பக்கத்தில் ஹிக்மாவின் நடமாட்டம் தெரிந்து சிந்தனையிலிருந்து விடுபட்டு நிமிர அவளோ தேநீர் கோப்பையுடன் அவனை கடந்து போய்க் கொண்டிருந்தாள்.

"டீ கப்ப எங்க கொண்டுபோறீங்க?"

"கழுவி வைக்கத்தான்"

"ஐயோ! நான் இன்னும் குடிக்கவேயில்ல"

"ஏன் இவ்வளவு நேரம் அதைவச்சு ஆராய்ச்சியா பண்ணிட்டு இருந்திங்களா?"

"ஏதோ யோசனைல கவனிக்கல. சரி குடுங்க. குடிக்கிறேன்"

"அது எப்பவோ ஆறிப்பச்சைத் தண்ணியா போச்சுது"

"பரவாயில்லை. நான் குடிப்பேன். குடுங்க"

விசித்திரமான பார்வையோடு அவன் கையில் கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.

தேநீரை வாயில் வைத்த பிறகே அவளைத் தடுக்காமலே இருந்திருக்கலாம் என்பதை உணர்ந்தான். வாயில் வைக்கவே முடியவில்லை அவனால். இனி கொண்டுபோய் கொட்டவும் முடியாது. முகம் சுழித்தபடியே ஓரே மூச்சாக குடித்தான்.

நல்லவேளை ரய்யானின் அழைப்பேசி சிணுங்கி மொத்தத்தையும் குடிக்க விடாமல் அவனை காத்தது. அவர்களது வருகையை உறுதி செய்துகொள்ள நண்பன் ஒருவன் அழைத்திருந்தான்.

"அஞ்சு மணிக்குத்தானே ஸ்டார்ட் பண்ணுவிங்க. இன்ஷாள்ளாஹ் டைமுக்கு வந்திருவோம்"

"         "

"ஆமாம். வந்திருக்கா. கூட்டிட்டு வருவன்" ஹிக்மாவை பார்த்தபடியே சொன்னான்.

பேசி முடித்து அழைப்பு துண்டிக்கப்பட்டதும் ஹிக்மாவிடம் திரும்பி

"அஞ்சு மணிக்கு ஸ்டார்ட். மூனு மணிக்காவது கிளம்பனும். அப்பதான் இங்குள்ள ட்ரபிக்ல டைமுக்கு போய்ச்சேரலாம்"

"ஹான்"

"உங்களுக்கு ஏதாச்சும் வாங்கனுமா? வாங்கனும்னா சொல்லுங்க இப்ப போய் வாங்கிட்டு வந்துறலாம்"

அவளுக்கு வாங்குவதற்கென எதுவுமில்லை. ஆனால் வெளியில் சென்று வந்தாலாவது பழைய இயல்புநிலை திரும்பும் என்பதற்காக அவனுடன் சென்றாள்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now