இன்னார்க்கு இன்னாரென்று...!(...

By NiranjanaNepol

64.1K 3.3K 653

வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில... More

1 மாமல்லனும் பரஞ்சோதியும்
2 யாரவள்?
3 தெய்வீக அழகு
4 இருவரும் ஒன்று தான்
5 நாம் சந்தித்து விட்டோம்
6 இனம் புரியாத ஒன்று...
7 பிடித்திருக்கிறது
8 விரும்புகிறேன்
9 மனம் உடைந்த மாமல்லன்
10 நீ தான் எனக்கு எல்லாம்
11 புது இடம்
12 எதிர்பாராத திருப்பம்
13 உன்னத உணர்வு
14 வீட்டு சாப்பாடு
15 கசப்பான கடந்த காலம்
16 இதயத்தின் குரல்
17 வெறும் காகிதம் தானே?
18 நிச்சயதார்த்தம்?
19 அவள் வருவாள்
20 வரவில்லை...
21 'வீடு', 'இல்லம்' ஆனது
22 கிணற்று தண்ணீர்...
23 வேலைக்காரி
24 பாட்டிக்கு எப்படி தெரியும்?
25 எதிர்பாராத சுவாரஸ்யம்
26 உனக்கு என்ன ஆனது?
27 அதிஷ்டம் அற்றவளா?
28 மாறுதல்...
29 அக்கறை
30 நீண்ட பயணம்
31 என்ன செய்து விட்டாள்?
33 மனைவியாய்...
33 என்ன அது?
34 வெப்பக் கடத்தல்
35 சிறப்பான போர்வை
36 முன்னா...
37 உங்கள் திட்டமா?
39 மீண்டும் மதுரைக்கே...
40 உளவாளி
39 காத்திருந்த அதிர்ச்சி
40 வரன்
41ஷீலாவின் திட்டம்
42 ஷீலாவா...?
43 எங்கே இருந்தாய்?
44 காதம்பரியின் மகன்
45 சந்திப்பு
46 பிறந்தநாள்
47 ஆபத்தின் விளிம்பில்
48 நினைவுகள்
49 திருமதி மாமல்லன்
50 புதிய வாழ்க்கை
51 இறுதி பகுதி

32 நண்பன் யார்?

953 66 15
By NiranjanaNepol

31 நன்பன் யார்?

தனது அறைக்கு வந்த பின்னும், பொருள்களை போட்டு உடைப்பதை நிறுத்தவில்லை மாமல்லன். அவனது மனைவி, அவன் கட்டிய தாலியை அவிழ்த்து விட்டாள். அவள் தன்னையே தூக்கி எறிந்துவிட்டது போல் இருந்தது அவனுக்கு. அந்த எண்ணமே அவனைக் கொன்றது. திருமணம் கூட அவளை தன்னிடம் நிறுத்தவில்லை என்றால், வேறு எது தான் அவளை தன்னிடம் கொண்டு வந்து நிறுத்தும்? அவள் அதற்கு கூட முக்கியத்துவம் வழங்கவில்லையே...

அவனுக்கு மிகவும் களைப்பாய் இருந்தது. ஜுரம் நெருப்பாய் கொதித்த போதும், அவனுக்கு வீட்டில் இருக்க தோன்றவில்லை.

*நம்பிக்கை* என்பது, மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. நம்பிக்கை இருந்தால், கல்லிலும் கூட கடவுளை காணலாம். நம்பிக்கை இல்லாவிட்டால், கடவுளே நேரில் வந்தாலும் கூட மனம் ஒப்புக் கொள்ளாது. இளந்தென்றல், இதில் முதல் வகையை சேர்ந்தவள். கடவுள் மீதும், விதியிலும் நம்பிக்கை உள்ளவள். எல்லாவற்றிற்கும் மேலாக, நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மதிப்பவள். ஆனால் இந்த விஷயத்தில் அவளது நிலைப்பாடு என்ன? அவள் இந்த திருமணத்தை மதிக்கவில்லையா?

நொறுங்கி போனான் மாமல்லன். அவள் மாங்கல்யத்தை அவிழ்த்து விட்டாள் என்ற எண்ணம் அவனை துன்புறுத்தியது. எந்த உணர்வுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், அவள் அதை செய்துவிட்டாள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. இன்னும் கூட, அவள் தனது நிச்சயதார்த்தத்தில் தான் ஒட்டிக் கொண்டிருக்கிறாளா? என்ன பிதற்றல் இது?

அலுவலகம் செல்ல தயாரான நிலையில், தரைதளம் வந்தான் மாமல்லன். இளந்தென்றல் அங்கு அமர்ந்து கொண்டு, எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். அவன் வந்ததை கூட அவள் கவனிக்கவில்லை. அவளை பார்த்தபடி, சற்று நேரம் அங்கு நின்றான் அவன். அவளுடைய நிலை, அவனுக்கு புரிந்து தான் இருந்தது. அவள் இடத்தில் எந்த பெண் இருந்தாலும் அவள் இப்படித் தான் இருப்பாள். ஆனால், இவள் இளந்தென்றலாயிற்றே...! அவள் விரும்பினால், இதிலிருந்து அவளால் வெளியே வர முடியாதா? விரும்பினால் தானே? அவள் விரும்புவாளா? அவனிடம் வரவேண்டும் என்று அவள் விரும்புவது சாத்தியமா? அதற்கு மேல் ஒன்றும் யோசிக்காமல் அங்கிருந்து சென்றான் மாமல்லன்.

எம் கே அலுவலகம்

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, வானமே உடைந்து விட்டதோ என்றென்றும் அளவிற்கு, பெருமழையை சந்தித்துக் கொண்டிருந்தது சென்னை மாநகரம். பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைக்காடாய் காட்சியளித்தது. வாகனங்கள் மழை வெள்ளத்தில் நீந்தி சென்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாய் ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் வாகனங்களுடன், சாலைகளில், மழை நீருடன் தேங்கி நின்றார்கள். இந்த பெரு மழையைத் தொடர்ந்து, புயலுக்கு வாய்ப்பிருப்பதாய் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

தன் அலுவலகத்தின் ஜன்னல் வழியாக, கொட்டும் மழையை, வறண்ட இதயத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான் மாமல்லன். அவன் அலுவலகம் வந்ததிலிருந்தே அவனது முகத்தில் தெரிந்த பதற்றத்தை கவனித்தான் பரஞ்ஜோதி. அவனது அறைக்கு வந்த பரஞ்ஜோதி, அவனுக்கு முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

"என்ன ஆச்சு மல்லா? எதுக்காக இவ்வளவு டென்ஷனா இருக்க?"

"அப்புறம் சொல்றேன். முதல்ல லேடி ஸ்டாஃப் எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பு. இந்த மழை இப்போ விடுற மாதிரி தெரியல. டிராஃபிக் வேற ஒர்ஸ்ட் ஆயிக்கிட்டே போகுது. அவங்க வீட்டுக்கு போறதுல பிரச்சனை ஆக போகுது..." என்று தும்மினான்.

"உனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லையே?"

"இல்லன்னு சொல்றதுக்கு இல்ல...  தலை, வெடிக்கிற மாதிரி வலிக்குது... ஃபீவர் வேற இருக்கு..."

"அப்புறம் இந்த மோசமான கிளைமேட்ல எதுக்காக நீ ஆஃபீசுக்கு வந்த?"

அவனுக்கு பதில் கூறாமல் மீண்டும் தும்மினான் மாமல்லன்.

"மாத்திரை ஏதாவது போடுறியா?"

"நிச்சயமா போடணும்... என்னால முடியல"

"முதல்ல காலையில ஏதாவது சாப்பிட்டியா, இல்லையான்னு சொல்லு"

"இல்ல"

"ஏன் சாப்பிடாம வந்த? இளந்தென்றலுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே?"

"இல்ல. அவளும் நல்லா இல்ல..." என்றான் மெல்லிய குரலில்.

"உனக்கு என்ன தான் பிரச்சனை? தென்றலுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்ற. அப்புறம் அவங்களை வீட்டில தனியா விட்டுட்டு நீ எதுக்காக இங்க வந்த? நீ இன்னைக்கு ஆஃபீஸ்க்கு வந்தே தீரனும்னு சொல்ற அளவுக்கு இங்க எந்த வேலையும் இல்லையே?"

ஒன்றும் கூறாமல் அமைதி காத்தான் மாமல்லன்.

"இரு வரேன்"

தனது அறைக்கு சென்று, தான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த மதிய உணவை கொண்டு வந்து மாமல்லனிடம் கொடுத்தான் பரஞ்சோதி.

"முதல்ல இதை சாப்பிடு"

"தேங்க்யூ. எனக்கு மாத்திரை ஏதாவது இருந்தா கொடு"

"உன்னோட லாக்கர்ல இருக்கும். போன தடவை நான் அதை வச்சதா ஞாபகம். இரு தேடிப்பார்க்கிறேன்..."

தன்னுடைய கைபேசியை மாமல்லனின் மேஜை மீது வைத்துவிட்டு, அவனது அலமாரியில் சென்று தேடிப் பார்த்தான் பரஞ்ஜோதி. அவன் கூறியபடியே, சில மாத்திரைகள் அங்கு வைக்கப்பட்டிருந்தது. அதை மாமல்லனிடம் கொடுத்துவிட்டு, தண்ணீரையும் அவனிடம் நீட்டினான்.

"நீ போய் நான் சொன்னதை செய். எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பு" என்றான் மாமல்லன்.

மாமல்லனின் மேஜையின் மீது தான் வைத்த தனது கைபேசியை எடுக்க மறந்து, அதை அங்கேயே விட்டுச் சென்றான் பரஞ்சோதி. கண்களை மூடி தனது நாற்காலியில் சாய்ந்த மாமல்லன், முதல் நாள் நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தான். அவனது வாழ்நாளின் மிகப்பெரிய திருப்புமனை அது. அவனுக்கு மட்டுமல்ல, இளந்தென்றலின் வாழ்க்கைக்கும் அது திருப்புமுனை தான். அவளுடைய நிலை இவனை விட மோசம். அவள், தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று மாமல்லன் எண்ணியது என்னவோ உண்மை தான். ஆனால், நிச்சயம் இந்த விதத்தில் அல்ல. ஆனால் அதே நேரம், இது திட்டமிட்டு நடந்ததும் அல்ல. இது யாரும் எதிர்பாராதது.

அதற்காக அவள் தாலியை கழட்டி விடுவதா? அவளுக்கு நடந்த நிச்சயதார்த்தம், அவளுக்கு அவ்வளவு முக்கியமானது என்றால், இந்த திருமணம் அவளுக்கு முக்கியம் இல்லையா? எப்படி நடந்தாலும், திருமணம், திருமணம் தானே? விரும்பத்தகாத விதத்தில் அது நடந்திருந்தாலும் கூட, அவள் தான் கலாச்சாரத்தை மதிப்பவள் ஆயிற்றே...!

*நடப்பதெல்லாம் காரணத்தோடு தான் நடக்கிறது* என்று அவள் அடிக்கடி கூறுவாளே...! இந்த விஷயத்தில் அவள் ஏன் அதைப் பற்றி சிந்திக்கவில்லை? அடுத்து அவள் என்ன செய்யப் போகிறாள்? இந்த விஷயத்தில் அவளுடைய முடிவு என்ன? அவளது மனதில் என்ன இருக்கிறது என்று புரியவில்லையே. உண்மையிலேயே, இந்தப் பெண், யூகத்துக்கு அப்பாற்பட்டவள். ஒருவேளை, அவனுக்கு உடன்பாடு இல்லாத முடிவை அவள் எடுத்து விட்டால், அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது. எது எப்படி இருந்தாலும், இப்போது  அவள் அவனது மனைவி.

அப்பொழுது மாமல்லனின் மேஜையின் மீது பரஞ்சோதி மறந்துவிட்டு சென்ற அவனது கைபேசி ஒலித்தது. கண்களைத் திறந்த மாமல்லன், அந்த கைபேசியை எட்டி எடுத்தான். அதை எடுக்கும் பொழுது அவனது கை, பச்சை நிற குறிப்பின் மீது பட, அந்த அழைப்பு ஏற்கப்பட்டது. மாமல்லன் எதுவும் பேசுவதற்கு முன், அடுத்த பக்கத்தில் இருந்த மனிதன் பேசினான்.

"சார், நீங்க சொன்ன மாதிரியே மாமல்லன் சாரோட கல்யாணத்தை நான் வீடியோ எடுத்துட்டேன். அதை உங்க வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி இருக்கேன். நீங்க அனுப்புன பணம் எனக்கு கிடைச்சிடுச்சு சார். ரொம்ப தேங்க்ஸ்" என்று அழைப்பை துண்டித்தான் அவன்.

ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாத மாமல்லன், சிலை போல் நின்றான். அவனது ரத்தம் கொதித்தது. அது எப்பொழுது வேண்டுமானாலும் அவனது விழிகளின் வழியாக பீய்ச்சி அடித்து விடுமோ என்று தோன்றும் அளவிற்கு அவன் கண்கள் சிவந்தது. பரஞ்சோதியின் கைபேசியை திறந்தான். அந்த கைபேசியின் *கடவுச்சொல்* அவன் அறியாததல்ல. பரஞ்சோதி அதை அவனிடமிருந்து மறைத்ததும் அல்ல.

அதில் புதிதாய் வந்த காணொளி இருந்தது. நடுங்கும் கைகளுடன் அதை ஓட விட்டான் மாமல்லன். முதல் நாள், தனக்கும் இளந்தென்றலுக்கும் நிகழ்ந்த திருமணத்தை அந்த காணொளியில் பார்த்தான் மாமல்லன். கூற முடியாத அளவிற்கு, இளந்தென்றல் மன அழுத்தத்தில் இருந்தது நன்றாகவே தெரிந்தது. அவளது கண்களோ, கட்டுக்கடங்காமல் பொழிந்து கொண்டிருந்தது. அவளது கழுத்தில், அவன் மாங்கல்யம் அணிவித்த பொழுது, அவளது முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவளது நெற்றியில், அவன் குங்குமம் அணிவித்த பொழுது அவள் தன் கண்களை இறுக்க மூடினாள்.

தன்னைச் சுற்றி என்ன தான் நடக்கிறது? அவனுக்கு நடந்த திருமணத்திற்கு பின்னால் இருப்பது, பரஞ்சோதியா? அது எதேச்சைய்யாய் நடக்கவில்லையா? அதை செய்தது பரஞ்சோதி தான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. தன்னுடைய கற்பனைக்கு எட்டாதவற்றையெல்லாம் பரஞ்சோதி செய்யக் கூடும் என்று அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை.

கதவை திறக்கும் சத்தம் கேட்டு, பரஞ்சோதியின் கைபேசியில் இருந்த தன் கண்களை  மெல்ல உயர்த்தினான் மாமல்லன். தன்னுடைய கைபேசி, மாமல்லனின் கையில் இருந்ததை கண்ட பரஞ்சோதி, அவனது கண்களில் தெரிந்த கோபத்தைக் கண்டு பதட்டம் ஆனான்.

"நான் என்னோட ஃபோனை எடுக்க மறந்துட்டேன்..." என்றான் தயக்கத்துடன் பரஞ்சோதி.

"நீ அதை எடுக்க மறந்தது கூட ஒரு விதத்தில் நல்லதா தான் போச்சு...! அதனால தானே உண்மை என்ன, என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கு தெரிஞ்சது..." என்றான் கோபத்துடன் பல்லை கடித்துக் கொண்டு.

எதுவும் கூறாமல் அமைதியாய் அவனை பார்த்துக் கொண்டு நின்றான் பரஞ்சோதி.

"ஏன்டா? எதுக்குடா இப்படி பண்ண? ( அவன் சட்டை கலரை கோபத்துடன் பற்றினான் மாமல்லன் ) நீ இப்படி எல்லாம் கூட செய்வியா? எதுக்குடா இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலையை செஞ்ச? எதுக்கு இப்படி பண்ணி தொலச்ச? என்ன செய்கிறோம்னு தெரிஞ்சு தான் செஞ்சியா? இதோட விளைவுகளை யோசிச்சு பாத்தியா? தென்றல் முகத்தை பார்க்க முடியலடா என்னால... அவ எவ்வளவு ஒடஞ்சு போயிருக்கான்னு தெரியுமா உனக்கு?"

"அவங்க உடைஞ்சு தான் போயிருப்பாங்க. அதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு?" என்றான் பரஞ்சோதி அமைதியாக.

முகத்தை சுருக்கியபடி, தான் பற்றி இருந்த பரஞ்சோதியின் காலரை விடுவித்தான் மாமல்லன்.

"இளந்தென்றல் சோகமா இருக்கிறத பாத்ததனால, உன்னோட மனசு உண்மையை இன்னும் உணரல, மல்லா. மத்த எல்லா விஷயத்தையும் தூக்கி போட்டுட்டு, ஒரே ஒரு விஷயத்தை பத்தி மட்டும் தான் நீ யோசிக்கணும்... அது, இப்போ நீ அவங்களோட ஹஸ்பண்ட். அவங்க உடைஞ்சி மட்டும் போகல... ஆடியும் போயிருக்காங்க. ஏன்னா,  கல்யாணத்தை விட நிச்சயதார்த்தம் பெருசு இல்லைன்னு அவங்களுக்கு தெரியும். தன்னோட புருஷனை விட்டுட்டு அவங்களால போக முடியாது. அது நீ தான் மல்லா...! ஆமாம், நான் கீழ்த்தரமா இறங்கினேன் தான்... நீ சந்தோஷமா இருப்பேன்னா, நான் அதை மறுபடி, மறுபடி செய்வேன். நான் அப்படி செஞ்சதை உன்னால நம்ப முடியலன்னா, நானே சொல்றேன், இப்போதிலிருந்து அதை நம்ப தொடங்கு. மல்லனோட சந்தோஷத்துக்காக பரஞ்ஜோதி கீழ்த்தரமா இறங்குவான்..." என்று வெடித்தான் பரஞ்சோதி, மாமல்லனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி.

"எது சரி, எது தப்பு அப்படிங்குறதை பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல, மல்லா. என்னோட கவலை எல்லாம் உன்னை பத்தி மட்டும் தான். தென்றல் உடஞ்சி போய் இருப்பாங்கன்னு எனக்கு தெரியும். நம்ம கிட்ட நேரமில்ல. இளந்தென்றலுக்கு நம்ம கொடுத்த மூனு மாசம் முடிய போகுது. ஏதாவது பெருசா செய்யாம, அவங்களை உன்கிட்ட நிறுத்த முடியாது. அவங்களை உன்கிட்டயிருந்து போக விட முடியுமா உன்னால? அவங்க இல்லாம வாழ்வியா நீ? எனக்கு தெரியும், அது உன்னால முடியாது. உடைஞ்சு போன மாமல்லனை பார்க்க என்னாலயும் முடியாது. எல்லா விஷயத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கும். தென்றலைப் பொறுத்தவரை நான் செஞ்சது தப்பா இருக்கலாம். ஆனா, உன்னை பொறுத்தவரை நான் செய்தது தப்பில்ல." என்று கர்ஜித்தான் பரஞ்ஜோதி.

தன் நண்பனின் அறியாத பக்கத்தை பார்த்து, திகைத்து நின்றான் மாமல்லன். மாமல்லனின் கண்கள் அனிச்சையாய் கலங்கின. நம் வாழ்நாளில் எத்தனை நண்பர்களை சம்பாதித்தோம் என்பது முக்கியமல்ல. உலகமே எதிர்த்து நின்றாலும், தன்னருகில் நிற்கும் ஒரு நண்பனையாவது சம்பாதிக்க வேண்டும். அது தான் சாதனை. ஆயிரம் நண்பர்களுடன் பொழுதை போக்குவதை விட, நம் சந்தோஷத்தை பெரிதாய் என்னும் ஒரே ஒரு நண்பன் மேலானவன். அவன் தான் மாமல்லனின் பரஞ்சோதி...!

தொடரும்...

Continue Reading

You'll Also Like

167K 6.2K 21
திருமணத்தில் இணைந்த இரு மனம்..❤❤
176K 7.1K 43
பாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய
51.4K 2.9K 100
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால்...
131K 8.8K 37
Hai thangangala..............mature content.....core story partially based on few true incidents.....dont get more attached to the reel charecters...