"அப்ப ஒரு போன்பண்ணி வரமுடியாதுன்னு சொல்லி இருக்கலாமே. உனக்காக நாங்க சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருப்போம்னு தெரியாதா?"

"ஆஹ்! எனக்கு அது ஞாபகம் வரல" என விட்டேற்றியாக வந்த அவனது பதிலில் அவரது பொறுமை கரைய

"ஓஹோ! அப்டியா!? வீட்டுக்குள்ள வரும்போது ஸலாம் சொல்ற பழக்கவழக்கந்தான் மறந்து போச்சுனு நினைச்சன். இப்பத்தான் விளங்குது பெத்த உம்மா வாப்பவும் மறந்துபோச்சுனு" என்று வேதனையுடன் சொல்ல

"நான் அப்படி சொல்லல. நீங்களா அப்படி நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல "

"பெத்தவங்களுக்கு நல்லா மரியாதை குடுத்துப்பேச பழகியிருக்க ரய்யான்!" என விரக்தியுடன் மொழிந்தார் இஸ்மாயில்.

"வாப்பா ப்ளீஸ்..! இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சினை?!"

"நீ சாப்பிடவரல்லனு உங்க உம்மா இன்னும் சாப்பிடாம பட்டினி கெடக்குறா. நீ எவ்வளவு ஈஸியா சொல்ற மறந்துட்டனு"

ஆயிஷா அறையில் இருந்தவாறே வெளியில் நடந்து கொண்டிருக்கும் உரையாடலுக்கு செவிசாய்த்து இருந்தார். கண்களில் கண்ணீரோடு.

"நான் யாரையும் எனக்காக வெயிட்பண்ண சொல்லவுமில்ல! பட்டினியிருக்க சொல்லவுமில்ல! இன்னொரு விஷியம் இனிமேல் யாரும் வெயிட்பண்ணி பட்டினி கெடக்க தேவையுமிருக்காது" என்று நிறுத்தி தந்தையை நேராக நோக்கி
"நான் நாளன்னைக்கு போரின் போறேன்" என்றுரைத்து விட்டு அதற்குமேல் அங்கே நிற்கப்பிடிக்காமல் விறுவிறுவென அறைக்கு விரைந்தான்.

ஓராயிரம் இடிகள் ஓரேசமயத்தில் தலையில் விழுந்து தாக்கியதுபோல துவண்டார் ஆயிஷா. அவர்மனம் அவன் சொல்வது பொய்யாக இருந்துவிடாதா என ஏங்கியது.

இஸ்மாயிலுக்கும் ரய்யானின் அதிரடி முடிவில் அதிர்ச்சிதான். எனினும் அவனின் பிடிவாதம் தெரியுமென்பதால் அவர் அவனை தடுக்க முற்படவில்லை. ஆனால் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை இப்படி அவசரப்பட்டு எடுக்கிறானே என்ற வருத்தம் மட்டுமே அவருக்கு.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Donde viven las historias. Descúbrelo ahora