"சரி பொண்ணு கைல குடு" பூங்கொத்து மஹீஷாவின் கைக்கு மாறியது எல்லோரும் குதூகலமாய் அந்த விளையாட்டை எதிர்நோக்க ஏனோ சபியா மட்டும் ஈடுபாடற்றவளாய் மெதுவாக பின்வாங்கினாள்.

"என்ன சபியா! மெதுவா எஸ் ஆகப்பார்க்குற? ஒன்லி மெரீட் என்ட ப்ரபோஸ்ட் கேஸஸ் மட்டும்தான் ஒதுங்கலாம். ரூல் தெரியும்தானே! "

சபியா ஏதோ சொல்லவர அதற்குள் ஒருத்தி முந்திரிக்கொட்டையாக

"ஆஹா! சபியா அப்ப ப்ரபோஸ்ட் ஆ? சொல்லவேயில்ல!?" என கொழுத்திப்போட இனி கேட்கவேண்டுமா ஒருவர் மாற்றியொருவர் அவரவர் பங்குக்கு கேலியை சிறப்பாக செய்தனர். ஆனால் சபியா சூழ்நிலையை கையாளும் வழியறியாது தவிக்க அவளது சங்கடத்தை புரிந்துகொண்டு முன்வந்த ஹிக்மா

"சரி சரி. கேர்ள்ஸ் இனிபோதும்! இப்பவே அவளை கலாய்ச்சு முடிச்சிட்டா சபியாட டேர்ன் வர்றப்ப என்ன செய்றது?! ஸோ அந்த டைம்முக்கு வெச்சு செய்யலாம். இப்பவே லேட்டாச்சு! இன்னும் பேசிட்டேயிருந்தா வீட்டுக்குப்போக ஒருமணியாகும். மறுபடி நாளைக்கு காலைல ரேடியோல முஸ்லிம் நிகழ்ச்சி ஸ்டார்ட் பண்றதுக்கு முதலே உம்மா மாரோட பயான் தொடங்கிரும்" சபியாவிடம் இருந்து மற்றவர்களின் கவனத்தை திருப்ப சபியா கண்களாலே ஹிக்மாவிடம் நன்றி நவின்றாள்.

"ஹும்ம்! அதென்னமோ உண்மைதான்டி! இங்க வரமுன்னாடியும் எங்கவீட்ல பயான் கேட்டுத்தான் வந்தன்" என்றாள் ஒருத்தி அங்கே ஒரு சிரிப்பொலி தோன்றி மறைந்ததும் அனைவரும் விளையாட்டில் ஆர்வமாயினர்.

"வன்..டூ..த்ரீ!!!!!" எண்ணிமுடித்ததும் மஹீஷா பூங்கொத்தை மேலேஎறிய அது காற்றில் பறந்துவந்து அலமாரியில் மோதி ஹிக்மாமேல் விழுந்தது.

குழுமியிருந்தவர்கள் யாரு? யாரு? என ஆர்வமாய் வினவ
மஹீஷா ஹிக்மாவை கைகாட்ட அனைவரதும் அடுத்த இலக்காக ஹிக்மா மாறிவிட அதே கலகலப்புடனே அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.

"மிச்சம் கலாய்ச்சி அநியாயத்துக்கு எனர்ஜிய வேஸ்ட் பண்ணாதிங்க.. ஞாபகமிருக்கட்டும்!
லாஸ்ட் டைம் ரிஸ்லா மேலதான் விழுந்திச்சி பட் இப்ப நாங்க மஹீஷாட மெஹெந்திக்கு வந்திருக்கம். எங்கவீட்ல இதுவரைக்கும் எந்த மாப்பிள்ளையும் பேசி முடிக்கல. இப்போதைக்கு உங்களுக்குலாம் மெஹெந்தி சாப்பாடு போடுற ஐடியாவும் எனக்கில்ல. ஸோ இன்னைக்கே நல்லா சாப்பிட்டுகோங்க!" என்று கூலாக சொல்லிவிட்டு சாப்பிட தயாரானாள் ஹிக்மா.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now