத்து,

"இவர் தான் காதம்பரி ஆண்டியோட முன்னா அப்படிங்கறதுக்கு என்ன ஆதாரம்?" என்றாள்.

"அவருக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு? காதம்பரியை பத்தியும் முன்னாவைப் பத்தியும் அவருக்கு எப்படி தெரியும்?" என்றார் கோதை.

"நீ சும்மா இரு கோதை. அவ கெடக்குறா" என்றார் பாட்டி.

முகத்தை உம் என்று வைத்துக் கொண்ட இளந்தென்றலை பார்த்து வேடிக்கையாய் சிரித்தான் மாமல்லன்.

அப்பொழுது, கை நிறைய இனிப்பு பலகார டப்பாக்களுடன் உள்ளே வந்த பரஞ்சோதி,

"மன்னிச்சிடுங்க கொஞ்சம் லேட் ஆயிடுச்சு" என்றான்.

இளந்தென்றல் தன்னை பார்த்து முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்து, இரண்டடி பின்னால் நகர்ந்தான் அவன்.

"இன்னொரு ஏமாத்துக்காரன்" என்று இளந்தென்றல் முணுமுணுத்தது அவன் காதில் விழுந்து, பல்லை காட்டி சிரித்தான் பரஞ்ஜோதி.

அவனிடமிருந்த இனிப்பு டப்பாக்களை வாங்கி பாட்டியிடம் கொடுத்தான்  மாமல்லன்.

"இந்த ஸ்வீட்டான தருணத்தை கொண்டாட, ஸ்வீட்" என்றபடி.

"மல்லா, இவங்க தான் சிஸ்டரா?" என்றான் முகத்தை சீரியஸா வைத்துக் கொண்டு பரஞ்சோதி.

"ஆமாம்ல... நான் உனக்கு அவங்களை இண்ட்ரடியூஸ் பண்ண மறந்துட்டேன். இவங்க தான் இளந்தென்றல்" என்றான் மாமல்லன் சிரிப்பை அடக்கியபடி.

"வணக்கம் சிஸ்டர். நான் மாமல்லனோட ஃப்ரெண்ட் கம் மேனேஜர்" என்றான் பரஞ்சோதி.

"வணக்கம்" என்றாள் நக்கலான முகபாவத்தோடு இளந்தென்றல்.

"சாரி சிஸ்டர். நீங்க என்ன ஸ்வீட் விரும்பி சாப்பிடுவீங்கன்னு எனக்கு தெரியாது. அதனால எல்லாத்துலையும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கிட்டு வந்தேன்" என்றான் பரஞ்சோதி

"அவ எல்லா ஸ்வீட்டையும் விரும்பி சாப்பிடுவா. உண்மைய சொல்லப் போனா, அவளால ஸ்வீட் இல்லாமல் வாழவே முடியாது" என்றார் பாட்டி.

"அப்படியா?" என்றான் மாமல்லன் அவனுக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்பதைப் போல.

அவன் பரஞ்சோதியை இனிப்புகளை வாங்கி வரச் சொன்னதே, இளந்தென்றலுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும் என்று அவனுக்கு தெரிந்ததால் தானே...!

"நான் எங்க ஐயர் கிட்ட கல்யாண தேதியை பத்தி கேட்டிருந்தேன். நாலு தேதியை குறிச்சு கொடுத்திருக்காரு. உங்களுடைய வேலைக்கு ஏத்த மாதிரி நீங்க கல்யாண தேதியை வச்சுக்கோங்க" என்றார் பாட்டி.

"கல்யாணம் முடியற வரைக்கும் எங்களுக்கு வேற வேலையே கிடையாது" என்று முணுமுணுத்தான் பரஞ்சோதி.

"அடுத்த மாசம் ஒரு நல்ல முகூர்த்த தேதி இருக்கு" பாட்டி.

"என்னது, அடுத்த மாசமா?" என்று அலறினான் மாமல்லன்.

பாட்டி அவனை திடுக்கிட்டு பார்த்தார். தான் குடித்துக் கொண்டிருந்த காபியை, அதிர்ச்சியில் பரஞ்சோதியும் சிறிது துப்பினான். திருமண தேதியை கேட்டு மாமல்லனை விட அதிகமாய் அதிர்ந்தது பரஞ்ஜோதி தான். மாமல்லன் என்ன செய்வான் என்று அவனைத் விட வேறு யாருக்கும் தெரியும்? இளந்தென்றலை விட்டு பிரிந்திருப்பது எவ்வளவு கடினமாய் இருக்கிறது என்பதை பற்றி புலம்பி புலம்பியே அவனை கொன்று விடுவானே. இன்று ஒரு நாளைக்கே மாமல்லன் அவனை வறுத்து எடுத்து விட்டானே...! ஒரு மாதம் பொறுக்க வேண்டும் என்றால், அவன் கதி என்னவாகும்? உலகிலேயே மிகவும் கொடுமையான விஷயம், காதலில் விழுந்த ஒருவனுக்கு நெருங்கிய  நண்பனாய் இருப்பதும், அவனது பிதற்றலை பொறுமையுடன் கேட்பதும் தான்.

"இல்ல பாட்டி, நான் அடுத்த மாசம் லண்டனுக்கு போக வேண்டி இருக்கும். அதனால் தான் யோசிக்கிறேன்" என்று சமாளித்தான் மாமல்லன்.

"அப்படின்னா, கல்யாணத்தை அவர் லண்டனுக்கு போயிட்டு வந்ததுக்கு பிறகு வச்சுக்கலாம் பாட்டி" என்றாள் இளந்தென்றல் குறும்பு பார்வையுடன்.

அவளைப் பார்த்து முறைத்தான் மாமல்லன். பரஞ்சோதி மாமல்லனின் உதவிக்கு வந்தான்.

"இல்ல இல்ல, லண்டன்ல வேலை எப்போ முடியும்னு சொல்ல முடியாது. அதனால, கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிடுறது நல்லது" என்றான்.

"அப்படின்னா, ஒரே ஒரு தேதி தான் இருக்கு அதுவும் அடுத்த வாரமே வருதே... "

"அப்படின்னா, அந்த தேதியையே முடிவு பண்ணிக்கலாம்" என்றார்கள் மாமால்லனும் பரஞ்சோதியும் ஒரே குரலில்.

அவர்களை விசித்திரமாய் பார்த்தார் வடிவாம்பாள். திருமணத்தை சீக்கிரம் நடத்த அவர்கள் பட்ட பாட்டை பார்த்து, தன் சிரிப்பை மறைக்கப்படாத பாடுபட்டாள் இளந்தென்றல்.

"அடுத்த வாரமே எப்படி தம்பி செய்யறது? கல்யாண மண்டபம் கிடைக்க வேண்டாமா?" என்றார் பாட்டி.

"அதை நீங்க என்கிட்ட விடுங்க பாட்டி. நான் பார்த்துக்கிறேன்" என்றான் பரஞ்சோதி.

"சரி" என்று தயக்கத்துடன் தலையசைத்தார் பாட்டி.

 ஒரு இனிப்பு டப்பாவை திறந்து அங்கிருந்த அனைவருக்கும் அதை வழங்கினார் வடிவாம்பாள்.

"கல்யாண பொண்ணுக்கு இந்த கல்யாண தேதியில் விருப்பமான்னு கேளுங்க பாட்டி" என்றான் மாமல்லன் இளந்தென்றலை பார்த்தவாறு.

"எனக்கு விருப்பமில்லைன்னா என்ன செய்யப் போறீங்க?" என்றாள் இளந்தென்றல். 

"வாய மூடு காசியம்மா... நல்லதா பேசு" என்று கடிந்து கொண்டார் வடிவாம்பாள்.

"என்னை புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் பாட்டி" என்றான் மாமல்லன்.

 ஒரு இனிப்பை எடுத்து அதை இளந்தென்றலுக்கு ஊட்டி விட நீட்டினார் பாட்டி. அதை சாப்பிடாமல் அங்கிருந்து கோதையை நோக்கி சென்றாள் இளந்தென்றல்.

"இது தான் முதல் தடவை, இந்த பொண்ணு ஸ்வீட் சாப்பிடாம போறது" என்றார் பாட்டி.

"அவ அப்சட்டா இருக்கான்னு நினைக்கிறேன்" என்றான் மாமல்லன்.

அவள் விளையாடுகிறாள் என்று புரிந்திருந்த போதும், அவள் இனிப்பை சாப்பிடாமல் தவிர்த்தது ஏனோ மாமல்லனுக்கு பிடிக்கவில்லை.

"அவளை நான் பார்த்துக்கிறேன் தம்பி" என்றார் பாட்டி.

"ஆமாம் தம்பி... அவ உங்களுக்காக தான் காத்துக்கிட்டு இருந்தா. அவ தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக்குறாளோன்னு நாங்க அவளை நினைச்சு ரொம்ப கவலை பட்டோம். ஆனா காதம்பரி சொன்ன மாதிரி, அவளோட ஆசையை தெரிஞ்சுக்கிட்டு நீங்க வந்துட்டீங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று உணர்ச்சிவசப்பட்டார் கோதை.

அது மாமல்லனையும், இளந்தென்றலையும் கூட உணர்ச்சிவசப்படுத்தியது. நிலைமையை சீராக்க முயன்றான் பரஞ்சோதி.

"நான் கிளம்புறேன். கல்யாண மண்டபம் கிடைக்குதான்னு தேடி பாக்கணும்" என்றான்.

"நானும் ஐயர் கிட்ட கல்யாண ஏற்பாடு பத்தி பேசணும்" என்றார் பாட்டி.

"அப்படின்னா, நான் உங்களை இறக்கி விட்டுட்டு போறேன் பாட்டி. உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்னை கேளுங்க. நான் வந்து நிற்பேன்" என்றான் பரஞ்சோதி.

"ரொம்ப நன்றி தம்பி. ( கோதையின் பக்கம் திரும்பிய அவர் ) நாங்க கிளம்பறோம். இன்னைக்கு நீ நிறைய நடந்துட்ட கோதை. போதும் உன்னோட ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு" என்றார் வடிவாம்பாள்.

"ஆமாம் ஆன்ட்டி. உங்களை கவனிச்சுக்கோங்க" என்றான் மாமல்லன்.

அவரை, அவரது அறைக்கு அழைத்துச் சென்றாள் இளந்தென்றல். பரஞ்சோதியுடன் கிளம்பி சென்றார் வடிவாம்பாள். கோதையின் அறையில் இருந்து வெளியே வந்த இளந்தென்றல், மாமல்லன் அங்கு இருந்ததை பார்த்து,

"நீங்க இன்னும் கிளம்பலையா?" என்றாள்.

"என் பொண்டாட்டிக்கு டாட்டா சொல்லாம நான் எப்படி போறது?"

"டாட்டா... கிளம்புங்க..."

"யாரோ ஆங்கிரி பேர்ட் அவதாரம் எடுத்த மாதிரி தெரியுது...?"

"நான் உங்க கிட்ட பேச மாட்டேன்" என்று தன் அறையை நோக்கி நடந்தாள் இளந்தென்றல்.

 அவளை பின்தொடர்ந்த சென்ற மாமல்லன்,

"என்னை உன் ரூமுக்கு கூட்டிகிட்டு வர, நல்ல ஐடியா வச்சிருக்க" என்றான்.

"இங்க நடந்துகிட்டு இருந்த கல்யாண ஏற்பாட்டை பார்த்து நான் எவ்வளவு பதறிப் போனேன்னு உங்களுக்கு தெரியுமா?"

"என் பொண்டாட்டி வீட்டுக்குள்ள நுழையுற தைரியம், என்னைத் தவிர வேறு எவனுக்கு இருக்கு?"

"அலட்டலை நிறுத்துங்க"

"இப்படி சர்ப்ரைஸ் கொடுத்தா, என் பொண்டாட்டி கிட்டயிருந்து ஏதாவது கிடைக்கும்னு நான் எதிர்பார்த்தேன்"

"என்ன?"

"உனக்கே தெரியும்"

தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் இளந்தென்றல்.  அவளது நாடியை பிடித்து உயர்த்திய அவன்,

"எதுவும் சொல்ல மாட்டியா?" என்றான்.

"நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு உங்களுக்கு தெரியாது.

"எனக்கு தெரியும்"

"நம்ம கல்யாண விஷயத்தை எப்படி அம்மா கிட்டயும், பாட்டி கிட்டயும் சொல்றதுன்னு நான் ரொம்ப பயந்துகிட்டு இருந்தேன். நீங்க என் வேலையை சுலபமாக்கிட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ்"

"வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா?"

"வேற என்ன வேணும்?"

"உன்னோட விஷயத்துல நான் ரொம்ப பேராசைக்காரன். ஏதாவது  பெருசா கேட்டு உன்னை சங்கட படுத்திடுவேன்"

புன்னகையுடன் அவன் நெஞ்சில் சாய்ந்து, அணைத்துக் கொண்டாள் இளந்தென்றல். அவளை தன் கையில் சுற்றி வளைத்துக் கொண்டு,

"எனக்கு இது தான் வேணும்...  உன்னோட அணைப்பல் இருக்கணும்..." என்றான்.

"நீங்க ரொம்ப பேராசைக்காரர்ன்னு சொன்னீங்க? உங்களுடைய பேராசை இவ்வளவு தானா?"

"நான் எவ்வளவு பேராசைக்காரன்னு நம்ம கல்யாணத்துக்கு பிறகு நீயே தெரிஞ்சிக்குவ"

"சரி, பாட்டி வர்றதுக்கு முன்னாடி கிளம்புங்க"

"அவங்க சீக்கிரம் வர மாட்டாங்க. அவங்க அங்கிருந்து கிளம்பும் போது பரஞ்சோதி எனக்கு ஃபோன் பண்ணுவான்"

"அப்படி செய்யச் சொல்லி அவருக்கு சிக்னல் கொடுத்துட்டீங்களா?"

"பரஞ்சோதிக்கு என்னோட சிக்னல் தேவையில்லை... அவனுக்கு எதை, எப்போ, எப்படி செய்யணும்னு நல்லாவே தெரியும்"

"ரெண்டும் பேரும் திருடனுங்க..."

"இப்போ, எங்க டீம்ல இன்னொருத்தியும் சேர்ந்திருக்கா. பாட்டி முன்னாடி ரொம்ப நல்லா சமாளிச்ச. நீ எங்க உளறிடுவியோனு நெனச்சேன்"

எதையோ யோசித்த இளந்தென்றல்,

"நம்ம கல்யாணத்தைப் பத்தி உங்க பாட்டிக்கு தெரியுமா?"

"தெரியும். மதுரைக்கு வரதுக்கு முன்னாடி, அவங்க கிட்ட பேசிட்டு தான் வந்தேன்"

"அவங்க என்ன சொன்னாங்க?" என்றாள் பதட்டத்துடன்.

"எப்படியோ ஒரு வழியா, அவங்க பேரன் உன்னை மடக்குனதுல அவங்களுக்கு சந்தோஷம்" என்று சிரித்தான்.

"அவங்க என்ன சொன்னாங்கன்னு ஒழுங்கா சொல்லுங்க"

"அவங்களுடைய ஆசிர்வாதத்தை கொடுத்தாங்க"

"அப்படின்னா அவங்க நம்ம கல்யாணத்துக்கு வர மாட்டாங்களா?"

"மாட்டாங்க. ஏன்னா, அவங்க இப்போ நேபாள்ல இருக்காங்க"

"நேபாள்லயா? எதுக்கு?"

"கைலாஷ் யாத்திரை போயிருக்காங்க"

"ஓ..." என்றாள் வருத்தத்துடன்.

"ஒரு டீமா போயிருக்கிறதால, அவங்களால வர முடியாது. அது அவங்களுடைய ரொம்ப நாள் கனவு. ரொம்ப கஷ்டப்பட்டு தான், ஃபார்மாலிட்டிஸ், மெடிக்கல் டெஸ்ட், ட்ரைனிங் எல்லாத்தையும் முடிச்சு இருக்காங்க. கைலாஷ் போறதுக்கு செலக்ட் ஆகிறது ரொம்ப கஷ்டம்"

"உண்மை தான். அங்க போற கொடுப்பினை எல்லாருக்கும் கிடைக்காது. கல்யாணத்துக்கு பிறகு, நம்ம அவங்களை ஆசிரமத்தில் போய் பார்த்துட்டு வரலாம்"

"கண்டிப்பா"

"சரி, நீங்க ஏதாவது சாப்பிட்டீங்களா?"

 இல்லை என்று தலையசைத்தான்.

"இருங்க, நான் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரேன்"

அவனுக்கு சாப்பாடு கொண்டு வர சமையல் அறைக்கு சென்றாள் இளந்தென்றல்.

அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த இளந்தென்றலின் சிறுவயது புகைப்படங்களை பார்வையிட தொடங்கினான் மாமல்லன். குண்டு கன்னங்களுடன் அழகாய் இருந்த இளந்தென்றலை பார்த்து புன்னகை பூத்தான் மாமல்லன்.

அப்பொழுது அவனை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு அவனுக்கு தோன்றியது. சட்டென்று ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பிய அவன், அங்கிருந்து யாரோ ஓடுவதை பார்த்து, ஜன்னல் அருகில் ஓடிச் சென்ற அவன், பர்தா அணிந்த பெண் ஒருத்தி, அந்த வீட்டின் மதில் சுவரை தாண்டி, பக்கத்தில் இருந்த காலி மனையில் குதித்து ஓடுவதை கண்டான்.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

20.5K 686 28
ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..
74.5K 1.3K 36
இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...
85.1K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...