அடிக்கடி 'ஹக்ஷ்..அக்ஷ்...' என்று தும்மலும் போனது.

"ப்ரஷ் பண்ணிட்டீங்களா? "

"ம்ம்ம் " என்றான்.

"சரி அப்ப இந்த கஞ்சிய குடிங்க. மருந்து குடிக்கனும்ல"

"எனக்கு கஞ்சி வேணாம்"

"ஏன்? வேறேதாவது சாப்பிடுறீங்களா?"

"எனக்கு எதுவும் வேணாம்" அவனது நடவடிக்கை சிறுபிள்ளை அடம்பிடிப்பது போலிருந்தது.

"அப்ப வெறும் வயித்தோட மருந்து குடிக்கப் போறிங்களா?" குரலில் கொஞ்சம் கடுமையை ஏற்றி வினவினாள்.

"ஏன் யாரும் என்னை ஸஹருக்கு நோன்பு பிடிக்க எழுப்பல. நான் நோன்புன்னு நிய்யத்து வச்சிட்டேன். எனக்கு எதுவும் வேணாம்"

"ஓஹோ! ஸஹருக்கு எழுப்பலனு பட்டினி நோன்பு பிடிக்க போறிங்களோ? தாரளமா பிடிங்க. ஏன்னா எனக்குதான் காய்ச்சல். எனக்குத்தான் நேத்து மருந்தெடுதிட்டு வந்தோம். நான்தான் நைட் முழுக்க காய்ச்சல்ல நடுங்கிட்டு இருந்தன். உங்களுக்கு ஒரு வருத்தமும் இல்ல. நல்ல சுகமா இருக்குறீங்க. அப்படித்தானே?" என்றாள் கறாராக.

அவளது கண்டிப்பில் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். எனினும் நோன்பை விட மனமேயில்லை ரய்யானுக்கு.

அவனது மௌனம் ஏதோ செய்ய
"என்ன சத்தமில்ல?"

"அது.. அது இப்ப காய்ச்சல் குறைந்சிட்டு. பிரச்சினையில்ல.."

அவனருகில் சென்று கழுத்தில் கைவைத்தவள்.

"அப்ப இது காய்ச்சல் இல்லாம வேறென்ன? இஸ்லாம் யாரையும் எதுக்கும் சிரமப்படுத்தல. நோயாளிகள் நோன்பு பிடிக்கனும்னு எந்த கட்டாயமும் இல்ல. நீங்களே உங்களை கஷ்டப் படுத்திக்காதிங்க. காய்ச்சல் சரியானதும் அதைக் கலா செய்ங்க. இப்ப சாப்பிட்டு மருந்தை குடிங்க" குரலை சாந்தமாக்கி அவனுக்கு புரியவைக்க முயன்றாள்.

"நேத்தைக்கு இருந்ததுக்கு இப்ப எவ்வளவோ பரவாயில்லை. வருத்தம் நல்லா குறைஞ்சிருக்கு அதனா---" .

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now