இன்னார்க்கு இன்னாரென்று...!(...

Oleh NiranjanaNepol

56.2K 3.3K 652

வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில... Lebih Banyak

1 மாமல்லனும் பரஞ்சோதியும்
2 யாரவள்?
4 இருவரும் ஒன்று தான்
5 நாம் சந்தித்து விட்டோம்
6 இனம் புரியாத ஒன்று...
7 பிடித்திருக்கிறது
8 விரும்புகிறேன்
9 மனம் உடைந்த மாமல்லன்
10 நீ தான் எனக்கு எல்லாம்
11 புது இடம்
12 எதிர்பாராத திருப்பம்
13 உன்னத உணர்வு
14 வீட்டு சாப்பாடு
15 கசப்பான கடந்த காலம்
16 இதயத்தின் குரல்
17 வெறும் காகிதம் தானே?
18 நிச்சயதார்த்தம்?
19 அவள் வருவாள்
20 வரவில்லை...
21 'வீடு', 'இல்லம்' ஆனது
22 கிணற்று தண்ணீர்...
23 வேலைக்காரி
24 பாட்டிக்கு எப்படி தெரியும்?
25 எதிர்பாராத சுவாரஸ்யம்
26 உனக்கு என்ன ஆனது?
27 அதிஷ்டம் அற்றவளா?
28 மாறுதல்...
29 அக்கறை
30 நீண்ட பயணம்
31 என்ன செய்து விட்டாள்?
32 நண்பன் யார்?
33 மனைவியாய்...
33 என்ன அது?
34 வெப்பக் கடத்தல்
35 சிறப்பான போர்வை
36 முன்னா...
37 உங்கள் திட்டமா?
39 மீண்டும் மதுரைக்கே...
40 உளவாளி
39 காத்திருந்த அதிர்ச்சி
40 வரன்
41ஷீலாவின் திட்டம்
42 ஷீலாவா...?
43 எங்கே இருந்தாய்?
44 காதம்பரியின் மகன்
45 சந்திப்பு
46 பிறந்தநாள்
47 ஆபத்தின் விளிம்பில்
48 நினைவுகள்
49 திருமதி மாமல்லன்
50 புதிய வாழ்க்கை
51 இறுதி பகுதி

3 தெய்வீக அழகு

1.3K 65 14
Oleh NiranjanaNepol

3 தெய்வீக அழகு

மறுநாள்

அன்று, மாமல்லனுக்கு மிக  கடுமையான வேலை பலு இருந்தது. அனைத்தையும் முடித்துக் கொண்டு அவன் வீட்டுக்கு புறப்பட பின் மாலை பொழுதாகிவிட்டது. மிகவும் களைப்பாக இருந்த அவன், வீட்டுக்கு சென்றவுடன் குளித்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று எண்ணினான். அவன் ஒரு பேருந்து நிறுத்தத்தை கடந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பெண், மயங்கி விழுவதை கவனித்தான். அந்த பேருந்து நிறுத்தத்தில் அவளைத் தவிர வேறு பெண்கள் யாரும் இல்லை. அங்கு நின்றிருந்த மற்ற ஆண்களும் கண்ணியமானவர்களாக தெரியவில்லை. காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு, அந்தப் பெண்ணை நோக்கி ஓடினான் மாமல்லன்.

அந்தப் பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்தான்... அவளுக்கு தண்ணீர் புகட்டினான். ஆனால் அவளிடம் எந்த அசைவும் தென்படவில்லை. அவ்வளவு நேரம், மங்களாய் எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கு, திடீரென்று பளிச்சென்று சுடர் விட்டது. அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்த அவன் உறைந்து போனான். அவள் முகத்தில் தெய்வீக கலை சொட்டியது. அவளது முகம் களைப்பாய் தெரிந்த போதும் பேரழகாய் இருந்தாள். மாநிறத்திற்கும், சிவந்த நிறத்திற்கும் இடைப்பட்ட நிறத்தில் இருந்த அவள், எளிமையாகவும், அதே நேரம் வசீகரத்துடனும் இருந்தாள். அவள் முகத்தில், துளி கூட செயற்கை ஒப்பனை இல்லை. இயற்கையாகவே அழகாக இருந்த அந்தப் பெண், அவனை சட்டென்று கவர்ந்தாள். தனக்குள் என்ன நிகழ்கிறது என்பதே புரியவில்லை மாமல்லனுக்கு.

எதைப் பற்றியும் யோசிக்காமல், அந்த பெண்ணை தன் கையில் ஏந்தி சென்று, தன் காரில் அமர வைத்து, அருகில் இருந்த மருத்துவமனையை நோக்கி, வண்டியை செலுத்தினான். மருத்துவமனையை அடைந்த அவன், மீண்டும் அவளை தூக்கிக்கொண்டு சென்று, மருத்துவமனை படுக்கையில் கிடத்தினான், அவளை உள்ளே கொண்டு செல்ல அவனுக்கு வேறு வழிகள் இருந்த போதும். 

மருத்துவர் வந்து அந்த பெண்ணை சோதித்துப் பார்த்தார். இமைக் கொட்டாமல் அந்த பெண்ணை பார்த்தபடி நின்றிருந்தான் மாமல்லன்.

"அவங்க காலையிலயிருந்து  எதுவும் சாப்பிடல போல இருக்கு... அதனால தான் மயங்கி விழுந்திருக்காங்க"

"அப்படின்னா, அவங்க சாப்பிட கூட எதுவும் இல்லாதவங்கன்னு சொல்றீங்களா?" என்றான் கவலையாக.

"அப்படியும் இருக்கலாம்... இல்லன்னா அவங்க விரதம் கூட இருந்திருக்கலாம். ஏன்னா, கேதார கௌரி விரதம் ஆரம்பம் ஆயிடுச்சி இல்லயா...!"

"எதுக்கு தான் இந்த பொண்ணுங்க, தேவையில்லாத நம்பிக்கை எல்லாம் வச்சுக்கிட்டு, இப்படி விரதம் இருந்து உடம்பை கெடுத்துக்குறார்களோ" என்று அலுத்துக் கொண்டான் மாமல்லன்.

"அவங்க எழுந்த பிறகு, நீங்களே அவங்க கிட்ட கேளுங்க" என்று சிரித்தார் மருத்துவர்.

"ஆனா, இவங்க யாருன்னு எனக்கு தெரியாது. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன் அவ்வளவு தான். நீங்க அவங்களை ட்ரீட் பண்ணி, அனுப்பி வையுங்க. நான் பில் மட்டும் பே பண்ணிடுறேன்"

அந்தப் பெண்ணிடம் போதுமான பணம் இருக்குமோ என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டதால், அவனே பணத்தைக் கட்டி விட்டு சென்றான். அங்கிருந்து அவன் சென்று விட்டாலும் கூட, அவனது மனம் அந்த மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்தது. தன் எண்ணத்தை எண்ணும் போது,  அவனுக்கே எரிச்சலாக இருந்தது. நேற்று தான், ஒரு துப்புரவு தொழிலாளியின் மீது அக்கறை கொண்ட ஒரு பெண்ணின் மீது அவன் நாட்டம் சென்றது. இப்போது இவளா? என்ன தான் நடக்கிறது அவனுக்குள்?

தன் மீதே ஆத்திரமாய் வந்தது மாமல்லனுக்கு. ஆனாலும், அவனால் மருத்துவமனையில் விட்டு வந்த பெண்ணை நினைக்காமல் இருக்க முடியவில்லை. எவ்வளவு தெய்வீகமான அழகு அவளுடையது...! மருத்துவர் கூறியது போல் ஒருவேளை, அவள் விரதம் இருந்திருப்பாளோ? அது தெரியாமல் அவன் அவளுக்கு தண்ணீர் புகட்டி விட்டானே...! அந்தப் பெண், விரத சமாச்சாரங்களில் நம்பிக்கை உடையவள் என்றால், அவன் அவளுக்கு தண்ணீர் கொடுத்த விஷயம் தெரிந்தால் அவள் என்ன செய்வாள்? அதை செய்யும் உரிமை, அவள் மீது உரிமையுள்ள அந்த ஒரு நபருக்கு மட்டுமே உரித்தானது அல்லவா? ஆனால், அவளுக்கு அதைப் பற்றி எப்படி தெரியும்? அவளுக்கு தண்ணீர் கொடுத்த விஷயம் அவனுக்கு மட்டும் தானே தெரியும்? அந்தப் பெண்ணை அவன் மறுபடியும் சந்திக்கப் போவதுமில்லை, அவளிடம் அதை பற்றி கூறப்போவதுமில்லை. பிறகு என்ன கவலை?

அவனுடைய அம்மாவும் கூட இப்படித் தான் எல்லாவற்றிற்கும் விரதம் இருப்பார். அதற்காக அவரிடம் சண்டை இடுவான் மாமல்லன்.

மீண்டும் அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்ததால், சலிப்புடன் கண்ணை மூடினான். அந்தப் பெண் சுயநினைவற்றுக்கிடந்த போது எவ்வளவு அப்பாவியாய் தோன்றினாள்...! அவள் பார்க்க அப்பாவியை போல் இருக்கிறாள் தான், ஆனால் அவள், முதல் நாள் வெள்ளை உடை அணிந்து வந்த, அந்த பெண்ணை போன்ற நல்ல குணம் கொண்டவளாக இருக்க முடியாது. ஆனால், அவனுக்கு அந்தப் பெண்ணை மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது? அவன் ஒன்றும், ஒரு பெண்ணை பார்த்தவுடன் விழுந்து விடக் கூடியவன் அல்லவே...! மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றக்கூடிய முகங்கள் பல இருக்கலாம்... ஆனால் மீண்டும் மீண்டும் எண்ண வைக்கும் *மனம்* மிக அரிது. தான் சந்தித்த இரண்டு பெண்களின் யார் சிறந்தவர் என்ற தனது ஒப்பீட்டை முடித்துக் கொண்டு, உறங்கிப் போனான் மாமல்லன்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும், மாமல்லனின் காலில் சக்கரத்தை கட்டி விட்டன. அவன் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதாயிற்று. அவ்வளவு இக்கட்டான நிலையிலும் அவனால் அந்த இரு பெண்களை பற்றியும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவன் மனதில் அடிக்கடி வந்து சென்ற அந்த இரு பெண்களின் நினைவுகளும், அவனுக்கு அவன் மீதே வெறுப்பை ஏற்படுத்தியது. தன் அம்மாவின் தற்கொலைக்கு காரணமான, தன் அப்பாவை போல் இல்லாமல், *ஏகப்பத்தினி விரதனாக* இருக்க வேண்டும் என்பது அவன் வாழ்நாள் லட்சியமாய் இருந்தது. ஆனால், அவனையும் மீறி, அவன் மனம் இரண்டு பெண்களை வட்டமிட்தை எண்ணிய போது அவனுக்கே கேவலமாய் இருந்தது.

மாமல்லனின் நடவடிக்கைகளை விடாமல் கவனித்துக் கொண்டிருந்த பரஞ்சோதி குழப்பம் அடைந்தான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவ்வளவு சீக்கிரம் எந்த பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டு விடுபவன் அல்ல மாமல்லன். அப்படியே ஏதாவது பிரச்சனைகள் வந்தாலும் வெகு விரைவிலேயே அதிலிருந்து மீண்டு விடுவான் அவன். ஆனால் இப்பொழுது, பரஞ்ஜோதி கவனித்துக் கொண்டிருப்பது முற்றிலும் வேறாய் இருந்தது. அவ்வப்போது மாமல்லன் தன்னிலை மறந்து விடுகிறான். மூன்று நாட்களுக்கு முன், லண்டனில் இருந்து திரும்பிய அந்த மாமல்லன் அல்ல இவன். திடீரென்று அவனுக்கு என்ன ஆனது? அவன் அமைதி குலைந்து காணப்படுகிறான். அவனை இவ்வளவு தூரம் நிலைகுலையச் செய்தது எது?

தன் அலுவலக அறையில் அமர்ந்து எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தான் மாமல்லன். அங்கு இரண்டு கோப்பை காபியுடன் வந்த பரஞ்ஜோதி, ஒன்றை அவனிடம் நீட்டினான். அதை எடுத்து பருகிய மாமல்லன், ஒன்றுமே கூறாமல் இருந்தது அவனுக்கு மேலும் ஆச்சரியத்தை தந்தது. அடுத்த வாய் குடிக்க சென்றவனை தடுத்து நிறுத்தினான் பரஞ்சோதி. அவனை முகம் சுளித்துப் பார்த்தான் மாமல்லன்.

"என்ன பிரச்சனை மல்லா?"

"என்ன பிரச்சனை?" என்றான் கண்களை சுருக்கி.

"அதையே தான் நானும் கேட்கிறேன். நீ குடிச்ச காபியில டபுள் சுகர் இருக்கு."

அப்பொழுது தான், தனது நாக்கில் ஒட்டிக் கொண்டிருந்த காபியின் ருசியை உணர்ந்தான் மாமல்லன். திகைப்புடன் பரஞ்சோதியை பார்த்தான்.

( இந்த கதையில் வரும் நாயகன், சர்க்கரை வியாதி உடையவன். அதற்காக நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் கதையின் நாயகன், சர்க்கரை வியாதிக்காரனாக வருவது, இது தான் கடைசி முறை. அது கதைக்கு மிகவும் தேவை என்பதால் என்னால் இதை தவிர்க்க முடியவில்லை. அது கதைக்கு எந்த அளவிற்கு அவசியமானது என்பதை நீங்கள் கதையின் ஓட்டத்தில் புரிந்து கொள்வீர்கள். நன்றி🙏🏻)

"நான் எதையோ யோசிச்சுக்கிட்டு இருந்தேன்" என்று சமாளித்தான் மாமல்லன்.

"அப்படி எது, உன்னை எல்லாத்தையும் மறக்க வைக்குது?"

"ஒன்னுமில்ல "

"ஒன்னும் இல்லாத விஷயத்துக்காக, மாமல்லன் தன்னையே மறக்குறான்னு என்னால நம்ப முடியல"

"ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல?"

"நெஜமா தான் சொல்றியா? "

"ஆமாம்"

சந்தேகத்தோடு அங்கிருந்து நகர்ந்தான் பரஞ்சோதி. எரிச்சலுடன் கண்ணை மூடினான் மாமல்லன். அவன் பரஞ்ஜோதியிடம் எப்படி கூறுவான்? மூன்று நாட்களுக்கு முன்பு தானே பெண்களைப் பற்றியும், திருமண பந்தம் பற்றியும் அவனிடம் வாய் கிழிய பேசினான்...! அவனிடம் எப்படி கூறுவான், அவனது மனதை ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் ஆட்கொண்டு இருக்கிறார்கள் என்று? அது எவ்வளவு பெரிய கேவலம்? அவனாலேயே அதை சகித்துக் கொள்ள முடியவில்லையே... அப்படி என்றால், பரஞ்ஜோதி என்ன செய்வான்? முதலில் எகத்தாளம் செய்வான். பிறகு அந்த பெண்களை தேடி கண்டுபிடித்து, நிச்சயம் அதில் ஒருத்தியை அவன் தலையில் கட்டி வைப்பான்.

திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று இல்லை மாமல்லனுக்கு... அந்த இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் தான் பிரச்சனையே... உயர்ந்த குணமா அல்லது தெய்வீக முகமா? இப்படி இருவருக்கு மத்தியில் சிக்கித் தவிப்பதை விட, இங்கிருந்து சீக்கிரம் சென்று விட்டால் நல்லது என்று நினைத்தான் அவன். நாளை அவனது அம்மாவின் பிறந்தநாள். அதை முடித்துக் கொண்டு புறப்பட்டு விட வேண்டும் என்று நினைத்தான்.

மறுநாள்

அம்மன் கோவில் 

பூஜைக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்து முடித்து விட்டிருந்தான் பரஞ்சோதி. கோவிலுக்கு வரும் பெண்களுக்கு வழங்க, மூட்டை மூட்டையாய் புடவைகளும் தயார். அதை ஒவ்வொரு வருடமும் தானம் செய்து வந்தான் மாமல்லன். ஏதோ கொடுக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் புடவைகள் அல்ல அவை. அந்த புடவைகள் மாமல்லன் எவ்வளவு வசதியானவன் என்பதை பறைசாற்றியது. வருடா வருடம் அதை வாங்கிச் சென்று பழகிய மக்கள், இந்த முறையும் அதை வாங்கிச் செல்ல குவிந்தார்கள்.

பூஜையை முடித்துக் கொண்டு, புடவைகளை தானம் வழங்க தொடங்கினான் மாமல்லன். அவனுடைய ஆட்கள், கூட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கூட்டம் முண்டியடித்துக் கொண்டு, மாமல்லனை நெருங்காமல் பார்த்துக் கொண்டார்கள். மாமல்லனின் அருகில் இருந்து நகரவே இல்லை பரஞ்சோதி. அருகில் நின்றபடி, அவனிடம் புடவை டப்பாக்களை, ஒன்றன்பின் ஒன்றாக கொடுத்துக் கொண்டு இருந்தான்.

அப்பொழுது, மாமல்லம் கண்ட காட்சி அவனை செயலிழக்கச் செய்தது. அதே வெள்ளை நிற சுடிதார், அதே சிவப்பு நிறத்தில் வெள்ளை பூ போட்ட துப்பட்டா அணிந்த பெண்ணை பார்த்த போது. இன்றும் அவள் அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு தான் நின்றிருந்தாள்.

அவ்வளவு நேரம் *ஜெட்* வேகத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவனது கரங்கள், வேகம் இழந்தன. இறுதியில் அவை வேலை செய்வதை நிறுத்தின. அது பரஞ்சோதியின் கவனத்தை ஈர்த்தது. மாமல்லனின் கண்கள் நிலைத்து நின்ற திசை நோக்கி அவன் கண்கள் திரும்பியது. மாமல்லன் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு பெண்ணா? சட்டென்று எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை பரஞ்சோதியால். மாமல்லன் மீது கவனத்தை வைத்தபடி, தானே புடவைகளை வழங்க துவங்கினான்.

தனது கண்களை அவள் மீதிருந்து அகற்றவே இல்லை மாமல்லன். தனது காதுகளை கூர்மையாக்கி, அந்தப் பெண்ணின் குரலை கேட்க முயன்றான்.

அவள் கோவில் பூசாரியிடம் பேசிக் கொண்டிருந்தது அவன் காதுகளில் விழவில்லை.

"நீ புடவை வாங்கலையா மா?" என்றார் பூசாரி.

"கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கு சாமி, முதல்ல இல்லாதவங்க வாங்கிக்கட்டுமே."

"நான் சில வருஷமா இவங்களை கவனிச்சுக்கிட்டு தான் வரேன். யாரையும் இவங்க வெறுங்கையோட அனுப்புறதில்ல"

"அப்படின்னா சரி... எனக்கு கிடைக்கணும்னு இருந்தா, நிச்சயம் கிடைக்கும்" 

"இந்த குங்குமத்தை வேப்ப மரத்தடியில் இருக்கிற புத்துக்கிட்ட வச்சிட்டு வரியா மா? அபிஷேக குங்குமம் இது. எல்லாரும் அங்கிருந்தே எடுத்து இட்டுக்குவாங்க "

"ஓ... குடுங்க வச்சுட்டு வரேன்"

குங்குமக் கிண்ணத்தை அவளிடம் கொடுத்தார் பூசாரி. அதை வாங்கிக்கொண்டு அவள் செல்வதை தூரத்தில் இருந்து கவனித்தான் மாமல்லன். அவள் செல்கிறாள். பரஞ்சோதியிடம் ஒன்றும் கூறாமல் அவளை நோக்கி ஓடினான். அவன் அப்படி பதறி அடித்துக் கொண்டு ஓடுவதை கவனித்த பரஞ்சோதி, வேலையை தொடர்ந்த படி அவனையே பார்த்துக் கொண்டு நின்றான்.

அந்தப் பெண்ணுக்கு வெகு அருகில் சென்று விட்ட மாமல்லன், அவளை எட்டிப் பிடிக்க முயன்ற போது, அவளாகவே திரும்பி, அவனுடன் மோதிக்கொண்டாள். அவள் கையில் இருந்த குங்குமம் கிண்ணம் மேலே ஏகிறி விழுந்ததில், இருவர் மீதும் குங்குமம் கொட்டிக் கொண்டது.

தனக்கு முன்னாள் இருந்த பெண்ணை பார்த்து, மலைத்துப் போனான் மாமல்லன். துப்புரவு தொழிலாளிக்காக பறிந்து பேசிய அந்தப் பெண்ணை பார்க்க ஓடி வந்தான் மாமல்லன். ஆனால் அவன் பார்த்தது, அவன் மருத்துவமனையில் சேர்த்த பெண்.

தொடரும்...

Lanjutkan Membaca

Kamu Akan Menyukai Ini

365K 15.9K 85
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல...
184K 6.1K 66
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடி...
82K 3.8K 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா...
214K 9.9K 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயி...