ரெண்டு பேரும் பிடிவாதம் பிடிச்சு அவங்கவங்க நிலைல இருந்து இறங்கிவராம விட்டுக்குடுக்காம அனுசரிச்சு போகாட்டி வீட்டில எந்தநாளும் சண்டைதான் வெடிக்கும். இவனுக்கு வர்ற கோவத்துக்கு அந்த புள்ள பொறுத்து போறவளா தெரியலை" ஆயிஷா தன் மனதில் உள்ளதை இஸ்மாயிலிடம் கொட்ட

"அதெப்படி ஆயிஷா அந்த புள்ள அப்படி நடந்துக்க மாட்டான்னு சொல்ல முடியும்..?"

"ஏனோ தெரியலை எனக்கு அவள்மேல் ஒரு நம்பிக்கை வரல. இந்த காலத்து பிள்ளைகள் எல்லா விஷியத்துலையும் டக்டக்குனு முடிவு எடுத்துர்றாங்களே தவிர
அந்த முடிவ கடைசி வரைக்கும் சரியா பேணுறதுக்கு முயற்சிக்குறதில்ல...

நெனைச்ச உடனே கல்யாணம்..
ஒத்து போகலையா அடுத்து டிவோர்ஸ்னு போயிர்றாங்க...
அப்படியொரு நிலமை நம்ம மகனுக்கு வரக்கூடாதுனுதான்
அந்த பொண்ணு வேணாம்னு சொல்றேன்.."

"எனக்கு புரியிது! நீங்க ஒரு உம்மாவா யோசிக்குறீங்க. அது போல அவனும் யோசிக்காம முடிவு எடுத்திருக்க மாட்டான். இப்பவே எதுவும் டிசைட் பண்ணாம ரியாஸ் சொல்றதுபோல விசாரிச்சித்தான் பார்ப்போமே. ஒரு வேளை நீங்க எதிர்பார்க்குற மாறி எல்லாம் ஓகேவா இருந்தா கலியாணத்துக்கு உங்களுக்கும் சம்மதம்தானே? ஸோ கொஞ்சம் பொறுமையா இருப்பம்!"

"எனக்கு தெரியும் நீங்க எப்பவும் உங்க மகனுக்கு தான் ஸப்போர்ட் பண்ணுவீங்க" ஆயிஷா கோபித்துக் கொள்ள

"ரியாஸ் சொன்னது சரிதான்.. நீங்களும் சின்ன புள்ளதான்!" வேண்டும் என்று மனைவியை சீண்ட

"போதும்! பேசாம படுங்க" என்று கணவனுக்கு கட்டளையிட்டு மறுபுறம் திரும்பி படுத்துக்கொள்ள இஸ்மாயில் மனைவியின் செய்கையில் சிரித்தபடி விழிகளை மூடினார்.

***

ஒரு வாரம் சென்று ரியாஸ் விசாரிக்க சொன்ன நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் பெரிதாக விளாவாரியான விளக்கம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அந்த பெண் உங்கள் குடும்பத்திற்கு எந்த வகையிலும் பொறுந்த மாட்டாள் என்பதை மட்டும் தெளிவாக சொல்லி விட்டார்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now