11. பாக்கியலக்ஷ்மி

1.9K 241 124
                                    

11. பாக்கியலக்ஷ்மி:

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களும் வந்து வாழ்த்த, பெற்றவர்களும் உற்றாரும் மங்கள அட்சதை தூவ அழகிய அரக்கு நிற பட்டில் தங்கசிலையாய் வெண்சங்கு கழுத்தில் மலர்மாலையிட்டு கண்கள் கலங்க தன் நிலையில் இல்லாமல் மனையில் அமர்ந்தவளின் மாந்தளிர்மேனியில் பொன்மஞ்சள் தாலிமின்ன மஞ்சள் நாணை பூட்டினான் துருவேந்திரன்.

அவனை பார்த்த அடுத்த நொடி "விஜய்" என்று ஆசையாய் காதலாய் விளித்தவளை கண்டு முறைத்தவன் தன்னுடைய பெயரை வெளிபடுத்தவும் ஒருநிமிடம் ஒன்றும் புரியாமல் ஆழ்ந்து அவன் முகத்தையே  பார்த்தவள்.

'எப்படி இவர் அவர மாதிரியே இருக்காரு?' என்ற கேள்வியில்  தலையில் பெருத்த வலி ஒன்றை உணர்ந்தாள்.

கண்களை கட்டி காட்டில் விட்டதை போல் இருந்தது அவளின் நிலை.

இருவரின் ஒற்றுமை அவளுக்கு விளங்கவே இல்லை. மேலும் நவியுடன் நடக்க வேண்டிய திருமணம் இவனுடன் எப்படி என்று வேறு மூளைக்குள் குடைய அவனின் கோபம் மேலும் பயம் கொள்ள வைத்தது.

சிங்கத்தின் சீற்றத்துடன் இருந்தான் அவளின் அழைப்பில்.

அய்யர் சொன்ன சடங்குகளை இயந்திரபாவையாய் செய்திருந்தவளுக்கு  திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அங்கங்கே ஏதோ சலசலப்பது போல இருந்தது.

கொஞ்சம் உற்று கவனிக்க ஆரம்பித்தாள். ஒரு சில கண்களில் வியப்பு. ஒரு சில கண்களில் ஆச்சர்யம். ஒரு சில கண்களில் பொறாமை. என பலகாட்சிகளை கவனிக்க நேர்ந்தது. முடிவில் மணபந்தலின் நேர் எதிரில் ராஜ தோரணையுடன் கம்பீரமான பெரியவர் அமர்ந்திருப்பதை கண்டாள். 

"இவரை எங்கேயும் பார்த்ததாக நியாபகம் இல்லையே? இவர் எப்படி இந்த திருமணத்தில்?" என்று நினைத்தவள் இதழ்களில் விரக்தி புன்னகை ஒன்று உதிர்ந்தது  அவளின் திருமணத்தை நினைத்து.

தாலி கட்டிய கணவனையே தெரியவில்லை இதில் இவரை யார் என்று தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று நினைத்த அடுத்த நொடி அவளின் கைகளை மலர் கொத்தை பிடிப்பது போன்று மென்மையாக பற்றியவன் அந்த பெரியவரின் முன்னால் போய் நின்றான்.

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now