இன்னார்க்கு இன்னாரென்று...!(...

By NiranjanaNepol

56.2K 3.3K 652

வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில... More

1 மாமல்லனும் பரஞ்சோதியும்
3 தெய்வீக அழகு
4 இருவரும் ஒன்று தான்
5 நாம் சந்தித்து விட்டோம்
6 இனம் புரியாத ஒன்று...
7 பிடித்திருக்கிறது
8 விரும்புகிறேன்
9 மனம் உடைந்த மாமல்லன்
10 நீ தான் எனக்கு எல்லாம்
11 புது இடம்
12 எதிர்பாராத திருப்பம்
13 உன்னத உணர்வு
14 வீட்டு சாப்பாடு
15 கசப்பான கடந்த காலம்
16 இதயத்தின் குரல்
17 வெறும் காகிதம் தானே?
18 நிச்சயதார்த்தம்?
19 அவள் வருவாள்
20 வரவில்லை...
21 'வீடு', 'இல்லம்' ஆனது
22 கிணற்று தண்ணீர்...
23 வேலைக்காரி
24 பாட்டிக்கு எப்படி தெரியும்?
25 எதிர்பாராத சுவாரஸ்யம்
26 உனக்கு என்ன ஆனது?
27 அதிஷ்டம் அற்றவளா?
28 மாறுதல்...
29 அக்கறை
30 நீண்ட பயணம்
31 என்ன செய்து விட்டாள்?
32 நண்பன் யார்?
33 மனைவியாய்...
33 என்ன அது?
34 வெப்பக் கடத்தல்
35 சிறப்பான போர்வை
36 முன்னா...
37 உங்கள் திட்டமா?
39 மீண்டும் மதுரைக்கே...
40 உளவாளி
39 காத்திருந்த அதிர்ச்சி
40 வரன்
41ஷீலாவின் திட்டம்
42 ஷீலாவா...?
43 எங்கே இருந்தாய்?
44 காதம்பரியின் மகன்
45 சந்திப்பு
46 பிறந்தநாள்
47 ஆபத்தின் விளிம்பில்
48 நினைவுகள்
49 திருமதி மாமல்லன்
50 புதிய வாழ்க்கை
51 இறுதி பகுதி

2 யாரவள்?

1.5K 67 12
By NiranjanaNepol

2 யாரவள்?

தனது மொபைல் கம்பெனியின் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருந்ததால், அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு செல்ல தயாரானான் மாமல்லன். வியாபார உலகத்தை பொறுத்தவரை, அவன் இந்த ஒரு நிகழ்ச்சிக்காக தான் மதுரை வந்திருப்பதாய் அனைவரும் நம்பினார்கள். ஆனால் யாருக்கும் தெரியாத, பரஞ்சோதிக்கு மட்டுமே தெரிந்த ஒரு காரணம் இருந்தது.

அது அவன் வாழ்வின் மிக முக்கியமான நாள்... கடந்த சில ஆண்டுகளாய் அவன் ஒருபோதும் தவற விட்டு விடாத ஒரு நாள்... அவனது அம்மாவின் பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் அந்த குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு செல்வதை அவன் வழக்கமாய் கொண்டிருந்தான். அவனது அம்மா உயிரோடு இருந்தவரை, தவறாமல் அந்த கோவிலுக்கு செல்வார். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அந்த குறிப்பிட்ட நாளில் அவன் மதுரை வருவது தவறியதில்லை. அதனால் தான், ஐரோப்பாவில் இருந்து அவன் அவசரமாய் இந்தியா திரும்பினான்.

தங்களது நிகழ்ச்சி நிரல்களை உள்ளடக்கிய கோப்புடன் அங்கு வந்தான் பரஞ்சோதி.

"நீ ரெடியா மல்லா?"

"நான் ரெடி. கிளம்பலாமா?"

அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். அவர்களுடைய குழுவை சேர்ந்தவர்கள் ஏற்கனவே வேலையை தொடங்கி விட்டிருந்தார்கள். ஹோட்டலுக்கு வரும் முன், பரஞ்சோதியை கோவிலுக்கு சென்று, அங்கு சில ஏற்பாடுகளை செய்து விட்டு வருமாறு பணித்தான் மாமல்லன்.

"நீ கோவிலுக்கு போயிட்டு இன்னும் வேற ஏதாவது செய்யணும்னு கேட்டுட்டு வந்து, எங்க கூட ஜாயின் பண்ணிக்கோ"

"ஆமாம் மல்லா, எனக்கும் நம்ம கோவில்ல, முக்கியமான ஒரு வேண்டுதல் இருக்கு"

"என்ன வேண்டுதல்?"

"ஒரு ஸ்பெஷல் பூஜை அரேஞ்ச் பண்ணலாம்னு இருக்கேன்... உனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு"

"உனக்கு வேற வேலையே இல்லையா? டோன்ட் வேஸ்ட் யுவர் பிளடி டைம்... சீக்கிரமா ஸ்பாட்டுக்கு வந்து சேர்ற வழியை பாரு"

"வேஸ்ட் ஆப் டைமா? இல்லவே இல்ல. நான் என்னோட வழியை கிளியர் பண்ண பார்க்கிறேன்... நீ கல்யாணம் பண்ணிக்காத வரைக்கும், நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது?" என்றான் சோகமாக.

"நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். உனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுச்சுன்னா, தாராளமா பண்ணிக்கோ. எதுக்காக டா என் உயிர வாங்குற?"

"யாரையாவது, எங்கேயாவது பார்த்து, நீ விழுந்துடுவேன்னு நான் தப்பு கணக்கு போட்டுட்டேன். போற போக்கை பார்த்தா, அதுக்கு வாய்ப்பே இல்ல போல இருக்கு. என்னால நம்பவே முடியல... மாமல்லனை வளைச்சு போடுற அளவுக்கு, ஒரு பொண்ணு கூடவா இந்த உலகத்துல இல்ல? ஹவ் ரெடிகுலர்ஸ்? இந்த பொண்ணுங்க எல்லாம் யூஸ்லெஸ்..." என்று அலுத்துக் கொண்டான் பரஞ்சோதி.

"உனக்கு தான் தெரியுது இல்ல, அப்புறம் எதுக்காக ட்ரை பண்ற?"

"அதுக்காக தான், உலக மாதா, ஜகத் ஜனனியோட கால்ல போய் விழலாம்னு முடிவு பண்ணிட்டேன். அவங்க ஒருத்தருக்கு தானே எல்லாமே பாஸிபிள்...!"

"உனக்கு என்ன டா பிரச்சனை?"

"நீ தான் டா பிரச்சனை. தெரியாத்தனமா, நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சபதம் போட்டுட்டேன்..." என்றான் இயலாமையுடன்.

அதைக் கேட்டு சிரித்த மாமல்லன்,

"உன் சபதத்தை கேன்சல் பண்ணிடு" என்றான்.

"பரஞ்சோதியாவது சபதத்தை கேன்சல் பண்றதாவது... அது என்னோட பெயருக்கும், என்னுடைய நட்புக்கும் அவமானம்..."

"உன்னோட முட்டாள்தனமான பேச்சுக்கு என்கிட்ட நேரமில்ல. நீ வேற ஒரு டாக்ஸி பிடிச்சிகிட்டு கெளம்பு. உனக்கு என்ன வேணுமோ செய்"

பரஞ்சோதியை இறக்கிவிட்டு, தான் சென்று சேர வேண்டிய இடத்தை நோக்கி வண்டியை செலுத்தினான் மாமல்லன்.

........

மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியான மாமல்லன், நடுத்தர வர்க்கத்து மக்கள் வாழும் பகுதியில், எரிச்சலுடன் நின்றிருந்தான். அவனுடைய கார் பிரேக் டவுன் ஆகிவிட்டது. அதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், ஏசி இல்லாமல் அந்த காரில் அவனால் அமர்ந்திருக்க முடியவில்லை. காரை விட்டு கீழே இறங்கி ஒரு மரத்தடியில் நின்றான். அவன் நின்றிருந்த இடம் அவனுக்கு மேலும் எரிச்சலூட்டியது. கூட்ட நெரிசல், இரைச்சல் சத்தம், தூய்மை கேடு, அதோடு மட்டுமல்லாமல், தாங்க முடியாத சாக்கடை நாற்றம்... இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் அவன் தன் வாழ்வில் கண்டதேயில்லை.

பரஞ்சோதிக்கு போன் செய்து, தன் எரிச்சலை எல்லாம் அவன் மீது கொட்டி தீர்த்த அவனை, ஒரு குரல் சுண்டி இழுத்தது. அந்த குரல், ஒரு பெண்ணுக்கு சொந்தமானது. அவள் அணிந்திருந்த சுடிதர் வித்தியாசமாய் தெரிந்தது. வெள்ளை நிற சுடிதாருக்கு, சிவப்பு நிறத்தில், சிறிய வெள்ளை நிற பூ போட்ட, பூனம் துப்பட்டாவும், லைனிங் வைத்து தைக்கப்பட்ட பேண்ட்டும் அணிந்திருந்தாள். அந்த துப்பட்டாவும், பேண்ட்டும், ஒரு புடவையை கிழித்து தைக்க பட்டிருந்ததால் பார்க்க வித்தியாசமாய் ஆனால் வெகு அழகாய் இருந்தது.

சாக்கடை அடைப்பை நீக்கிக் கொண்டிருந்த ஒரு துப்புரவு தொழிலாளியின் வேலையை கவனித்தபடி, மாமல்லனுக்கு முதுகை காட்டியபடி நின்றிருந்தாள் அந்தப் பெண்.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. இந்தாங்க உங்களுக்கு பணம்" என்றாள் அந்தப் பெண்.

"என்னடி இப்படி பேரம் பேசாம பணம் கொடுக்கிற?" என்றார் அவளுடன் நின்றிருந்த பெண்மணி.

அவருக்கு பதில் கூறாமல், முகத்தில் புன்னகைத் தவழ,

"நீங்க போயிட்டு வாங்க அண்ணா. ரொம்ப தேங்க்ஸ்" என்று அவரிடம் பணத்தை நீட்டினாள்.

"நீ நல்லா இருப்பம்மா..." என்று அவளுடன் நின்றிருந்த பெண்மணியை பார்த்தபடி கூறிவிட்டு சென்றார் அந்த துப்புரவு தொழிலாளி.

"நான் சொல்றதை கேட்க மாட்டியா? என்ன ஆச்சு இன்னைக்கு உனக்கு? எல்லார்கிட்டயும் மூச்சுக்கட்டி பேரம் பேசுவியே? இன்னைக்கு மட்டும் ஏன் விட்டுட்ட? நம்ம ஜாக்கிரதையா இல்லன்னா, நம்மளை வாயில போட்டு முழுங்கிடுவாங்க" என்றார் அந்தப் பெண்மணி.

"யாருமே செய்ய முடியாத வேலையை அவர் செய்றாரு... அவர்கிட்ட போய் பேரம் பேச சொல்றீங்களே? பாருங்க, கொஞ்ச நேரம் நிக்கிற நீங்களே மூக்கை மூடிக்கிட்டு நிக்கிறீங்க. ஆனா அவரு அதுக்குள்ள இறங்கி வேலை செய்றாரு... அவங்கெல்லாம் எவ்வளவு பாவம்...! ( என்ற போது அவள் குரலில் கவலை தெரிந்தது ) கொஞ்சம் யோசிச்சு பாருங்க, ஒருவேளை, அவங்க இந்த வேலையை செய்றதை நிறுத்திட்டா என்ன ஆகும்? பேரம் பேசுறதுலயும் ஒரு நியாயம் வேணும்ல? இவங்கெல்லாம் அதுக்கு அப்பாற்பட்டவங்க..."

அவளது தோளை செல்லமாய் தட்டிய அந்த பெண்மணி,

"எல்லாத்துக்கும் ஒரு நியாயம் வச்சிருப்ப டீ நீ... நீ சொன்னதும் நியாயம் தான். மறுக்க முடியாது"

"தேங்க்யூ... " என்று அந்தப் பெண்மணியின் கன்னத்தை கிள்ளினாள் அவள். அது மாமல்லனின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

அவர் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு விட்டு, கலகலவென சிரித்தாள். அடுத்த நொடி கூட்டத்திற்குள் நுழைந்து, ஒடி மறைந்தாள் அந்த பெண். அது வரை அங்கு நடந்த காட்சியை தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்த மாமல்லன், சுய உணர்வு பெற்றான். அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு நின்றிருந்த அந்த பெண்ணின் முகத்தை அவன் பார்க்கவில்லை. அது அவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இவ்வளவு சீக்கிரம் ஒரு பெண் சிட்டாய் பறந்து போவாள் என்பதை அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை.

ஒரு துப்புரவு தொழிலாளியின் மீது அக்கறை காட்டிய அந்தப் பெண்ணின் மென்மையான இதயம், அவனை தன்னிலை இழக்க செய்தது. அடுத்தவரின் சிரமத்தை அலசி ஆராய்ந்து பார்க்கும் குணம் சாதாரணமானதல்ல. இப்படிப்பட்ட ஒரு குணத்தை தான் அவன் *பார்த்ததே இல்லை* என்று நேற்று பரஞ்சோதியிடம் கூறினான்.

அவ்வளவு என்ன அவசரம் அவளுக்கு? இப்படி ஓடிப் போய்விட்டாளே... செல்வதற்கு முன் ஒரு முறை திரும்பி பார்த்திருக்கக் கூடாதா? என்ற அவனது எண்ணம், அவனையே வியக்க வைத்தது. எதற்காக அவன் அந்த பெண்ணின் முகத்தை பார்க்க வேண்டும்? சில நொடிகள் மட்டுமே அவனுக்கு பரிச்சயமாய் இருந்த அந்தப் பெண்ணின் மீது அப்படி என்ன ஒரு ஈடுபாடு? இது சுத்த பைத்தியக்காரத்தனம் அல்லவா? இப்படியெல்லாம் என்னக் கூடியவன் அல்லவே மாமல்லன்...!

ஆனால் அவளிடம் தனித்துவமான குணம் இருக்கிறதே...! ஒரு பெண்ணின் முகத்தை பார்க்க வேண்டுமென்று இதற்கு முன் அவன் எப்போதும் விரும்பியதில்லை தான். ஏனென்றால், இப்படிப்பட்ட பெண்ணை அவன் கண்டதில்லையே. ஏனோ தெரியவில்லை, அவனுக்கு அவனுடைய அம்மாவின் ஞாபகம் வந்தது. அவனுடைய பதினைந்தாவது வயதில், அவனது அம்மா இந்த உலகத்தை விட்டு சென்ற நாளிலிருந்து, அவரது நினைவாக, அவர் தன்னுடன் தான் இருக்கிறார் என்று தன் மனதை நம்ப வைப்பதற்காக, அவர் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எப்போதும் தன் கோட் பாக்கெட்டில் வைத்திருந்தான் மாமல்லன். அதை அவனது கரம் அணிச்செய்யாய் தொட்டுப் பார்த்தது.

அதற்குள், மாமல்லனிடம் கைபேசியின் மூலம் அவனிடம் வாங்கி கட்டி கொண்ட பரஞ்சோதி அங்கு வந்து சேர்ந்தான். மாமல்லன் அசாதாரணமாய் இருந்ததை உணர்ந்தான் பரஞ்சோதி. தான் எடுத்துக் கொண்ட வேலை தாமதமாவதால், மாமல்லன் அப்படி இருப்பதாய் எண்ணினான் அவன். சீற்றம் கொண்ட சிங்கத்திடம் பேச்சுக் கொடுப்பது அவ்வளவு புத்திசாலித்தனம் அல்ல என்பதால் அமைதி காத்தான். அன்று முழுவதுமே மாமல்லன் அப்படித்தான் இருந்தான். அது பரஞ்சோதியை குழப்பியது. ஒருவேளை அவனுடைய அம்மாவின் நினைவு அவனை ஆட்கொண்டு விட்டதோ என்று என்னை தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான், அதைப் பற்றி மாமல்லனிடம் பேசும் தைரியம் அவனுக்கு வராததால்.

ஒரு சாதாரண பெண் தன் மனதில் ஏற்படுத்தி விட்டிருந்த தாக்கத்தில் இருந்து வெளியே வர போராடிக் கொண்டிருந்தான் மாமல்லன். ஆனால், எந்த அளவிற்கு அவளை மறக்க நினைத்தானோ, அந்த அளவிற்கு அவளையே நினைத்துக் கொண்டிருந்தான். அவன் தன் வாழ்நாளில் எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கிறான். எத்தனையோ அழகிய பெண்களை சந்தித்திருக்கிறான். ஆனால் யாரையுமே அவன் மறுபடி நினைவுகூர்ந்ததில்லை. இப்பொழுது அவன் அனுபவித்துக் கொண்டிருப்பது ஒரு புது உணர்வு... அதுவும் ஒரு பெண்ணுக்காக... எப்படி இருப்பாள் என்று தெரியாத ஒரு பெண்ணுக்காக.

அவனுடைய எண்ணம் அவனுக்கே ஆச்சரியத்தை அளித்தது. அந்தப் பெண்ணின் மீது அவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது. அவன் வாழ்நாளிலேயே அவனை இப்படி எல்லாம் வேண்டாததை யோசிக்க வைத்த ஒரே பெண் அவள் தான். ஆனால் இதில் அவளுடைய தவறு என்ன இருக்கிறது? தன்னுடைய நினைவில் ஒருவன் தவித்துக் கொண்டிருக்கிறான் என்பது கூட அந்த பெண்ணுக்கு தெரியாதே...! எவ்வளவு முயன்ற போதும் அவனால் அந்தப் பெண்ணை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவளுடைய *கலகலவென்ற சிரிப்பொலி* அவனது காதுகளில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தது.

ஆனால், இது தொடரக்கூடாது என்று நினைத்தான் மாமல்லன். ஒரு சாதாரண பெண், தன்னை ஆட்படுத்தி விட கூடிய அளவிற்கு தான் பலவீனமானவனாய் இருப்பதை அவன் விரும்பவில்லை.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

53.3K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
369K 12.2K 54
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அ...
118K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
28.9K 1.8K 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக...