யாதிரா - 8

Start from the beginning
                                    

"ஆஆஆ? சரி, ஒரு மணி நேரம் ஒகே தான். எடுக்க சொல்லிடுறேன். ஆனா நியூஸ் ஆளுங்க வர்ரதுக்குள்ள இப்பவே வருணுக்கு மேக்-அப்...."

"சத்தியமா டெஸ்ட் பண்ணாம உள்ள அனுப்ப முடியாது. அவங்க இப்ப எதையும் தொடாம இந்த பில்டிங் லேர்ந்து கிளம்பனும். ஐம் சாரி." யாதிரா இரும்பு பிடியாய் இருக்க மேனேஜர் வருணுக்கும் யாதிராவுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தவிக்க யாதிராவுக்கே பாவமாக இருந்தது. இந்த இண்டர்வியூ வருணுக்கு எவ்வளவு முக்கியம் என அவள் அறிவாள். அதுவும் இந்த இண்டர்வியூ தோற்றத்துக்காக நடத்தப்படும் ஒன்று என்றும் அறிவாள்.

"Excuse me, one minute. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நானே வருணுக்கு மேக்-அப் போட்டுவிடுறேன். நீங்க மேக்-அப் பேக் ஐ வச்சிட்டு போங்க. டிஸ்போஸபல் பிரஷ்(disposable brush), ஸ்பாஞ்ச் எல்லாம் வச்சிருக்கீங்கள்ள?" இவளின் திடீர் கோரிக்கையைக் கேட்டு திடுகிட்ட இருவரும் மேனேஜரைத் திரும்பி பார்க்க மேனேஜர் சைகைக் காட்டினார். சூட்கேஸை வைத்துவிட்டு இருவரும் கிளம்பினர்.

"வருண் கிட்ட..."

"நான் சொல்லிக்கிறேன். நீங்க ஜர்னலிஸ்ட் ஆளுங்களுக்கு டெஸ்ட் எடுக்கிற வேலைய கவனிங்க"

சூட்கேஸை இழுத்துக்கொண்டு யாதிரா அறையினுள் நுழைந்தாள். நீண்ட பெருமூச்சு விட்டாள். எவ்வளவு திட்டு வாங்கிட்டோம், அதில் இதையும் சேர்த்துக்குவோம்.

"மிஸ்டர் வருண், உங்களுக்கு மேக்-அப் பண்ண வந்திருக்கேன்"

வருண் அவளை ஏறெடுத்துப் பார்த்தான், "scalpel பிடிக்கும் கைகளுக்கு பிரஷ் பிடிக்க தெரியுமா?"

"தெரியுமோ இல்லையோ என் கிட்ட சொல்லாம திருட்டு தனமா இண்டர்வியூ ஏற்பாடு பண்ணுனா இது தான் நடக்கும். அவங்களுக்கு கோரோணா டெஸ்ட் எடுக்காம இந்த பில்டிங் உள்ள கூட வர கூடாது மிஸ்டர் வருண்."

இப்போது வருண் பெருமூச்சு விடும் தருணம். "இண்டர்வியூ நடக்குமா நடக்காதா?"

"நடக்கும். இது உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியும். ஜர்னலிஸ்ட்கு கோரோனா டெஸ்ட் ஏற்பாடு பண்ண மேனேஜர் போயிருக்கார்."

யாதிரா (COMPLETED )Where stories live. Discover now