28. வாசகி

Start from the beginning
                                    

வெகுநாட்களுக்குப்பிறகு, மனமாரப் புன்னகைக்கும் தன்னவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது...

அவன் லேசாக இதழ்விரிந்து கொடுத்த ரோஜாவைப் போலிருந்த அவளது இதழ்களை ரசிக்கவில்லை... அந்த ரோஜாவின் இடையில் தவறிவிழுந்துவிட்ட முத்துக்களைப் போல,லேசாக மின்னிய அந்தப்பற்களை ரசிக்கவில்லை...
அந்த முத்துக்களின் ஒளிக்குப் போட்டிப்போட்ட அவளது விழிகளை ரசிக்கவில்லை...
அழகாகக் குழிந்து கொடுத்த அந்தக் கன்னக்குழியை ரசிக்கவில்லை...
அப்படியே கிள்ளியெடுத்திடத் தோன்றும் அழகான பந்தாக உருண்ட அவளது கன்னக்கதுப்பை ரசிக்கவில்லை...
அதில் லேசாக வந்து விழுந்த சிறுமுடியை ரசிக்கவில்லை...
அதை அழகாக ஒதுக்கிய அந்த மென்விரல்களை ரசிக்கவில்லை...

ஆனால்...

அவளது புன்னகையை ரசித்தான்... அந்தப்புன்னகையில் வெகுநாட்களுக்குப் பிறகு அவளது மனதில் படர்ந்த நிம்மதி ஒளிர, அதனை ரசித்தான்...
ஆண்டாண்டு காலத்திற்கும் அவளது புன்னகையில் கரைந்து அமிழ்ந்தொழிய வேண்டும் எனத்தோன்ற,
அவளது வதனத்திலிருந்து அவனது விழிகள் நகர மறுத்தன...

திடீரென அவனது விழியின் வழியில் ஆறு கரங்கள் குறுக்கிட்டன...
அதைக் கண்டவன், 'யாரது? 'என லேசானக் கோபத்தோடு திகைக்கையில், ஆறு கரங்களின் சொடக்கொலியும் அவனது செவிகளில் விழுந்தது...

அப்பொழுதுதான் நம் இருவரைத்தவிர, இன்னும் மூன்று ஜீவன்கள் உடன் இருக்கின்றன என்பதே அவனுக்கு நினைவுக்கு வந்தது...

விஜயும் நவிந்தனும் நமட்டுச்சிரிப்பொன்றை உதிர்க்க,

"என்ன மச்சான்? கூட மூணு கரடியை வச்சுக்கிட்டே அமோகமா தேவிதரிசனம் நடக்குது போல..." என்றாள் மாதங்கி நக்கலாக...

"அப்...படில்...லாம் ஒண்...ணு...மில்...லயே..." லேசாக அசடுவழிந்தவாறே அவனது பார்வை மீண்டும் ஆதர்ஷினியிடம்தான் சென்றது...

இம்முறைப் புன்னகையோடு அவளது கன்னங்களும் லேசாகச் சிவக்கத் தொடங்க,
அவனுக்கு 'ஹைய்யோ...' என்று இருந்தது...

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now