'ஆடம்பர மோகமில்லை. வசதி வாய்ப்பைப் பார்த்து வாய் பிளக்கவில்லை. ஊரார் பொறாமைபட பகட்டோடு வாழ நினைத்ததில்லை. சொத்து சுகத்தை அனுபவிக்க யாரையும் மயக்கவில்லை. தனக்கு கிடைத்ததை மற்றவர்களிடம் பெருமையடித்து பறைசாற்றித் திரியவில்லை. அவளுக்கே கஷ்டம் என்றாலும் மற்றவர் மனம் நோகும்படியோ, மனம் கோணும்படியோ நடந்து கொண்டதில்லை'

விழித்துவிடாமல் மென்மையாக அவள் நெற்றியில் இதழை ஒத்தியெடுத்தான்.

ஒரு முறுவலுடன் சலனமில்லாம் அவனிடத்துக்கு வந்து படுத்துக்கொண்டான்.

'எத்தனை நாட்களுக்கு இப்படி திருட்டுத்தனமாக காதலிப்பது? எப்போது அவளிடம் உரிமையோடு உறவாடுவது? எப்போது என்னை ஏற்பாளோ? என் செல்ல ரோஷக்காரி!'

ஏக்கங்களிற்கு நடுவிலும் ஒரு நிம்மதி யாதெனில் ஹிக்மா அவனது மனைவியாகவே இருக்கிறாள். எப்போது ரய்யானை முழுமனதோடு கணவனாக ஏற்பாள் என்று தெரியாவிடினும் பிரிந்து போகாமல் அவன் வீட்டில் அவன்கூடவே இருப்பதே இப்போதைக்கு போதுமாக இருந்தது.

தூங்கபவளை கண்ணெடுக்காது பார்த்துக் கொண்டே படுத்திருந்தான். சிந்தனை இப்போது நடத்தையைவிட்டு அவள் தோற்றத்திற்கு தாவியது.

'அந்த ராட்சசியைப் போல வெளிறிய தேகமில்லை. அவளுக்கிருப்பது போல வில்லாக வளைந்த புருவங்களில்லை. மற்றவர்களின் தோற்றத்தை வைத்து பின்புலத்தை எடைபோடும் கண்களில்லை. கண்ணத்தில் குழியும் விழவில்லை. இருந்தும் ஷிரீனை விட பலமடங்கு அழகியாகவே தெரிகிறாளே' 

உடல் முழுதும் மூடிக்கொண்டு முகம் மட்டும் தெரியவே படுத்திருந்தாள் ஹிக்மா. அப்படி பார்சல் போல உறங்குவதை பார்க்க சிரிப்பாக வந்தது அவனுக்கு.

ஏசியில்லாமல் ரய்யானுக்கு உறக்கம் வராது. அவளுக்கோ ஏசி குளிர் தாங்காது.

ரய்யான் சிலசமயம் வேண்டுமென்றே ஏசி காற்றை உயர்த்துவான். குறைக்க சொல்லி வினயமாகக் கேட்காவிடினும் குட்டி சண்டையேனும் போடமாட்டாளா என்கின்ற எதிர்பார்ப்பில்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now