19. சல்மா சசிகுமார்

Start from the beginning
                                    

ஆது யார் ?.. மாதுவிற்கும் ஆதிவிற்கும் இருக்கும் உறவு தான் என்னவாக இருக்கும் என்று  தன்னை பற்றியே அறிய நினைத்து எண்ணங்கள் வெவ்வேறாக இருக்க ஒரு ஆர்வத்துடன் நவினுடன் பைக்கில் சென்றாள் மாது.

திடீரென பைக்கை நிறுத்தியவன்.

" ஆது ... " என்றான் எதையோ எண்ணியவாறு.

" மிஸ்டர்... நான் மாதங்கி உங்க அத்தை பொண்ணு ஆதர்ஷினி இல்ல." தன் ஆர்வத்தில் தடை ஏற்படவும் பொறிந்து தள்ளினாள்.

" ஓகே மிஸ். மாதங்கி நான் ஒரு வேகத்துல உன்ன கூடிட்டு கிளம்பிட்டேன். ஆனா, கொஞ்சம் பதட்டமா இருக்கு. நீயும் ஆதுவும் கிட்ட தட்ட ஒரே மாதிரி இருக்கீங்க. இப்போ பிரிஞ்சு இருக்கீங்கனா ஏதோ காரணம் இருக்கும். திடீர்னு அவங்க முன்னாடி கூட்டிட்டு போய் எதாச்சும் நடந்திடுமோனு பயமா இருக்கு" என்றான் ஒரு வித பதட்டத்துடனே நவின்.

"அப்போ என்னை கூடிட்டு போக மாட்டீங்களா??  எல்லாரும் என்கிட்ட மறைக்குறீங்க. நான் என்ன தான் பண்ணுவேன்" சோர்வுடனே ஒலித்தது அவள் குரல்.

"நான் அத்த கிட்ட பேசுறேன். இத பொறுமையா தான் டீல் பண்ணணும். அவசரப்பட்டு எதையும் செய்ய கூடாது மாது." என்று யோசனை மிகுதியாய் வார்த்தைகளை கோர்த்தான் நவின்.

சோர்வுற்றவளாய் வீடு திரும்ப முடிவுசெய்து நவினிடம் விடைபெற்றாள்.

" ஓகே நவின். சீக்கிரமா பேசிட்டு சொல்லுங்க. நான் கிளம்புறேன்." என்றாள் மாது.

" நானே வீட்ல விட்றேனே" என்று அவளின் பதிலை எதிர்பார்ப்புடன் பார்த்தான்.

" வேணா நவின். உங்களுக்கே என்னோட அம்மாவ தெரிஞ்சிருக்கப்போ.  என் அம்மாவுக்கும் உங்கள தெரிஞ்சிருக்கனும்.  இப்போதைக்கு வீட்ல இத பத்தி தெரிய வேணாம் நீங்க சொன்ன மாறி பொறுமையாவே போகலாம். நா போய்ப்பேன் நவின் நீங்க பயபடவேணாம்" என்று மனதில் எதையே யோசித்தவளாக அவனிடம் விடை பெற்றாள் மாது.

........................................................................

துருவை அறைந்தபின் ஆது சற்று இயல்பாகவே இருந்தாள். அவனிடம் முகம் கொடுத்து பேசவில்லை. ஆனால், அவன் பேசுவதற்க்கு பதிலளிக்காமலும் இல்லை.
ஆதுவின் மனநிலை புரியாமல் துருவ் தான் குழப்பத்தில் இருந்தான்.

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now