முதலாளியின் வண்டியை பார்த்ததும் காவலாளி வந்து நுழைவாயிலை திறந்து விட வண்டி உள்ள நுழைந்தது.

தோட்ட பராமரிப்பாளரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு மகனுடன் தோட்டத்துக்குள் நடந்தார்.

அங்கிருந்த மிளகு கொடியில் இருந்த சில மிளகு மணிகளை உதிர்த்து அதன் முதிர்ச்சியை ஆராய்ந்த படி
"என்ன விஷயம் ரய்யான்..?" என்று மகனை ஏறிட

"வாப்பா.. அது எனக்கு ஒரு கேர்ளை புடிச்சிருக்கு. ஐ டீப்லி லவ் ஹெர்.." எந்த தயக்கமும் இன்றி நேரடியாக விடத்தை கூற

மகனைப் பற்றி தெரியும் என்பதால்
"ஓகே..அந்த புள்ளைக்கு?"

"அவளும் தான்.. அவங்க வீட்லயும் நான் பேசிட்டேன்.. அவங்களுக்கும் ஓகே தான் " இஸ்மாயில் புருவங்கள் ஏறியிறங்க "ஓஹ்!" என்றுவிட்டு

"உங்க உம்மாக்கு இது தெரியுமா? அவ என்ன சொன்னா?"

"உம்மாகிட்ட இன்னும் சொல்லல வாப்பா.. உங்ககிட்ட தான் முதல்ல சொல்றேன்.."

"என்ன!? எப்பவும் உம்மா தானே பர்ஸ்ட்.. இதுல மட்டும் என்னாச்சு? "

"உம்மாகிட்ட சொல்றதுல ஒரு ப்ரொப்லமும் இல்ல வாப்பா.. ஆனால் !" என நிறுத்த

"ஆனா என்ன?! எதுல ப்ரொப்லம்..?" மகனின் தயக்கத்தை பார்த்து கேட்க

"எனக்கு இப்பவே நிகாஹ் செய்யனும்..." என்றான்.

"அதுக்கென்ன?!!
எல்லாம் ஓகேன்னா அடுத்தது கலியாணம்தானே.உன் நாநா கலியாணம் முடிஞ்சதுமே ஆயிஷா உனக்கு பொண் தேட ஆரம்பிச்சிட்டா. நீ விஷியத்த சொன்னா
உடனே அடுத்த மாசமே கலியாணத்துக்கு டேட் பிக்ஸ் பண்ணிலாலும் பண்ணிடுவா.." என்றார் மகனை பார்த்து சிரித்தபடி. ஆனால் மகனின் முகம் அந்த சிரிப்பை பிரதிபலிக்கவில்லை.

"ரய்யான் !" என அவனது தோளை பிடிக்க

"பிரச்சினையே அதான் வாப்பா..
அவ படிச்சிட்டிருக்கா.கோர்ஸ் கம்ப்ளீட் பண்ண மினிமம் இன்னும் ஒன்னரை வருஷமாவது ஆகும்..
இப்ப நிகாஹ் மட்டும் பண்ணிட்டு ரெண்டு வருஷம் கழிச்சி கலியாணம் பண்ணனும்னு அவங்க வீட்ல ரிக்வெஸ்ட் பண்றாங்க..." அனைத்தையும் கூறினான். இஸ்மாயில் எதுவும் சொல்லாது அமைதி காத்தார்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now