29.ஆர்த்திமுருகேசன்

Depuis le début
                                    

அறிவழகிக்கு ஒன்றும் புரியாமல் குழப்பம் ஏற்பட. 'கையை பிடிப்பது விஜய் என்றால் காலை பிடிப்பது யார்?' என்ற குழப்பத்தில் விஜயிடம் கேட்க சற்று காட்டமாக, "என்னோட அண்ணன்" என பதிலளித்தான்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த துருவ் இருவரிடமும், " நீங்க கேள்வி கேளுங்க. இவனும் பதில் சொல்லுவான். இடையில இந்த ஆளோட உயிர் போகட்டும்" என உரக்க கத்தினான்.

விஜயின் பதிலில் சற்று அதிர்ச்சியானாலும், "அவரு உங்க அப்பா. கொஞ்சம் மரியாதை கொடுங்க" என்று கோபமாக கூறிய அன்னையிடம் "அவரு அப்பா இல்ல அயோக்கியன்" என்றான் விஜய் பொங்கி வரும் ஆத்திரத்துடன்.

ராஜேந்திரனை காருக்குள் கிடத்தி, முன்னே விஜயும் துருவ் பின்னே அமர்ந்து கொள்ள, ஓட்டுநர் வண்டி ஓட்ட, தன் கணவனை மடியில் போட்டு கொண்டு அமர்ந்திருந்தார் அறிவழகி.

அவர் கண்களில் நீர் தாரை தாரையாக வழிய, யார் யாரோ தன்னவனை பற்றி பலவாறு பேசினாலும் அவர் நம்பவில்லை.

இன்று அந்த நம்பிக்கையை துருவ் வந்து உடைத்து சென்றதை நினைத்து ஒரு பக்கம் வருத்திக்கொண்டு சொல்லொன்னா துயரம் கொண்டார்.

*********

         சற்று முன் நடந்த உரையாடலை நினைத்து மாது தனியாக அமர்ந்து சிரித்து கொண்டிருந்தாள்.

பத்து நிமிடங்களுக்கு முன்,  'நானும்  துருவும் சேர்ந்து விட்டோம்' என்ற களிப்பில், காதலும் கை கூடியதை நினைத்து பெரும் மகிழ்ச்சியில் தன் வீட்டு மாடியில் உலவி கொண்டிருந்த விஜயின் எண்ணங்களை மாதுவின் அழைப்பு கலைத்தது. 

அழைப்பை ஏற்று, "மாது" என்று ஆரம்பித்து சில பல பரஸ்பர விசாரிப்புகள் முடித்ததும், பிறகு மாதுவே தயங்கி, "விஜய்" என அழைத்தாள்.

"என்ன தயக்கம் மாதுமா என்கிட்டே பேச? என்ன கேட்கனும் கேளு மாது" என்ற அவன் பதிலில் புது தெம்பு பிறக்க, தயக்கம் தளர்ந்தது.

புதிதாய் பிறந்த வெட்கம் வேறு இம்சை செய்ய பட்டென்று, "எப்போ காதல உணர்ந்தீங்க?" என்று  கேட்டுவிட்டாள்.

மனம் வருடும் ஓவியமே!Où les histoires vivent. Découvrez maintenant