"டேய் எல்லாத்துக்குமே இப்படி அவசரப்பட்டா எப்படிடா?
கொஞ்சம் பொறுமையும் வேணும். நீ ரெண்டு மூனு தடவை உங்களுக்குள்ள பிரச்சினைனு சொல்லியிருக்க. நீங்களே அதை பேசி சரிசெஞ்சிருப்பீங்கனு நினைச்சேன். இப்படி திடீர்னு வந்து தலாக்னா எனக்கும் அதிர்ச்சியா தானடா இருக்கும் "

நண்பன் சொல்வதில் தவறில்லை என உணர்ந்தபின் அத்தனையும் ஒன்றுவிடாமல் கூறினான். அதாவது நடந்த அனைத்திற்கும் ஹிக்மாவை குற்றவாளியாக்கினான்.

அவன் சொல்லி முடிக்கும் வரை குறுக்கிடாமல் பூரணமாக கேட்ட பிறகு

"எனக்கு என்ன சொல்றதுனு தெரியலடா. ஆனா இப்பவும் நீ அவசரப் படுறியோன்னு தோனுது ரய்யான். டீச்சர் (ரய்யானின் தாயார்) தேர்வுசெஞ்ச புள்ளை கட்டாயம் நல்ல புள்ளையாதான் இருப்பா மச்சான். கொஞ்சம் யோசிச்சிப்பாரு. இவ்வளவு தூரம் டீச்சரும், அங்களும் அவளைப்பத்தி நல்லவிதமா சொல்றாங்கன்னா அவங்க சொல்றது சரியாத்தானே இருக்கும். டீச்சரோட கடைசி ஆசையும் அதுதானே. யோசிக்காம அவங்க எதையும் செஞ்சிருக்க மாட்டங்க.
உனக்குத்தான் எங்கயோ ஏதோ மிஸ் அன்டர்ஸ்டான்ட் ஆகிருக்கும்டா" தனக்கு தோன்றிய நியாயத்தை ரய்யானுக்கு எடுத்து சொன்னான் ரிமாஸ்.

"ஹும்ம். எல்லாரும் அவளுக்குதான் ஸப்போர்ட் பண்றீங்க" விரக்தியுடன் கூற

"சரி இப்ப என்னதான் பண்ணப்போற?!"

"என்னால அவ மூஞ்சிய பார்த்துட்டு வீட்ல இருக்க முடியாது. நான் gulf புக்கே திரும்ப போறேன். இந்த திங்களுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டன்.."

ரய்யானின் முடிவில் ரிமாஸுக்கு மட்டுமல்ல ரய்யானின் வீட்டாருக்கும் அதிர்ச்சியே.

ஆனால் இஸ்மாயில் அவனிடம் ஒன்றுமே பேசவில்லை. ரியாஸ்தான் கடந்தமுறை போன்று இம்முறையும் தம்பியிடம் 'போக வேண்டாம்' என கெஞ்சினான்.

யார் சொல்லி ரய்யான் கேட்பான். சொன்னது போல சொன்ன திகதியில் மத்திய கிழக்கிற்கு புறப்பட்டு போயே விட்டான்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now