யாதிரா - 6

961 62 9
                                    

மூன்றாம் நாள்

அதிகாலையில் சூரியன் மட்டும் தோன்றினான் ஆனால் யாதிரா தோன்றவில்லை. வேறொரு மருத்துவர் இவனை பரிசோதனை செய்தார். பரிசோதனை செய்ய எதுவுமில்லை என்பது தான் உண்மை, வருணுக்கு ஓய்வு மட்டுமே மருந்து. ஒரே ஒரு மருத்துவர் மட்டும் என்னை கவனிக்கட்டும் எனக் குறிப்பிட்டிருந்தேனே, என் ரிக்குவஸ்ட்(request) எதுவும் செய்யாமல் இருப்பது தான் அழகா என வருண் எரிச்சலாய் கேட்க அந்த பாவப்பட்ட டாக்டர் யாதிரா இன்று நைட் ஷிப்ட் என்பதால் இரவு 8 மணிக்கு மேல் தான் வருவார் என பதில் அளித்தார்.

யாதிராவின் இல்லாமையில் அவளைப் பற்றிய ஆர்வம் அதிகரித்தது. கூகிள் தொடங்கி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எல்லாவற்றையும் நோண்டினான் வருண். யாதிரா எனும் பெயரில் லட்சக்கணக்கான பெண்களின் ப்ரொபைல்கள் வந்தன. டாக்டர் யாதிரா என்று தட்டியவனின் தேடல் சில நூறுகளில் முடிந்தது. ஆயினும் அவளைப் பற்றி எதுவும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஸ்டார் என்பது சும்மாவா. மதிய உணவை எடுத்து வந்த நர்ஸிடம் அவனே கேட்டு செல்பி எடுத்தான். யாரும் வருணிடம் செல்பியோ வேறு படமோ எடுக்கக்கூடாது இல்லையெனில் வேலைப் போய்விடுமென்ற டீனின் எச்சரிக்கையால் ஆசைகளப் புதைத்து வைத்திருந்த அந்த நர்ஸ் ஆனந்தத்தில் மிதந்தாள். செல்பி எடுத்துவிட்டு பின் நைஸாக யாதிராவின் முழு பெயரைக் கேட்டான். அவளுக்கோ தெரியவில்லை. எதாவது official பேப்பரில் பார்த்து சொல்லுமாறு அவன் குழி விழும் சிரிப்போடு கேட்க அக்குழியில் விழுந்த நர்ஸ் எப்படியோ கண்டுப்பிடித்துவிட்டாள்.

யாதிரா வாசுதேவன். கூகிள் இப்போ உன் வேலையைக் காட்டு!

அவளின் முழு பெயரை அடித்ததுமே கூகிள் இமேஜஸில்(images) மானிறமாய், கூர்மையான மூக்கும், சிறு சிரிப்பில் தெரிந்த முன் பற்களும் அதை ஒளித்த உதடும், கருக்கூந்தலும் லட்சணமாய் ஒரு முகம் வருணைப் பார்த்தது. மின்னிய அக்கண்களை வைத்து யாதிராவைக் கண்டுக்கொண்டான் வருண். இக்கலைநயமான முகத்தை மாஸ்க் கயமாய் மறைத்திருந்தது. அவன் அவளை அடையாளம் கண்டுக்கொண்டாலும் எதற்கும் சரிபார்த்துக்கொள்வோமென அப்புகைப்படத்தை க்ளிக் செய்தான். அமெரிக்காவின் சியாட்டல்(Seattle) மானிலத்தில் Annual Emergency Medicine Conference இல் அவளின் ரீசர்ச் போஸ்டரைக்(research poster) காட்டவும் presentation கொடுக்கவும் அவள் சென்றிருந்தாள் என அறிந்தான். அந்த கான்பிரன்ஸ் வெப்சைட்டில் தான் இவளின் முகம் இவனைப் பார்த்து புன்னகைத்தது.

யாதிரா (COMPLETED )Where stories live. Discover now