இன்னார்க்கு இன்னாரென்று...!(...

By NiranjanaNepol

55.9K 3.2K 652

வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில... More

1 மாமல்லனும் பரஞ்சோதியும்
2 யாரவள்?
3 தெய்வீக அழகு
4 இருவரும் ஒன்று தான்
5 நாம் சந்தித்து விட்டோம்
6 இனம் புரியாத ஒன்று...
7 பிடித்திருக்கிறது
8 விரும்புகிறேன்
9 மனம் உடைந்த மாமல்லன்
10 நீ தான் எனக்கு எல்லாம்
11 புது இடம்
12 எதிர்பாராத திருப்பம்
13 உன்னத உணர்வு
14 வீட்டு சாப்பாடு
15 கசப்பான கடந்த காலம்
16 இதயத்தின் குரல்
17 வெறும் காகிதம் தானே?
18 நிச்சயதார்த்தம்?
19 அவள் வருவாள்
21 'வீடு', 'இல்லம்' ஆனது
22 கிணற்று தண்ணீர்...
23 வேலைக்காரி
24 பாட்டிக்கு எப்படி தெரியும்?
25 எதிர்பாராத சுவாரஸ்யம்
26 உனக்கு என்ன ஆனது?
27 அதிஷ்டம் அற்றவளா?
28 மாறுதல்...
29 அக்கறை
30 நீண்ட பயணம்
31 என்ன செய்து விட்டாள்?
32 நண்பன் யார்?
33 மனைவியாய்...
33 என்ன அது?
34 வெப்பக் கடத்தல்
35 சிறப்பான போர்வை
36 முன்னா...
37 உங்கள் திட்டமா?
39 மீண்டும் மதுரைக்கே...
40 உளவாளி
39 காத்திருந்த அதிர்ச்சி
40 வரன்
41ஷீலாவின் திட்டம்
42 ஷீலாவா...?
43 எங்கே இருந்தாய்?
44 காதம்பரியின் மகன்
45 சந்திப்பு
46 பிறந்தநாள்
47 ஆபத்தின் விளிம்பில்
48 நினைவுகள்
49 திருமதி மாமல்லன்
50 புதிய வாழ்க்கை
51 இறுதி பகுதி

20 வரவில்லை...

834 60 7
By NiranjanaNepol

20 வரவில்லை...

மதுரை மண்ணில் கால் வைத்தாள் இளந்தென்றல். ஆனால் அவளது மனமோ அவளிடம் இல்லை. விமானத்தில் ஏறி அமர்ந்ததில் இருந்தே, அவள் மாமலனை பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தாள். அவளால் நம்பவே முடியவில்லை, அவள் இருப்பது மதுரையில் என்பதை. இன்னும் ஒரு மணி நேரத்தில், அவள், அவளுடைய அம்மாவிற்கு முன் இருக்கப் போகிறாள். ஒரு ஆட்டோவை அமர்த்திக் கொண்டு, கோதை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை நோக்கி பயணமானாள்.

அந்த மிகப்பெரிய மருத்துவமனையின் வரவேற்பில் விசாரித்துவிட்டு, கோதைக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையை நோக்கி நடந்தாள். அப்பொழுது, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்களின், உடன் வந்தவர்கள் தங்குவதற்காக ஒரு பொது அறை இருந்ததை கண்டாள். அங்கே மிகப்பெரிய கூட்டம் இருந்தது. சிலர் மற்றவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொடரை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய பாட்டி அங்கு இருக்கவில்லை.

பிறகு, வரவேற்பில் கூறிய அந்த அறையை நோக்கிச் சென்றாள். சகல வசதியும் நிறைந்த அந்த அறையில், கட்டிலில் படுத்துக் கொண்டு, தொலைக்காட்சியில் பழைய பாடலை பார்த்துக் கொண்டிருந்தார் வடிவாம்பாள் பாட்டி. அங்கு வந்த இளந்தென்றலை பார்த்து அவர் வியப்படைந்தார்.

"அடி என் காசி அம்மா...! நீ எப்படி இங்க வந்த?"

"அம்மாவை பார்க்க வந்தேன் பாட்டி. எனக்கு ஒரு வாரம் லீவு"

"நீ இங்க வந்துட்டியே... அப்படின்னா, உன் முதலாளியோட அம்மாவை யார் பாத்துக்குவா?"

"அவங்களை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. நான் அங்க சும்மா தான் இருந்தேன். அதனால தான், எங்க முதலாளி என்னை ஊருக்கு போயிட்டு வர சொன்னாரு"

"அவரை மாதிரி நல்ல மனுஷங்க இருக்கிறதால தான், இன்னும் நாட்டுல மழை பெய்யுது. எவ்வளவு பெரிய மனசு அவருக்கு...! அவர் ஆசைப்படறது எல்லாம் அவருக்கு கிடைக்கணும்..." என்று மனதார வாழ்த்தினார் பாட்டி.

அதைக் கேட்ட இளந்தென்றல், மென்று விழுங்கினாள்.

"அம்மா எங்க பாட்டி? நான் அவங்களை பார்க்கணும்"

"அவ ஐசியூவுல இருக்கா. நம்ம நினைச்ச போதெல்லாம் அவளை போய் பார்க்க முடியாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தை நமக்குன்னு ஒதுக்கி வச்சிருக்காங்க. அப்ப தான் நம்ம அவளை பார்க்க முடியும்"

"என்ன பாட்டி சொல்றீங்க? அப்படின்னா நான் அம்மா கூட இருக்க முடியாதா?"

"வாய்ப்பே இல்ல... வெளி ஆளுங்க அடிக்கடி போய் அவளை பார்த்தா, அவளுக்கு இன்ஃபெக்சன் ஆகும் இல்ல? அவளுக்கு நடந்தது சாதாரண ஆபரேஷன் இல்ல... சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செஞ்சிருக்காங்க. கொறஞ்சது ரெண்டு மாசத்துக்கு அவளை இப்படித்தான் பார்த்துக்கணும். புரிஞ்சுதா?"

"என்ன்னனது? அப்படின்னா அம்மாவை காமன் வார்டுக்கு மாத்த மாட்டாங்களா?"

"மாட்டாங்க. அவளை இன்குபேஷன்ல வச்சிருக்காங்க. அப்ப தான் அவளுக்கு இன்ஃபெக்சன் ஆகாம இருக்குமாம்.  ரெண்டு மாசத்துக்கு பிறகு நீ அவளை பாத்துக்கலாம்"

"இந்த ஆப்ரேஷன் நடக்கிற எல்லா பேஷண்ட்டோட டிரீட்மென்ட்டும் இப்படித்தான்  இருக்குமா?"

"எனக்கு அப்படி தோணல"

"ஏன் பாட்டி?"

"நான் தான் சொன்னேனே... உங்க அம்மாவுக்கு பெரிய லெவல்ல ட்ரீட்மென்ட் கிடைச்சுக்கிட்டு இருக்குன்னு... அவளைப் பத்தின கவலை இல்லாம, நான் எவ்வளவு நிம்மதியா இருக்கேன் தெரியுமா? இந்த ஹாஸ்பிடல் கேண்டின்ல கிடைக்கிற சாப்பாடு, அவ்வளவு ருசியாவும், உயர்தரமாவும் இருக்கு. நான் வீட்டுக்கு போறதை பத்தி யோசிக்கிறதே இல்ல" என்றார் பெருமையாக.

ஏதும் பேசும் திராணி அற்றவளாய் நின்றாள் இளந்தென்றல். அந்த நிமிடம் அவளது மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

"என்ன டா கண்ணா  யோசிச்சுகிட்டு இருக்க?" என்றார் பாட்டி.

"அப்படின்னா,  நான் இங்க என்ன செய்யறது?"

"உன்னை யார் இங்க வரச் சொன்னது? உங்க அம்மாவை பார்த்த திருப்தியோட கிளம்பி போ"

இளந்தென்றலுக்கு நன்றாகவே புரிந்து போனது, அவளுக்கு அங்கு எந்த வேலையும் இல்லை. இறுதியாய், தூரத்தில் இருந்து கோதையை பார்க்க மட்டுமே அவள் அனுமதிக்கப்பட்டாள். தொட்டுப் பேசவோ, பக்கத்தில் சென்று அமரவோ அவள் அனுமதிக்கப்படவில்லை. அவள் ஐசியுவை விட்டு வெளியே வந்த பிறகு, வடிவாம்பாள் பாட்டி உள்ளே சென்று, அவளை போலவே தூரத்தில் நின்று கோதையை பார்த்துவிட்டு வந்தார். அது அந்த மருத்துவமனையின் சட்டம்.

ஏதும் செய்யாமல், சும்மாவே மருத்துவமனையில் அமர்ந்திருந்து வெறுத்து விட்டது இளந்தென்றலுக்கு. அதனால் வீட்டுக்கு செல்லலாம் என்று நினைத்தாள். தன் மடியிலேயே கட்டி வைத்திருந்த பூங்கோதையின் வளையல்களையும், சங்கிலியையும் அவளிடம் கொடுத்து, வீட்டில் பத்திரமாய் வைக்கச் சொன்னார் வடிவாம்பாள் பாட்டி. அவற்றை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு வீடுக்கு வந்தாள் இளந்தென்றல்.

பாட்டி கொடுத்த கோதையின் நகையை அவர்து பீரோவில் வைத்த போது, அங்கிருந்த, காதம்பரி கொடுத்த சங்கிலி அவள் கண்ணில் பட்டது. அதை எடுத்து, அந்த லாக்கெட்டை திறந்து, அதில் இருந்த முன்னாவின் புகைப்படத்தை பார்த்தாள். அவளுக்கு தொண்டையை அடைத்தது.

"நீங்க எங்க இருக்கீங்க? உங்களுக்கு என்னை தெரியுமா? காதம்பரி அத்தை என்னைப் பத்தி உங்ககிட்ட ஏதாவது சொன்னாங்களா? நான் ரொம்ப நாளா உங்களுக்காகத் தான் காத்திருக்கேன்ங்குற விஷயமாவது உங்களுக்கு தெரியுமா? நீங்க இருக்கிற அதே சென்னையில் தான் நானும் இருக்கேன்... உங்களுக்கு ரொம்ப பக்கத்துல தான் இருக்கேன்... உங்களால என்னை உணர முடியலையா? நீங்க நிஜமா, இல்ல கற்பனையா? என் வாழ்க்கையை நான் வீணாக்கிக்கிட்டு இருக்கேனா?" பெருமூச்சுவிட்டு அந்த சங்கிலியை தன் கைப்பையில் பத்திரப்படுத்தி கொண்டாள்.

அவள் வீட்டை விட்டு வெளியே வந்த பொழுது,

*அக்கா* என்று யாரோ அழைப்பதை கேட்டாள். அது நமக்கு ஏற்கனவே அறிமுகமான சுந்தரேசன் தான்.

"எப்படி இருக்க, முன்னா?"

"நான் நல்லா இருக்கேன். நீங்க திரும்பி வந்துட்டீங்களா?"

"ஆமாம்"

"திரும்ப போக மாட்டீங்க தானே?"

"நான் இங்க ஒரு வாரம் லீவில் வந்திருக்கேன்"

அவனது முகம் வாடிப்போனது.

"எப்படி வந்தீங்க? ட்ரெயின்லியா, பஸ்லையா?"

"ஃப்ளைட்ல வந்தேன்"

"ஃப்ளைட்லயா? நெஜமாவா சொல்றீங்க?" என்றான் நம்ப முடியாமல்.

"ஆமாம்"

"ஃப்ளைட் டிக்கெட், ரொம்ப பெருசா இருக்குமாமே... உங்ககிட்ட இருக்கா?"

"இருக்கு. இரு, உனக்கு காமிக்கிறேன்"

தன்னிடம் இருந்த, சென்னைக்கு திரும்பி செல்வதற்கான விமான பயணச்சீட்டை எடுத்து, அவனிடம் நீட்டினாள்.

"செமையா இருக்கு கா... டேய்... ராகவா... பரணி... மாதவா... இங்க பாருங்கடா ஃபிளைட் டிக்கெட்..." தன் கையை உயர்த்தி, அதை தன் நண்பர்களிடம் அசைத்துக் காட்டினான் சுந்தரேசன்.

சில நொடிக்குள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த மற்ற பிள்ளைகள் அவனை நோக்கி ஓடி வந்தார்கள். விமான பயண சீட்டை, முதன் முதலில் பார்க்கும் ஆர்வத்தில், ஒருவர் கையில் இருந்து மற்றொருவர் பிடுங்க துவங்கினார்கள். அந்த சங்கதியில், அந்த விமான பயணச்சீட்டு இரண்டு மூன்று துண்டுகளாய் கிழிந்தது. அதை பார்த்த இளந்தென்றல், அதிர்ச்சி அடைந்தாள் என்று கூறத் தேவையில்லை. சுந்தரேசனை மட்டும் தனியாய் விட்டு விட்டு, மற்ற பிள்ளைகள் அங்கிருந்து ஓடி போனார்கள். சுந்தரேசன் அழத் துவங்கினான்.

"அக்கா, அக்கா, சாரிக்கா... தெரியாம கிழிச்சிட்டோம் கா... அவனுங்க கிட்ட இதை காட்டத்தான் கா கூப்பிட்டேன்... நான் வேணும்னு இதைக் கிழிக்கல கா"

அவன் அழுததைப் பார்க்க பாவமாய் இருந்தது இளந்தென்றலுக்கு. அவளுக்கு தெரியும், அவன் அதை வேண்டுமென்று செய்யக்கூடியவன் அல்ல.

"சரி பரவாயில்ல. அழறதை நிறுத்து"

"உங்க முதலாளி, உங்களை திட்டுவார் இல்ல கா?"

மாமல்லனை நினைத்த இளந்தென்றல்,

"அவர் என்னை திட்ட மாட்டார்" என்றாள்.

"அவரு அவ்வளவு நல்லவரா கா?" என்றான் கண்ணீரை துடைத்த படி சுந்தரேசன்.
 
சில நொடி திகைத்து நின்ற இளந்தென்றல், அவனுக்கு எந்த பதிலும் கூறாமல், புன்னகைத்து விட்டு சென்றாள்.

மல்லை

*தனிமை* ஒரு விசித்திரமான உணர்வு. நாமாக அதை ஏற்றுக்கொள்ளும் போது, அது மனதிற்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருகிறது. ஆனால் அதுவே, வேறு ஒருவர் அந்த தனிமையை நமக்கு வழங்கி விட்டால், அதைப் போல கொடுமை உலகத்தில் வேறு எதுவும் இல்லை.

மாமல்லன் மாமல்லனாகவே இல்லை. அவன், இதற்கு முன் யாரும் பார்க்காத ஒருவனாய் இருந்தான். அவன் வீட்டிலும் தங்கவில்லை அலுவலகமும் செல்லவில்லை. நகராத *நேரத்தை* பிடித்து தள்ளிக் கொண்டிருந்தான் அவன். இளந்தென்றல் வருவதற்கு முன், எப்பொழுதும் தனியாகவே இருந்து பழக்கப்பட்ட அவனுக்கு, அதே தனிமை, இப்பொழுது வேப்பங்காயாய் கசந்தது. அவளது கொலுசு சத்தம் கேட்காமல், அவனது வீடு மயானம் போல் தோன்றியது. அவள் வந்த சிறிது நாளிலேயே, அவனது நாக்கு, எந்த அளவிற்கு அவளது கை உணவிற்கு அடிமைப்பட்டு விட்டது என்று உணர்ந்தான் அவன். அவனது மனம், அவள் இல்லாத அவளது அறையை சுற்றி வந்தது. அவனால், இளந்தென்றல் இல்லாத வாழ்க்கையை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. ஒருவேளை, 'அவள் வராமல் போனால் என்னாவது?' என்ற எண்ணம் அவனை பிடுங்கி தின்றது. இந்த சிறிய பிரிவையே தன்னால் தாங்க முடியவில்லையே... ஒருவேளை அவள் அவனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டால் என்னாவது?

அதை எண்ணிய போது அவனது உள்ளுறுப்புகள் நடுங்கின. வாழ்க்கையில் முதல்முறையாக, தான் செயலிழந்ததாய் உணர்ந்தான் மாமல்லன். தொப்பன்று அமர்ந்த அவனது கண்கள், சட்டென்று கலங்கின. இப்பொழுது அவன் உணரும் இதே கையாலாகாத உணர்வு, அவனுடைய அம்மா அவன் கண் முன்னால் மடிந்து சரிந்த போது அவனுக்கு ஏற்பட்டது. அதைப் போலவே, இப்பொழுது இளந்தென்றலும் அவன் உயிரை வாங்குகிறாள். அவளை மதுரைக்கு அனுப்பி, தவறான முடிவை எடுத்து விட்டானோ என்று தோன்றியது அவனுக்கு. அதை நினைத்த போது, அவனது முகம் சட்டென்று பேய் போல மாறியது. இல்லை... இந்த முறை அவன் அப்படி நடக்க விடப்போவதில்லை. இந்த முறை மாமல்லன் நிச்சயம் தோற்க மாட்டான், என்று சூளுரைத்துக் கொண்டான் மாமல்லன்.

மதுரை

உறங்கிக் கொண்டிருந்த பாட்டியின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் இளந்தென்றல். அப்போது அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த இன்டர்காம் அழைத்தது. அதை எடுத்துப் பேசினாள் இளந்தென்றல்.

"உங்களுக்கு கால் வந்திருக்கு மேடம். கனெக்ட் பண்ணட்டுமா?" என்றாள் வரவேற்பாளர் பெண்.

"ஆங்...  பண்ணுங்க"

"ஒன் செகண்ட்... "

அந்த அழைப்பை ஏற்கச் செய்தாள் அவள்.

"ஹலோ யார் பேசுறீங்க?"

 பதில் இல்லை

"ஹலோ யாருங்க நீங்க?"

 இந்த முறையும் பதில் இல்லை.

"உங்களுக்கு பேச விருப்பம் இல்லன்னா, எதுக்காக எனக்கு கால் பண்ணீங்க? உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்னை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? எதுக்கு எனக்கு ஃபோன் பண்ணீங்க?"

"ஏன்னா, நான் உன்னை காதலிக்கிறேன்" என்ற மாமல்லனின் குரலைக் கேட்டு உறைந்து நின்றாள் இளந்தென்றல்.

சிறிது நேரம் வரை, இரண்டு பக்கமும் மௌனம் நிலவியது.

"நீங்களா...????" என்றாள் இளந்தென்றல்.

"உன்னை காதலிக்கிறேன்னு சொல்ற தைரியம், என்னைத் தவிர வேற எவனுக்கு இருக்கு?"

அமைதியாய் நின்றாள் இளந்தென்றல்.

"உங்க அம்மா எப்படி இருக்காங்க?"

"நல்லா இருக்காங்க"

"நீ?"

"நானும் நல்லா இருக்கேன்"

"நான் எப்படி இருக்கேன்னு கேட்க மாட்டியா?"

மீண்டும் பதில் கூறாமல் நின்றாள் இளந்தென்றல்.

"தென்றல்..."

"நீங்க நல்லா தான் இருப்பீங்க"

"அப்படியா?" என்றான் எகத்தாளமாய்.

"நீங்க தான் உங்க விதியை நிர்ணயிக்கிறவர் ஆச்சே..."

தன் கை விரல்களை மடக்கி, கண்களை மூடினான் மாமல்லன். ஆம், அவன் தன் விதியை நிர்ணயிக்க கூடியவன் தான். ஆனால், இது தான் முதல் முறை, அவளை மதுரைக்கு அனுப்பிய தனது நிர்ணயம் சரியா என்று அவன் சந்தேகம் கொண்டது.

அவன் அமைதியிழந்து இருந்தது, இளந்தென்றலுக்கு புரிந்தது.

"ரொம்ப தேங்க்ஸ்" என்றாள்.

இந்த முறை மாமல்லன் அமைதி காத்தான்.

"எல்லாத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ்"

"ம்ம்ம்ம்... டேக் கேர்..." அழைப்பை துண்டித்தான் மாமல்லன்.

அவளது *இல்லாமையால்* தவித்துப் போன மாமல்லன், அவளது குரலை கேட்க வேண்டும் என்று விரும்பினான். அவ்வளவு தான். அதனால் தான், அவள் அவனை திட்டும் பொழுது கூட அவனுக்கு கோபமே வரவில்லை. அவன் குரலை கேட்க வேண்டும் என்று தானே அவன் ஆசைப்பட்டான்.! பாலைவனம் போல்  வறண்டு கிடந்த அவனது மனதை அவளது குரல், தென்றலாய் வருடி விட்டு சென்றது.

இந்த ஒரு வாரம் கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து செல்ல வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். யாருக்காகவும் காத்திருக்காத *காலம்*, அவன் விரும்பிய படியே ஓடிச் சென்றது.

ஒரு வாரத்திற்கு பிறகு

சில முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட அலுவலகம் வந்தான் மாமல்லன். அவனது முகம், அமைதியிழந்து இருந்ததை கவனித்தான் பரஞ்சோதி. அன்று மதிய விமானத்தில், இளந்தென்றல் சென்னைக்கு திரும்பி வர இருக்கிறாள். மறுபடி, மறுபடி தன் கைக்கடிகாரத்தை பார்த்தபடி இருந்தான் மாமல்லன். பயத்தில் பரஞ்சோதியின் வயிறு கலங்கியது. கோப்புகளில் கையெழுத்திட்ட மாமல்லன், அங்கிருந்து கிளம்ப முற்பட்டான்.

"எங்க கிளம்புற, மல்லா?"

"என்ன தெரியாத மாதிரி கேக்குற? தென்றலை பிக்கப் பண்ண ஏர்போர்ட்டுக்கு போறேன்"

"நீ சாரதி அண்ணனை அனுப்பலாம் இல்லையா?"

(சாரதி, மாமல்லனின் கார் ஓட்டுநர்)

"ஒரு வாரம்... ஒரு வாரத்துக்கு பிறகு நான் அவளை பாக்க போறேன். ஞாபகம் இருக்குல்ல?"

"எப்படி இருந்தாலும் அவங்க வீட்டுக்கு தானே வர போறாங்க?"

"அவ வர்ற வரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது"

"ஆனா மல்லா... "

அவன் பேச்சுக்கு செவி சாய்க்காமல் அங்கிருந்து நடந்தான் மாமல்லன். மாமல்லனின் ஆர்வத்தை கண்ட பரஞ்சோதிக்கு இருப்பு கொள்ளவில்லை. ஒருவேளை இளந்தென்றல் வராமல் போனால், என்ன ஆகும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். தனது கைபேசியை எடுத்து யாருக்கோ ஃபோன் செய்தான்.

தனது காரை வேகமாய் ஓட்டி சென்றான் மாமல்லன். தனக்கு வந்த அழைப்பை ப்ளூடூத்தில் ஏற்று பேசினான்.

"மல்லா, நீ ஏர்போர்ட்டுக்கு போக வேண்டிய அவசியம் இல்ல"

"ஏன்?"

"தயவுசெய்து திரும்பி வந்துடு"

"அதான் ஏன்னு கேக்குறேன்"

"மல்லா..." என்று தயங்கினான் பரஞ்ஜோதி

"சொல்லி தொலைடா..."

"நம்ம ரிசர்வ் பண்ணி கொடுத்த ஃபிளைட்ல, அவங்க போர்ட் ஆகல"

கோபத்தில் பல்லை கடித்தான் மாமல்லன்.

"மதுரைக்கு போறதுக்கு ஒரு ஹெலிகாப்டரை புக் பண்ணு... இன்னும் ஒரு மணி நேரத்துல..."

"நான் சொல்றதை கேளு மல்லா "

"ஷட் அப்... நான் அவகிட்ட ஏதாவது தப்பா நடந்துக்க முயற்சி பண்ணேனா? அப்புறம் அவளுக்கு திரும்பி வரதுல என்ன பிரச்சனை இருக்கு? அவ எப்படி இந்த மாதிரி செய்யலாம்?"

"கொஞ்சம் பொறுமையா இரு"

"நான் சொன்னத செய்" அழைப்பை துண்டித்து, தன் காதில் இருந்த ப்ளூடூத்தை பிடுங்கி எறிந்தான் மாமல்லன்.

"நீ இப்படி செஞ்சிருக்க கூடாது தென்றல்... செஞ்சிருக்கவே கூடாது... என் நம்பிக்கையை நீ கொன்னுட்ட..." தனக்குத்தானே உறுமினான்.

காரை யூ டர்ன் எடுத்து, வீட்டுக்கு விரைந்தான்... மதுரைக்கு செல்ல தேவையான உடைமைகளை எடுக்க.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

52.6K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
81.7K 3.8K 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா...
55.9K 3.2K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...