இன்னார்க்கு இன்னாரென்று...!(...

By NiranjanaNepol

56.3K 3.3K 652

வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில... More

1 மாமல்லனும் பரஞ்சோதியும்
2 யாரவள்?
3 தெய்வீக அழகு
4 இருவரும் ஒன்று தான்
5 நாம் சந்தித்து விட்டோம்
6 இனம் புரியாத ஒன்று...
7 பிடித்திருக்கிறது
8 விரும்புகிறேன்
9 மனம் உடைந்த மாமல்லன்
10 நீ தான் எனக்கு எல்லாம்
11 புது இடம்
12 எதிர்பாராத திருப்பம்
13 உன்னத உணர்வு
14 வீட்டு சாப்பாடு
15 கசப்பான கடந்த காலம்
16 இதயத்தின் குரல்
17 வெறும் காகிதம் தானே?
18 நிச்சயதார்த்தம்?
19 அவள் வருவாள்
20 வரவில்லை...
21 'வீடு', 'இல்லம்' ஆனது
22 கிணற்று தண்ணீர்...
23 வேலைக்காரி
24 பாட்டிக்கு எப்படி தெரியும்?
25 எதிர்பாராத சுவாரஸ்யம்
26 உனக்கு என்ன ஆனது?
27 அதிஷ்டம் அற்றவளா?
28 மாறுதல்...
29 அக்கறை
30 நீண்ட பயணம்
31 என்ன செய்து விட்டாள்?
32 நண்பன் யார்?
33 மனைவியாய்...
33 என்ன அது?
35 சிறப்பான போர்வை
36 முன்னா...
37 உங்கள் திட்டமா?
39 மீண்டும் மதுரைக்கே...
40 உளவாளி
39 காத்திருந்த அதிர்ச்சி
40 வரன்
41ஷீலாவின் திட்டம்
42 ஷீலாவா...?
43 எங்கே இருந்தாய்?
44 காதம்பரியின் மகன்
45 சந்திப்பு
46 பிறந்தநாள்
47 ஆபத்தின் விளிம்பில்
48 நினைவுகள்
49 திருமதி மாமல்லன்
50 புதிய வாழ்க்கை
51 இறுதி பகுதி

34 வெப்பக் கடத்தல்

963 65 12
By NiranjanaNepol

33 வெப்பக் கடத்தல்

மாமல்லனின் மனதை, குழப்ப மேகங்கள் சூழ்ந்தன. அவனது உணர்வுகள் குறித்து அவனுக்கே புரியா புதிராக இருந்தது. கண்ணிமைக்காமல் இளந்தென்றலையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது திடீர் முக மாறுதலை கண்ட இளந்தென்றலும் குழப்பமடைந்தாள். விறு விறுவென அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

தன் மனதில் சந்தேகத்தை துளிர்க்கச் செய்த, இனம் புரியாத தன் உணர்வுகளை பற்றி யோசித்தபடியே இருந்தான் மாமல்லன். எங்கு, எதை தவறவிடுகிறோம் என்று அவனுக்கு புரியவில்லை. அவனது மனம் அமைதி இழந்தது. அவனது இதயம் கணத்து போனது... அது அவனது உடல் முழுவதும் பரவுவது போல் இருந்தது. அந்த வேதனை மிகவும் கொடுமையாக இருந்தது. அது அவனை சிரிக்கவும் செய்தது, அழுகையையும் வர வழைத்தது. தன் கனவில் கண்ட பஞ்சு போன்ற உணர்வை அவனால் ஒதுக்க முடியவில்லை. அது அவனை விடாமல் விரட்டி கொண்டே இருந்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு, மெல்ல எழுந்து மீண்டும் தன் அறைக்கு வந்தான். உடையை மாற்றிக் கொண்டால் தேவலாம் என்று தோன்றியது அவனுக்கு. குளியலறைக்குச் சென்று சுடுநீரால் உடலை துடைத்து உடைமாற்றிக் கொண்டான். மீண்டும் கட்டிலுக்கு வந்தவன், போர்வையில் வீசிய தைல வாடை பிடிக்காமல், போர்வையை மாற்ற எண்ணி அதைப் பிடித்து இழுத்தான். அப்பொழுது அவனது கட்டிலின் மூலையில் இருந்த ஒன்று அவனது கருத்தை கவர்ந்தது. அதை எட்டி எடுத்தவன், அது ஒரு கொலுசு என்பதை புரிந்து கொண்டு  பிரமிப்படைந்தான். கொலுசா? அன்று காலை, இளந்தென்றலின் கொலுசு அவள் காலில் இல்லாமல் இருந்தது அவன் நினைவுக்கு வந்தது. ஆனால், இது அவனது படுக்கையில் எப்படி வந்தது? ஒருவேளை, நேற்று இரவு அவள் அவனை கவனித்துக் கொண்டிருந்த பொழுது தவறி விழுந்திருக்குமோ? ஆனால் அவள் சோபாவில் தானே உறங்கிக் கொண்டிருந்தாள்? அவன் மேலும் குழம்பி, அந்த கொலுசையே உற்றுப் பார்த்தபடி இருந்தான். 

மெல்லிய புன்னகை அவன் இதழோரம் இழையோடியது. இளந்தென்றலின் காலை சதா வருடிக் கொண்டிருந்த அந்த கொலுசால் தன் கன்னத்தை மெல்ல வருடினான். மீண்டும் அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். அதை இளந்தென்றலிடம் கொடுக்கவும் இல்லை, அதைப் பற்றிய அவளிடம் கூறவும் இல்லை.

இளந்தென்றலின் நடவடிக்கைகள் வேறு, அவனை மேலும் எரிச்சலூட்டியது. ஏன் அவள் அப்படி நடந்து கொள்கிறாள்? ஏதோ பிரச்சனை இருக்கிறது. அவளை கண்காணிப்பது என்று தீர்மானித்தான். ஒருவேளை, அவளது மாற்றம், அவர்களது திடீர் திருமணம் சம்பந்தப்பட்டதாய் இருக்குமோ? ஆனால், திருமணத்திற்கு மறுநாள் அவள் இப்படி இருக்கவில்லையே...! எதையோ பறி கொடுத்தவள் போல் அல்லவா காணப்படுகிறாள்...! மாமல்லன் இரண்டு மூன்று முறை அழைத்தது கூட அவளது காதில் விழவில்லை. அன்று இரவு,  தன் தூக்கத்தை மொத்தமாய் இழந்து, படுக்கையில் புரண்டான் மாமல்லன். அவனது நிலைமை மிகவும் பரிதாபமாய் இருந்தது. அவன் நிலையையும் யாராலும் புரிந்து கொள்ளவும் முடியவில்லை... அவனாலும் எதையும், யாரிடமும் கூறவும் முடியவில்லை.

இந்த நிலை, அடுத்த இரண்டு நாட்களுக்கும் தொடர்ந்து. அவன் எவ்வளவு முயன்ற பொழுதும் அவனது புத்திக்கு எதுவுமே எட்டவில்லை. ஏனென்றால், எது நடந்ததோ, அது அவனது கணிப்புக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. இளந்தென்றலை நன்றாக புரிந்து கொண்ட பின், அவளைப் பற்றி யாரால் தான் அவ்வாறு யோசிக்க முடியும்?

மறுநாள் காலை

அலுவலகம் செல்ல தயாராகி வந்த மாமல்லனை பார்த்து, ஆடித்தான் போனாள் இளந்தென்றல். சில முக்கியமான கோப்புகளில் அவன் கையெழுத்திட வேண்டி இருந்ததால்,  அலுவலகம் செல்வதென்று தீர்மானித்தான் அவன்.

"வெளியே எங்கேயாவது போறீங்களா?" என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

"ஆஃபீஸ் போறேன்"

"மோசமான ஜுரத்திலிருந்து நீங்க மீண்டு, இன்னும் மூணு நாள் கூட ஆகல... அதுக்குள்ள ஆபீஸ் போறேன்னு சொல்றீங்க?" என்றாள் கவலையுடன்.

"ரொம்ப அர்ஜென்டான வேலை. சீக்கிரம் வந்துடுவேன்" என்றான் புன்னகையுடன்.

"மதிய சாப்பாட்டுக்கு வருவீங்களா?" என்ற பொழுதும் அவனை அவள் பார்க்கவில்லை.

ஆமாம் என்று தலையசைத்த அவன், அவள் தன்னை கவனிக்கவில்லை என்பதையும் கவனித்தான்.

"நான் உங்களை ஏதோ கேட்டேனே..."

"நான் தலையாட்டினேன். நீ பாக்கல"

அவனது முகத்தை பார்த்து விட்டு, மீண்டும் குனிந்து கொண்டாள். நான்கு எட்டில் அவளை அடைந்த மாமல்லன், அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பி,

"ஏதாவது பிரச்சனையா?" என்றான்.

அதை சற்றும் எதிர்பார்க்காத இளந்தென்றல், மீண்டும் தலையை குனிய முயன்ற பொழுது, மீண்டும் அவள் முகத்தை தன்னை நோக்கி உயர்த்தி, மீண்டும் அவள் குனிந்து கொள்ளாத வண்ணம் அழுத்தமாய் பிடித்துக் கொண்டான்.

"தென்றல், உனக்கு திடீர்னு என்ன ஆச்சு? ஏன் இப்படி அப்னார்மலா பிஹேவ் பண்ற? எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட சொல்லலாம்"

முகத்தை வேறு பக்கம் திருப்ப வழியில்லாததால் அமைதியாய் அவனை பார்த்துக் கொண்டிருந்த தென்றல், தன்னை ஆஸ்வாஸபடுத்திக் கொண்டு, அவனுக்கு பதில் அளித்தாள்.

"எந்த பிரச்சனையும் இல்ல... நான் நல்லா தான் இருக்கேன்..."

"இளந்தென்றலை அமைதியாக்குற அளவுக்கு அப்படி என்ன நடந்ததுன்னு எனக்கு புரியல. நீ வழக்கம் போல கோபப்பட்டு என் மேல பாயாமல் இருக்கிறது எனக்கு சந்தோஷம் தான். ஆனா, நான் எதையோ எங்கேயோ மிஸ் பண்ற மாதிரி தோணுது. ( சில நொடிகள் தாமதித்தவன்) உன்னோட நிலைமை எனக்கு புரியுது தென்றல். அதைப் பத்தி நம்ம சீக்கிரமே ஒரு முடிவுக்கு வரலாம்"

மெலிதாய் புன்னகை புரிந்தாள் இளந்தென்றல். அந்த புன்னகை உண்மையானதல்ல என்று அவனுக்கு புரிந்தது. அவளை விட்டு விலகி, அங்கிருந்து நடந்தான் மாமல்லன்.

எம் கே அலுவலகம்

சில கோப்புகளில் கையெழுத்திட்டு, வந்த வேலையை முடித்த மாமல்லன், நாற்காலியில் சாய்ந்தான். இளந்தென்றலின் கவலை தோய்ந்த முகம், அவனுக்கு கவலை அளித்தது. தனது பாக்கெட்டில் இருந்த அவளது கொலுசை எடுத்து, அதை வெறித்துப் பார்த்தபடி இருந்தான்.

ஏதோ தவறாய் தோன்றுகிறது. அவன் கனவில் கண்ட மென் உணர்வில் இருந்தும் அவனால் வெளியேற முடியவில்லை. போதாதென்று, இளந்தென்றலின் கொலுசும் அவனை வதைத்துக் கொண்டிருந்தது.  

இதைப் பற்றி எல்லாம் யோசித்துக் கொண்டிருந்ததில், தனது அறைக்கு வந்த பரஞ்சோதியை அவன் கவனிக்கவில்லை. மாமல்லன் அந்த கொலுசை ரசித்துக் கொண்டிருந்ததை சத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டு நின்றான் பரஞ்சோதி. பரஞ்சோதியை கண்ட மாமல்லன் அந்த கொலுசை சற்றென்று மறைத்துக் கொண்டான். தன் மனதில் இருப்பதை அவ்வளவு எளிதாய் வெளியே கூறுபவன் அல்ல மாமல்லன் என்று பரஞ்சோதிக்கு நன்றாகவே தெரியும். அதுவும், அது இளந்தென்றல் சம்பந்தப்பட்ட விஷயமாய் இருக்கும் பொழுது, அவன் நிச்சயம் முத்தை உதிர்க்க மாட்டான். ஆனால், அவனிடமிருந்து எப்படி வாங்கு விஷயத்தை வாங்குவது என்றும் பரஞ்சோதிக்கு தெரியும்.

"என்ன மல்லா, இப்பல்லாம் நீ *சுட* கூட ஆரம்பிச்சுட்டியா?" என்றான்.

"நானாவது, சுடுறதாவது... வாய மூடு"

"பின்ன என்ன? எனக்கு தெரியும், தென்றல் கொலுசைத் தவிர வேற எந்த கொலுசையும் மாமல்லன் ரசிக்க மாட்டான்.  தன்னோட கொலுசை நிச்சயமா தென்றல் உன்கிட்ட கொடுத்திருக்க மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். அப்புறம் அவங்க கொலுசு உனக்கு எப்படி கிடைச்சது?"

"என்னோட பெட்ல இருந்து எடுத்தேன்"

"பெட்ல இருந்தா?" துணுக்குற்றான் பரஞ்ஜோதி.

"ஆமாம், ரெண்டு நாளா நானும் அதைத்தான் நினைச்சு ஆச்சரியப்பட்டு கிட்டு இருக்கேன்..."

"ரெண்டு நாளாவா? அப்படின்னா எனக்கு புரிஞ்சு போச்சு" என்றான் அமைதியாய் பரஞ்சோதி.

"என்ன புரிஞ்சது?" மாமல்லனின் குரலில் ஒரு தவிப்பு தெரிந்தது.

"கோல்ட் ஃபீவர் வந்த அன்னைக்கு உன்னோட நிலைமை என்னன்னு உனக்கு நிச்சயமா தெரியுமா?"

அவன் பேச்சை இடையூரு செய்யாமல் அவனையே பார்த்தபடி இருந்தான் மாமல்லன்.

"அன்னைக்கு, உன்னோட பாடி டெம்பரேச்சர் தானாவே நார்மல் ஆயிடுச்சின்னு தென்றல் சொன்னத அம்மா நம்பல. ஏன்னா அதுக்கு 99% வாய்ப்பே இல்லையாம்"

"நீ என்ன சொல்ல வர?"

"தென்றல் சொன்ன மாதிரி, உனக்கு வந்த ஜன்னி, தானாவே சரியாகுற ரகம் இல்லையாம்..."

"பின்ன?"

"வெப்பக் கடத்தல்..."

"நீ என்ன சொல்ற?" மென்று முழுங்கினான் மாமல்லன்.

"தென்றல் தான் உன் உடம்புக்கு தேவையான சூட்டை கொடுத்து உன்னை காப்பாத்தி இருக்காங்க..." சற்று நிறுத்தி, தன் வாழ்நாள் அதிர்ச்சியில் இருந்த மாமல்லனை ஏறிட்டான் பரஞ்சோதி.

"இல்ல. தென்றல் அப்படி செஞ்சி இருப்பான்னு என்னால நம்ப முடியல. எனக்கு அவளைப் பத்தி தெரியும். அவ இன்னும் எங்க கல்யாணத்தை கூட ஏத்துக்கல..."

"கண்ணால பார்த்த சாட்சியை என்னால சொல்ல முடியும்"

"கண்ணால பார்த்த சாட்சியா? யாரு?" என்றான் மாமல்லன் அதிர்ச்சியுடன்.

"நான் தான்... நீ உயிர் போற பிரச்சனைல இருக்கேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், மழையை நினச்சி பயந்துகிட்டு, நான் வீட்டில் உட்கார்ந்து இருப்பேன்னு நினைச்சியா?"

பதட்டத்துடன் கை விரல்களை இறுக்கமாய் மூடினான் மாமல்லன்.

"தென்றல் ஃபோன் பண்ண உடனேயே, அம்மா எனக்கு ஃபோன் பண்ணி உன்னோட கண்டிஷன் என்னன்னு சொன்னாங்க. உனக்கு தேவையான மருந்தை என்கிட்ட கொடுத்து அனுப்புனாங்க. நான் உன் வீட்டுக்கு பைக்ல கிளம்பினேன். வழக்கம் போல என்கிட்ட இருந்த இன்னொரு சாவியை வச்சு வீட்டுக்குள்ள வந்தேன். உன்னோட ரூம் உள்பக்கமா தப்பாள் போட்டிருந்தது. நான் கதவை தட்டல. ஏன்னா, ஒருவேளை நிலைமை தென்றல் கையை மீறி போயிருந்தா, அவங்க மறுபடியும் அம்மாவுக்கு ஃபோன் பண்ணுவாங்கன்னு எனக்கு தெரியும். நான் அடுத்த நாள் காலையில வரைக்கும் வெளியிலேயே காத்திருந்தேன். ஆனா, தென்றல் ரூமை விட்டு வெளியே வரவும் இல்ல. அம்மாவுக்கு மறுபடி ஃபோன் பண்ணவும் இல்ல. நான் ஏன் இதை முன்னாடியே உன்கிட்ட சொல்லலன்னா, மூடி இருந்த கதவுக்கு பின்னால என்ன நடந்ததுன்னு எனக்கு நிச்சயமா தெரியல..."

அவனை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் மாமல்லன். இப்படி நடந்திருக்க கூடும் என்ற சாத்தியத்தை பற்றி அவன் யோசிக்கவே இல்லை. இளந்தென்றலை பற்றி நன்றாய் தெரிந்த பிறகு அவனால் எப்படி அந்த விதத்தில் யோசிக்க முடியும்?

"நாங்க நினைச்சது சரி தான். உனக்கு ஏற்பட்ட வெண்பஞ்சு உணர்வும், உன்னோட படுக்கையில கிடைச்ச  தென்றலுடைய கொலுசும் தான் அதுக்கு ஆதாரம்"

கோபத்துடன் தன் நாற்காலியை விட்டு எழுந்தான் மாமல்லன். பரஞ்சோதி அவனை தடுக்கவுமில்லை, எதுவும் கூறவும் இல்லை. மாமல்லன் அதை தன்னுடைய ஸ்டைலில் கையாளட்டும் என்று நினைத்தான் பரஞ்ஜோதி.

தன் காரை நோக்கி வேகமாய் நடந்தான் மாமல்லன். பரஞ்சோதி கூறியதெல்லாம் உண்மையாக இருக்க முடியுமா? இளந்தென்றலால் இவ்வளவு தூரம் போக முடியுமா? அதை செய்ய எப்படி அவள் துணிந்தாள்? ஆதாரங்கள் அனைத்தும் அப்படி நடந்திருக்கும் என்று தானே பறைசாற்றுகிறது? கற்பனை செய்து பார்க்க முடியாத விஷயத்தை செய்து அவன் உயிரை காத்த பிறகு, அவளை எது தடுக்கிறது? அப்பொழுது தான் அவன் மனதில் ஒரு விஷயம் உறைத்தது.  ஒருவேளை, இதனால் தான் அவள் எதையோ பறி கொடுத்தவள் போல் இருந்தாளோ...? அதனால் தான் அவன் கண்களைப் பார்த்து பேசுவதை  அவள் தவிர்த்தாளா? அதனால் தான் மிகவும் வித்தியாசமாக நடந்து கொண்டாளா? உண்மையிலேயே அப்படி நடந்ததா? அவனுக்கு உயிரையும் கொடுத்துவிட்டு, அதை ஏன் இப்படி சிறிது சிறிதாய் பறிக்கிறாள்? அவள் மனதில் என்ன தான் இருக்கிறது? 

வீடு வந்து சேர்ந்த மாமல்லன், சீற்றம் கொண்ட சிங்கத்தை போல் இளந்தென்றலை தேடினான். அவள் சமையலறையிலும் இல்லை, அவளது அறையிலும் இல்லை. தனது கோட்டை கழட்டியபடி தன் அறையை நோக்கி சென்றவன், சிலை போல் நின்றான். அவனது மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது... இளந்தென்றல் அவனது படுக்கையில் எதையோ தேடிக் கொண்டிருந்ததை பார்த்த போது...!

தொடரும்...

Continue Reading

You'll Also Like

23.1K 909 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
425K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...
29K 1.8K 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக...
16.5K 571 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...